Thursday, September 7, 2023

சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் அதுதான் உலகின் தாய் தர்மம்.

நமது பாரத பூமியில் சனாதன தர்மம் 
இருந்த காலமே
வைகுண்டம் எனப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்ந்த காலம்
 
5000 ஆண்டுகளுக்கு முன் நமது பாரத பூமியில் 
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பிஞ்சு பாதங்கள் பதிந்திருந்த காலகட்டம் அது. அவர் வாழ்ந்த அந்த தர்மமே சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்டது. 

அந்த சனாதன தர்மம் எங்கிருந்தது என்றால் வைகுண்டம் எனப்படும் சொர்க்கத்தில் வாழ்ந்த தெய்வீக மனிதர்களின் தர்மமே சனாதன தர்மம் என அழைக்கப்பட்டது. இந்த சனாதன தர்மம் தான் உலகில் தோன்றிய முதல் தர்மம். சனாதன தர்மம் சுயம்புவாக உருவாகவில்லை. 

அதர்மத்தை அழித்து தர்மத்தை படைக்கும் தந்தை ஜோதியான பரமாத்மா சிவன் கலியுக இறுதியில் ஞானத்தை கற்பித்து அந்த ஞானத்தின் வழிப்படி நடந்த ஆத்மாக்களுக்காக கலியுகத்தை அழித்து தர்மம் நிறைந்த உலகத்தை பூமியில் ஸ்தாபித்தார். 

எப்படி புத்தர் வருவதற்கு முன் புத்த தர்மம் இல்லையோ,. மகாவீரர் வருவதற்கு முன் ஜெயினம் இல்லையோ, அது போல தந்தை சிவபெருமான் இந்த உலகத்தில் வரவில்லை என்றால் சனாதன தர்மமும் இல்லை. 

சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. ஏனென்றால் அதுதான் உலகின் தாய் தர்மம். சனாதன தர்மத்தின் இளவரசன் ஸ்ரீ கிருஷ்ணன் அவர் மன்னர் ஆனதற்கு பிறகு அரியணையில் அமர்ந்த பின் 
ஸ்ரீ நாராயணன் என்ற பெயர் அவருக்கு. சனாதன தர்மம் என்பது சொர்க்கமாகும். அந்த சொர்க்க பூமியில் ஒரே தர்மம் ஒரே மொழி ஒரே ராஜ்ஜியம் மட்டுமே இருந்தது. அந்த இராஜ்யத்தில் வாழ்ந்தவர்களை 
நாம் இப்பொழுது கோவில்களில் சிலைகளாக காண்கின்றோம். 

ஆனால் இவர்கள் யார் எங்கிருந்தார்கள் என்பதெல்லாம் தந்தை சிவபெருமான் வந்து ஞானம் கொடுத்தாலே ஒழிய யாருக்கும் தெரிய வராது. தந்தை சிவன் வரும் பொழுது உலகம் அஞ்ஞான இருள் சூழ்ந்து உள்ளது. அதனால் தான் சிவன் ராத்திரியில் வந்தார் என்று சொல்லி விட்டார்கள். 

அவர் வரும் பொழுது கோவிலில் போய் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். எதற்காக... அவர் வரும் பொழுது நமக்கு தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக. ஆனால் அவர் எப்பொழுது வருவார் இது யாருக்கும் தெரிவதில்லை. அவர் இந்த உலகிற்கு வருவதும் செல்வதும் அனுபவத்தால் உணரக்கூடிய விஷயமே தவிர கண்களால் காணும் விசயம் கிடையாது. 

ஒரு வேளை கண்களுக்கு கடவுள் தெரிந்தால் அவர் வந்த இடத்தில் உலக மக்கள் அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள். எனவே இது மனதால் உணர்ந்து அனுபவத்தால் அறிய வேண்டிய விஷயம் இதுவே ஞானம். 

எப்படி உங்களுடைய ஆத்மாவை நீங்கள் காண முடியாதோ ஆத்மாவை போன்றே ஜோதி வடிவமாக இருக்கும் மேலான பரமாத்மாவையும் இந்த ஊன கண்களால் காண முடியாது. அதற்கு அனுபவம் என்ற மனக்கண் தெளிவாக இருக்க வேண்டும். புத்தியில் எந்த ஒரு மாசும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் புத்தி என்பதும் ஒரு கண் தான். எப்படி வெளியில் இரண்டு கண்கள் இருக்கின்றதோ அது போல மனம் புத்தி என்ற இரண்டு கண்கள் ஒவ்வொரு மனிதருக்கும் சூட்சுமமாக உண்டு. மனதிலும் சரி புத்தியிலும் சரி மாயையின் தூசி என்பது இல்லாமல் இருக்க வேண்டும். 

