Wednesday, September 6, 2023

கஷ்டங்கள் நீங்கி, நன்மையை தரும்... பைரவர் வழிபாடு...!!

 தேய்பிறை அஷ்டமி...

கஷ்டங்கள் நீங்கி, நன்மையை தரும்... பைரவர் வழிபாடு...!!
அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள்.

காலபைரவரின் சிறப்புகள் :

காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள்.

அந்தகாசுரனை அழிக்க அவதாரம் எடுத்தவர் பைரவர். சிவபெருமா னுடைய 64 வடிவங்களில் ஒரு வராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.

இவருடைய உடம்பில் நவகிரகங் களும், 12 ராசிகளும், 27 நட்சத்தி ரங்களும் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. காலத்தை தாண்டி வெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர் காலபைரவர் ஆவார். 

சனீஸ்வரரின் குரு, பைரவர் என் பதால் பைரவரை வணங்கினால் சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும்.

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.

தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

காலபைரவரை வழிபடும் முறை :

தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

பைரவருக்கு மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது.

பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொண்டால் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் தீர்வு கிடைக்கும்.

காலபைரவரை வழிபட கிடைக்கும் நன்மைகள் :

காலபைரவரை வழிபட்டால் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி விடும், எவ்வளவு பெரிய கடன் களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.

சனியின் தாக்கம் தீரும்.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.

பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.

நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம் :

ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

நன்றி
இனியகாலைவணக்கம்
வாழ்கவளமுடன்

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...