Manakkarambai sivan temple
மணவாளன் எனும் குறுநில மன்னன், கள்ளர் இன மாந்தாதா மரபில் வந்தவன். மணக்கரை,மணக்கரம்பை, மணக்காடு, என்ற ஊர்களை உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் மரபினர் மணவாளன் என்ற பட்டம் கொண்டனர்.
தஞ்சையின் வடக்கில் திருவையாறு சாலையில் 7 கிமி தூரத்தில் உள்ளது மணக்கரம்பை. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்கள் அம்மன்பேட்டை, அரசூர், மணக்கரம்பை, பள்ளியக்கிரகாரம் ஆகியவை.
இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன்கோயில் உள்ளது. கோயிலின் முகப்பில் பெரிய அரச மரம் ஒன்றுள்ளது அதன் கீழ் ஒரு விநாயகரும், நாகரும் சிறிய நந்தி ஒன்றும், சிதைவடைந்த அம்பிகை சிலை ஒன்றும் உள்ளன.
இறைவன் – காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி
இறைவன் கிழக்கும் இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளனர் லிங்க மூர்த்தி நடுத்தர அளவில் உள்ளார். காசியில் இருந்து வந்த லிங்கம் என சொல்லப்பட்டாலும், அவ்விதம் இருக்காது என்றே தோன்றுகிறது.
முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது, இந்த மண்டபத்தில் கருவறை வாயிலில் பெரிய விநாயகர் சிலை உள்ளது மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார், இந்த மண்டபத்தின் வெளியில் வாயில் படி அருகில் ஒரு பெரிய விநாயகர் உள்ளார் மற்றும் சிறிய விநாயகர் சிறிய முருகன் சிலைகளும் உள்ளன.
தென்கிழக்கில் ஒரு லிங்கமும் மூன்று லிங்க பாணங்களும் உள்ளன. வடகிழக்கில் பைரவர் சூரியன் சனி ஆகியோரும் நவக்கிரக மண்டபமும் உள்ளன. முகப்பு மண்டபத்தின் நேர் எதிரில் ஒரு நந்தி மண்டபம் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். வடக்கில் சண்டேசர் சன்னதியும் உள்ளது.
அமைதியான கிராம சிவாலயம் பெரியதொரு கோயிலின் மீதம் இது என தோன்றுகிறது.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.
No comments:
Post a Comment