Tuesday, July 4, 2023

வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்செழிக்கும்.

*🌙 ஓம் நமச்சிவாய வாழ்க*
சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் சிவனுக்குகந்த பஞ்ச பத்திரங்கள் (இலைகள்) பற்றி தெரிந்து கொள்வோமா!

. வில்வம் 
2. நொச்சி
3. முட்கிளுவை
4. விளா
5. மாவிலங்கை
6 மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள் (இலைகள்) 

பொதுவாக " வில்வம் ' இருக்கும் இடத்தில் செல்வம்
செழிக்கும். 

ஒரே ஒரு வில்வத்தை
உள்ளன்புடன் சிவபெருமானுக்குச்
சமர்ப்பித்தால் மூன்று பிறவிகளில் செய்த பாவம் தீரும் என்கிறது வில்வாஷ்டகம்.

கூவிளம் என்று இலக்கியங்களில் குறிக்கப் பெறுவது வில்வம். 

இதனுடன் இன்னும்
நான்கு இலைகளையும் சேர்த்து ஐந்து இலைகளைப் பஞ்ச வில்வம் என்பர். 

கூவிளம் [வில்வம்], நொச்சி, கிளுவை, மாவிலங்கம்,
விளா என்பவை அவை.

*பஞ்சமுக அர்ச்சனை:*

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.

கிழக்கில் உள்ள முகம் தத்புருஷம். தெற்கில் உள்ளது அகோரம், 
மேற்கில் உள்ளது சத்யோஜாதம், 
வடக்கில் உள்ளது வாமதேவம்.
மேலே ஒரு முகம் உண்டு. 
அது ஈசானம் எனப்படும். 
இந்த ஐந்து முகங்களில் இருந்து
கூவிளம்[வில்வம்], நொச்சி, கிளுவை,மாவிலங்கம், விளா என்பவை தோன்றின. 

அது பஞ்ச வில்வங்களாயின என்பது
வில்வமகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ள
செய்தியாகும்.

சிவபெருமானுக்கு 
விசேஷ அர்ச்சனை
பஞ்சமுக அர்ச்சனையாகும். 

ஒரே சமயத்தில் 5
சிவாச்சாரியர் 5 வகையான பஞ்ச
வில்வங்களைக் கொண்டு பூஜிப்பர். 

ஒரு முகத்துக்கு ஒரு இலை. 

இறுதியில் ஐந்து வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைத்து ஐந்து சிவாச்சாரியர்களும்
ஒரே சமயத்தில் தீபாராதனை செய்வர். 

இது பஞ்சமுக அர்ச்சனை எனப்படும்.

இந்த பஞ்சமுக அர்ச்சனை நிகழ்வில்
ஐந்தடுக்கு தீபத்தில் தீப ஆராதனை
செய்வார்கள்.

சிவலிங்க மூர்த்தியில் முகம்
இல்லாவிட்டாலும்
சிவப்பரம்பொருளின் ஐந்து
முகங்களை பாவனையால் 
நோக்கி இந்த அர்ச்சனை செய்யப்படுகிறது.

இதைப்போலவே பஞ்சமுக
விநாயக மூர்த்திக்கும்
பஞ்சமுக அர்ச்சனை
செய்யப்படுகிறது

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;

திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;

திரிஜன்ம பாப சம்ஹாரம்

ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்கிறது வில்வாஷடகம்.

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம் இவைகளை கொண்டு திங்கள் கிழமைகளில் சிவ பெருமானை அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகுவதுடன் அனைத்து இடர்களினின்றும்
நம்மை காப்பார் என்று கூறப்படுகிறது. 

பஞ்ச வில்வங்கள் எனப்படும் வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம்  ஆகியவை.

No comments:

Post a Comment

Followers

கூத்தாண்டவர் கோவில் கூவாகம் பற்றிய பதிவுகள்....

அருள்மிகு கூத்தாண்டவர் கோவில் கூவாகம் பற்றிய பதிவுகள் :* திருநங்கைகளுக்கென்று புகழ் பெற்ற பல புண்ணிய ஸ்தலங்கள் இருப்பினும் விழுப...