Monday, July 17, 2023

வராஹி அம்மாளை மனதால் நினைத்து 2 மண் அகல் விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்றி வாராவாரம் பிரார்த்தனை செய்யுங்கள்

_வராஹி அம்மன் வழிபாடு_

தொழில் நஷ்டம், கடன் தொல்லை, புதிய தொழில் தொடங்க தடை இப்படி பணக்கஷ்டம் தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் வராஹி அம்மனை நாடினால் அவையெல்லாம் மறைந்தே போகும். கடனில் மூழ்கியவர்களை ஆதரவாய் கரம் நீட்டி அணைத்து கொள்வாள் வராஹி அம்மாள். அவளுக்கு உங்கள் கையால் இந்த பரிகாரங்களை செய்தாலே போதும். 

இரண்டு பரிகாரங்கள்

இந்த பரிகாரத்தை நம் வீட்டு பொருள்களில் செய்துவிடலாம். வீட்டில் வளர்க்கும் புனித துளிசியும், ஏலக்காயும் தான் பரிகார பொருள்கள். இவை இரண்டும் மகாலட்சுமியின் அனுக்கிரகம் உள்ள பொருள்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் வராஹி அம்மனுக்கு ஏலக்காய் மாலையை கட்டி அணிவிக்கவேண்டும். 

*வராஹி அம்மனுக்கு பரிகாரம்* 

வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று வாராஹி அம்மனுக்கு இந்த பரிகாரம் செய்யலாம். உங்களுடைய கைகளால் ஏலக்காய் மாலையை கோர்த்து அதனை அம்மனுக்கு போட்டு வணங்கி வர வேண்டும். வீட்டுக்கு பக்கத்தில் வாராகி அம்மனின் கோயில் இருந்தால் அங்கு போய் ஏலக்காய் மாலையை உங்கள் கைகளால் கொடுங்கள். 

வராஹி அம்மாளை மனதால் நினைத்து 2 மண் அகல் விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்றி வாராவாரம் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பரிகாரம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி வீட்டில் நிம்மதி நிலைக்கும். ஒரு சில நாள்களில் கடன் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். வாரஹி அம்மன் கோயில் அருகில் இல்லாவிட்டால் வீட்டில் உள்ள வராஹி அம்மன் திருவுருவ படத்திற்கு அல்லது உருவ சிலைக்கு ஏலக்காய் மாலை போட்டு வழிபடலாம்.

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...