Monday, September 25, 2023

எதிரிகளை நண்பர்களாக மாற்றும் அம்மன் வழிபாடு:

அம்மனுக்கு இந்த 1 பூவை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால், நேருக்கு நேர் நின்று போட்டி போட்டு, ஜெயிக்க முடியாத மறைமுக எதிரிகளை கூட ஜெயித்து வெற்றி காணலாம்.

எதிரிகள் என்றால் அந்த பட்டியலில் பல ரகம் உண்டு. வேலை செய்யும் இடத்தில் எதிரி, சொந்தத் தொழிலில் எதிரி, சொந்த பந்தங்களில் எதிரி, என்று எதிரிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதில் சில பேரை நம்மால் நேருக்கு நேர் நின்று போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. சில பேருக்கு குடும்பத்திலேயே உறவினர்கள் கூட எதிரியாக இருப்பார்கள். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் மாமியார், நார்த்தனார், மருமகன், மருமகள், யாராவது உங்களை வாழ விடாமல் எதிரியாக மாறி போட்டியிட்டு சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்களா. அவர்களை சரிப்படுத்தவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த பயமும் தேவை கிடையாது. எதிரிகள் அழிந்து போக மாட்டார்கள். எதிரிகளை நம் வசப்படுத்திக் கொள்ளலாம்.

நம்மை புரிந்து கொள்ளாமல் நம்மிடம் சண்டை போடும் எதிரிகள் நம்மை புரிந்து கொள்வதற்கு இந்த பரிகாரம் நமக்கு உதவி செய்யும். அது என்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எதிரிகளை நண்பர்களாக மாற்றும் அம்மன் வழிபாடு:
உங்கள் மீது எப்போதும் கடுகடன்னு கோபமாகவே இருக்கும் அந்த எதிரிகளை அடக்க செம்பருத்திப் பூ இருந்தால் போதும். ஒற்றை சிவப்பு நிற செம்பருத்தி பூ, அல்லது அடுக்கு செம்பருத்தி பூ. எதுவாக இருந்தாலும் சரி, சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்பூ நமக்கு தேவை.

உங்களால் எவ்வளவு செம்பருத்தி பூ வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு போய் அப்படியே அம்மன் கோவிலில் கொடுத்து, அம்மனுக்கு அலங்காரம் செய்ய சொல்லி விடுங்கள். எவ்வளவு செம்பருத்தி பூக்களை நீங்கள் அம்மன் கோவிலுக்கு கொடுத்து அம்மனுக்கு சாத்தி வேண்டுதல் வைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய எதிரிகளின் தொல்லையானது படிப்படியாக குறைய தொடங்கி விடும். வீட்டு பக்கத்தில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும் இந்த வழிபாட்டை நீங்கள் மனதார மேற்கொள்ளலாம்.

இந்தக் கிழமையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இத்தனை முறைதான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இதற்கு கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் இதை செய்ய முடியுமோ அப்போதெல்லாம் இந்த வழிபாட்டை செய்துவிட்டு அம்மன் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தொல்லை கொடுக்கும் அந்த எதிரி யார்? அந்த நபர் உங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது அந்த நபர் எப்படியாவது உங்களது நண்பர்களாக மாறிவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக குடும்பத்தில் இருப்பவர்களே எதிரியாக இருப்பார்கள் அல்லவா, அப்படிப்பட்டவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வர இந்த எளிமையான பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

எப்போது பார்த்தாலும் உங்களை திட்டிக்கொண்டு, நிம்மதியாக வாழவிடாமல் கூடவே இருந்து நச்சரிப்பவர்கள் எல்லாம் மனம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடுவார்கள். நல்லதுக்கு மட்டும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நன்மையே நடக்கும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...