புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வணங்க வேண்டிய
பரிகார தலம்
திருப்பராய்த்துறை
திருப்பராய்த்துறை என்ற ஊரில் எழுந்து அருள்பாலிக்கும் பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்) சுவாமியை வணங்கினால் புற்று நோய் குணமாகும் .
தல வரலாறு :
முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது . இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்ற ஆணவமும் அவர்கள் மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள் கற்புக்கரசிகள் என்று அகங்காரம் கொண்டிருந்தனர் .
சிவனும் மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர் . சிவன் காண்போரை கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்தி கொண்டார் .
மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி என்னும் பெண்ணாக மாறினார் .
இருவரும் தாருகாவனம் வந்தனர் . ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர் .
சிவனது பேரழகை கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர் .
தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதை கண்ட ரிஷிகள் வந்திருப்பது எதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டு செல்லும்படி விரட்டினர் .
இருவரும் செல்ல மறுத்தனர் . கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர் . அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை .
அவர்கள் ஏவிய விலங்குகளையும் ஆயுதங்களையும் தன் உடலில் ஏந்திக்கொண்டார் சிவன் .
சிவனை அழிக்க முடியாமல் மஹரிஷிகள் கலங்கி நின்றனர் .
சிவன் அவர்கள் முன்பாக பேரழகனாக காட்சி தந்தார் . உண்மை உணர்ந்த மஹரிஷிகள் தன் தவறை உணர்ந்து மண்ணுக்கும்படி வேண்டினர் .
சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார் .
பிரார்த்தனை :
பராய்த்துறை நாதரை வணங்கிட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பதும் பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும் என்றும் இங்கு வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை .
நேர்த்தி கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி - அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் .
No comments:
Post a Comment