Wednesday, April 12, 2023

அனுமனுக்கு வைகுண்டம் எது தெரியுமா?🙏🙏🙏

அனுமனுக்கு வைகுண்டம் எது தெரியுமா?🙏🙏🙏
ஸ்ரீராமர் பூமியில் தோன்றிய காரணங்கள் நிறைவேறி விட்டன. ராமருடன் வந்த லட்சுமணன் தன் இருப்பிடம் சேர்ந்துவிட்டான்.

சீதா தேவியாக பிறவி எடுத்த லட்சுமி தேவியோ, ராமருக்கு முன்பாகவே வைகுண்டம் சென்று காத்திருக்கிறாள். ஆனால் ஸ்ரீ ராமரால் காலதேவன் கேட்டுக் கொண்டதன் படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன் பிள்ளைகளுக்கும் மற்ற சகோதரர்களின் வாரிசுகளுக்கும் பிரித்து கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ஸ்ரீராமருடன் புறப்பட தயாரானார்கள்.

ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. என்ன காரணம்? சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான். பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார். ஒரு நாள் ராமருடன் அனுமன் பேசிக்கொண்டிருந்தார். அனுமன் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது.

உடனே இராமர் அனுமனை நோக்கி. அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார். அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார். ஆனால் மோதிரமோ நழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.

இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே விழுந்து விட்டது. பாதாள லோகத்தில் கதவும் மூடிக்கொண்டது. மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமான் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.

அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான். அப்படியா என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன் பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன் மோதிரத்தை எடுத்துச் செல் என்று அனுமனிடம் கூறினான். அனுமனும் பாதாள அறைக்குள் நுழைந்தான் ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆம் அந்த அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான்.

காலதேவன் கூறினான். அனுமனே இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும். அப்போது பிரம்மா விஷ்ணு லட்சுமி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த பிறவியின் செயலை நிறைவேற்றுவார்கள் பின் மறைவார்கள் அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன் செல்லவோ முடியாது.

அனுமனே நீ ராமருடன் இருக்கிறாய் ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ராமர் தன் மோதிரத்தை தவற விட்டார். கால சுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் இருப்பிடம் செல்வாயாக என்று காலதேவன் அறிவுறுத்தினான். பிறப்பு - இறப்பின் மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான்.

இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.

ஸ்ரீராமன் அனுமனை அழைத்தார். அனுமா உனக்கு ஒரு உரிமை தருகிறேன். உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியிலிருந்து செல்லும்போது நீ என்னுடன் வரலாம். என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.

அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் யோசித்தான். பிரபு தாங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் கூறுங்கள். ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் ராமனாக - என் பிரபுவாக இருப்பீர்களா? இல்லை அவதார புருஷன் விஷ்ணுவாக இருப்பீர்களா? என அனுமன் கேட்டான்.

ஒரு நிமிடம் திகைத்தார் ராமர். என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லட்சுமி தேவியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர். அனுமனோ தயக்கமின்றி பிரபு, எனக்கு ஸ்ரீராமன் போதும் உங்களை ராமனாகவும் அன்னையை சீதாபிராட்டியாகவும், மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாவே வணங்க விரும்புகிறேன்.

நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன் உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் அருளினால் போதும் என்றான் அனுமன். பகவான் ஸ்ரீ ராமர் அனுமனின் பக்தியைப் மனம் சிலிர்க்க எண்ணி அனுமனுக்கு ஆசி வழங்கினார்.

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸகஸ்ர நாம தஸ்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!!...

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் 

ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்அனுமனுக்கு வைகுண்டம் எது தெரியுமா?🙏🙏🙏

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...