தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வர சுவாமி...!
வைத்தீஸ்வரன் கோவிலில் கடவுளை மருத்துவராகவே மக்கள் கருதி வணங்குகிறார்கள்.
தீராத நோய்களை, வினைகளை தீர்ப்பவராக கருதுகிறார்கள். இது நவகிரக ஸ்தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒரு முறை செவ்வாய் கிரகத்தின் அதிபதிக்கு தொழு நோய் ஏற்பட்ட து என்றும். அந்த நோயை வைத்தீஸ்வர நாதர் தான் தீர்த்தார் என்றும் வரலாறு சொல்கின்றது.
மேலும் திருநாவுக்கரசருக்கு வயிற்று வலி இருந்த போது இந்த பெருமானை வணங்கியே அதிலிருந்து மீண்டார் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
வைத்தியநாத சுவாமியின் உமையாளாக இங்கே தையல் நாயகி அம்மன் எழுந்தருளியுள்ளார். அவர் கையிலிருக்கும் அருமருந்தான புனித எண்ணெய் கொண்டு தீராத கொடும் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
இராமர், இலக்குமன் மற்றும் சப்த ரிஷிகளும் இங்கே வந்து பகவானை வழிபட்டதாக குறிப்புகள் உண்டு.
ராவணனால் வதம் செய்யப்பட்ட ஜடாயுவிற்கு இங்கே தான் இறுதி சடங்குகளை ராமனும் லக்ஷமணனும் செய்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கான சான்றாக இங்கே ஜாடயு குளம் உண்டு. இங்கே தன்வந்த்ரிக்கென பிரத்யேக கோவிலும். இங்கே இருக்கும் முருகன் முத்துகுமார சுவாமி என அழைக்கப்படுவதும் தனிச்சிறப்பு.
இங்கு வழங்கப்படும் விபூதி அல்லது திருச்சாந்து உருண்டை மிகவும் மருத்துவ குணங்கள் உடையதாக கருதப்படுகிறது. காரணம் இவை ஹோம குண்டத்திலிருந்து உருவாக்கப்பட்டவை.
ஆட்பட்ட நோய்களிடமிருந்து குணமடைய, இங்கே வரும் பக்தர்கள் மிளகு, உப்பு, மற்றும் வெல்லத்தை கடவுளுக்கு அர்ப்பணித்து வழிபடுகின்றனர்.
மேலும் வெள்ளியால் வேயப்பட்ட உடல் உறுப்புகளை அர்ப்பணிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பரப்பளவில் இருக்கும் பெரிய கோவில்களை வரிசைப்படுத்தினால் வைத்தீஸ்வரன் கோவிலுக்கென்று தனியிடம் உண்டு.
அதுமட்டுமின்றி இந்த கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு என்பது இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்கப்படும் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடம் என்பதை தமிழகம் முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்பிய பெருமை இந்த பண்டிதர்களையே சாறும்.
முன்னொரு காலத்தில் தேவரிஷிகளிடமிருந்து அந்த கலையை கற்றவர்கள் வழி வழியாக வந்தர்கள் இந்த பகுதியிலிருந்து அதனை பின் தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது .
No comments:
Post a Comment