Wednesday, July 19, 2023

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்*

*திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்*
 சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்று தேவாரப்பாடல் பெற்ற இத்தளம் திருவாசகத் தலங்களில் ஒன்றாகும் 

இத்தளம் வேதமே மலையாய் இருப்பதால் வேதகிரி எனப் பெயர் பெற்றது வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன வேறு பெயர்களாகும் 

மலைமேல் ஒரு கோயில் ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது இவை முறையே திருமலை தாழக்கோயில் என்று அழைக்கப்படுகிறது 

500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்கிறது எனவே திருக்கழுக்குன்றம் என்று பெயராயிற்று 

தாழக்கோயில் இறைவனை வழிபட பாத்திரம் இன்றி மார்க்கண்டேயர் தவிக்க இறைவன் இங்கு உள்ள குளத்தில் சங்கை உற்பத்தி செய்து கொடுத்ததாக வரலாறு அது முதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாக சொல்லப்படுகிறது 

அம்பாள்  திரிபுரசுந்தரி மார்பில் ஸ்ரீசக்கர பதக்கம் சாத்தப்பட்டு உள்ளது. ஆண்டின் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் நடைபெறுகிறது. நாள்தோறும் பாத பூஜை மட்டுமே செய்யப்படுகிறது. 

இங்கு பைரவர் வாகனம் இன்றி உள்ளார் 

பிரகாரத்தில் ஆத்மநாதர் சன்னதி உள்ளது இதில் பீடம் மட்டுமே உள்ளது பானம் இல்லை எதிரில் மாணிக்கவாசகர் சன்னதி உள்ளது மாணிக்கவாசகருக்கு இறைவன் குரு வடிவாய் காட்சி கொடுத்தருளிய தலம் அப்பெருமான் வாக்கிலும் திருவாசகத்திலும் இத்தலம் இடம்பெற்றுள்ளது 

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது.

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...