உலகியலான இச்சை எனும் மாயைக்கு ஆட்பட்டிருந்தால் தேகம் எனும் பொய்ப் பொருள் தான் மெய்ப் பொருளாக தெரியும். ஞானம் நிறைந்த ஞானிக்கோ ஆத்மா என்பதே மெய்ப் பொருள்.தான் ஒரு ஆத்மா என்ற மெய்ப் பொருளில் நிலைத்திருந்து பரமாத்மா என்ற மெய்ப்பொருளின் நினைவில் மூழ்கி ஆனந்தம் அடைந்து கொண்டிருப்பவர்களே ஞானிகள். 

அப்படிப்பட்ட பரமாத்மா சிவன் இந்த உலகில் எந்த ஒரு தீய குணமற்ற எந்த ஒரு அசுத்தமற்ற எந்த ஒரு நோய் நொடியற்ற ஆரோக்கியம் மகிழ்ச்சி செல்வம் நிறைந்த உலகை பூமியில் ஸ்தாபிக்கின்றார். அதன் பெயர் தான் சொர்க்கம். சொர்க்கத்தை ஸ்தாபிக்க அதர்மம் நிறைந்த நரகத்தில் அவர் வர வேண்டியதாக இருக்கின்றது. 

இதைத்தான் யதா யதாகி தர்மஸ்ய என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். அவர் அதர்மத்தை அழித்த பிறகு பூமியில் படைக்கப்பட்ட தர்மமே ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்.  யார் ஸ்ரீ கிருஷ்ணனாக பிறந்து 
ஸ்ரீ நாராயணராக ஆகின்றாரோ அவரும் இந்த பிறவி சக்கரத்தின் இறுதியில் பிரம்மாவாக மாறுகின்றார். 

நம்முடைய ஆத்மா நமது உடம்பில் உள்ளது. அதுபோல பரமாத்மா பேசுவதற்கும் ஒரு மனித உடம்பு தேவைப் படுகின்றது. அந்த பரமாத்மாவின் வாகனம் தான் பிரம்மா. இந்த பிரம்மா மூலம் படைக்கப்பட்டதே சனாதன தர்மம். ஆக இங்கே இருக்கக்கூடிய பிரம்மா அங்கே ஸ்ரீ கிருஷ்ணராக ஆகின்றார். நாமும் கூட அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்ஜியத்திற்கு வர வேண்டுமானால் தந்தை பரமாத்ம சிவனை அனுபவம் என்ற மனக் கண்ணால் உணர வேண்டும். 

அதை உணர்த்துவது தான் இராஜயோகம். இந்த இராஜயோகம் ஆனது ஆத்மாவிற்காக பரமாத்மாவால் வழங்கப்பட்ட மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். தந்தை சிவன் முழு உலகத்தின் ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவதால் இந்த இராஜ யோகமானது முழு உலகின் ஆத்மாக்களுக்கும் பொதுவானது ஆகும்.ஏனென்றால் உடலுக்கு ஒரு தந்தை இருப்பதை போல உலக ஆன்மாக்கள் அனைவருக்கும் ஒரு தந்தை உண்டு.அவர் தான் தந்தை சிவன்.அவர் வழங்கியது தான் இராஜயோகம்.இதை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது தான் நாம் அவருக்கு கொடுக்கும் மரியாதையாகும். 

அதனால் தந்தை சிவபெருமானுடைய கட்டளையாவது எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக முழு உலகிற்கும் இந்த இராஜயோகம் அனைவரையும் சென்றடைய வேண்டும்  என்பதாகும். இந்த சேவைக்காகவே பிரம்மா குமாரிகள் மற்றும் பிரம்மா குமாரர்கள் தங்களது வாழ்க்கையை தந்தை ஈசனுக்கு அர்ப்பணித்து இருக்கின்றார்கள். எனவே நாம் அனைவரும் ஒரு யுக மாற்றத்தில் இருக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கவனத்தில் கொண்டு இராஜயோகத்தைக் கற்று நிகழ் காலத்தை அமைதியாகவும் எதிர்காலத்தை சுகமானதாகவும் மாற்றி கொள்ள வேண்டும். இதுவே தந்தை ஈசனின் விருப்பமும் ஆகும்.நல்லது. ஓம்சாந்தி வாழ்த்துக்கள்.

படித்ததில் மனம் கவர்ந்தது.

No comments:

Post a Comment

Followers

அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஆடையூர் திருஅண்ணாமலை

ஈஸ்வரனின் கருணையும், அகஸ்தியரின் ஆசியும் இருந்தால் மட்டுமே கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கோயிலுக்காவது செல்லும் பாக்கியம் வாழ்நாளில் கி...