Monday, July 10, 2023

ராகு - #கேது பற்றிய தகவல்கள்: -

#ராகு - #கேது பற்றிய தகவல்கள்: - 
#ராகுகாலம், #எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. அவசியம் படிக்கவும்.

நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? இதை முழுவதும் படித்து தெரிந்து கொள்வோம்.

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலம் என்று சொல்வதில்லை !!! 

 கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். 

#மேஷம் முதல் #மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. 

இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். 

ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

 வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்;

 அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.

சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.

மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். 

சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை என்கிறோம்.

அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். 

அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. 

அந்த காலத்தில் சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும்.

 அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள்.

ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். 

ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. 

கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு.

 ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், 

கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.

 மேலும் இவர்கள் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆவார்கள்.

 மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; 

தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.

ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை

#  நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்

# மலர் மந்தாரை செவ்வல்லி

# ரத்தினம் கோமேதகம் வைடூரியம்

# சமித்து அறுகு தர்ப்பை

#  தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி

# தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்

 # ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்

# திசை தென்மேற்கு வடமேற்கு

# வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்

#. வாகனம் ஆடு சிங்கம்

#  தானியம் உளுந்து கொள்ளு

#. உலோகம் கருங்கல் துருக்கல்

#. காலம் ராகுகாலம் எமகண்டம்

#  கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை

# பிணி பித்தம் பித்தம்

#. சுவை புளிப்பு புளிப்பு

#, தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்

# நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்

#தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
#
 மனைவி சிம்ஹிகை சித்ரலேக.

# உப கிரகம் வியதீபாதன் தூமகேது

#. உருவம் 
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,

No comments:

Post a Comment

Followers

கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள்

*கார்த்திகை மாத சோமவாரம் சிறப்புகள்*  *சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்  பொற் பாதங்கள் சரணம்*  *கார்த்திகை மாத தி...