Wednesday, April 5, 2023

நெல்லிவனநாதர் திருக்கோவில்.இறைவன் - நெல்லிவனநாதர்இறைவி - மங்களாம்பிகை

நெல்லிவனநாதர்  திருக்கோவில்.

இறைவன் - நெல்லிவனநாதர்
இறைவி - மங்களாம்பிகை.
ஊர் - திருநெல்லிக்கா.
மாவட்டம் - திருவாரூர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 117 வது சிவத்தலம் ஆகும்.

வயல்களுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது. 
கோயிலைச் சுற்றி நீரோடைகளும் சோலைகளும் அமைந்துள்ளன. 
கோயில் மேற்குநோக்கி உள்ளது. எண்பது அடி உயரமுள்ள ராஜகோபுரம் ஐந்து கண்களையும் ஐந்து கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஆண்டு தோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும்,மாசி மாதம் 18-ம் தேதி முதல் ஓரு வார காலத்திற்கும் மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது படுகின்றது.

பிறத்தல், தரிசித்தல், நினைத்தல், இறத்தல் முதலியவைகளால் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் புண்ணிய
பயன்கள் அனைத்தும் இங்கு இந்த ஒரே தலத்தில் அனைத்தும் கிடைத்து விடுவது ஐதீகம்.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலை மார்க்கத்தில் நால்ரோடு என்னும் இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...