Saturday, September 23, 2023

ராமா…..!!!

ராமா…..!!!
ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டும் உண்டு.

தாயான கௌஸல்யா மகனை ராமபத்ர என்று அழைத்து வந்தாள் .இது தாயின் வாத்ஸல்யம் நிரம்பியதாக உள்ளது.

சிற்றன்னை கைகேயி ராமச்சந்த்ர என்று அழைப்பாள் .குழந்தையாக இருந்தபோது ஸ்ரீ ராமன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது கைகேயி ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள்.இந்த காரணத்தினால் ராமச்சந்த்ர என்ற பெயர் பொருத்தமாக உள்ளது

ப்ரம்ம ரிஷிகளான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று அழைத்தார் .

அயோத்யா நகரத்து ப்ரஜைகள் எல்லோரும் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற அர்த்தத்தில் ரகுநாத என்று அழைத்து வந்தனர் .

ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள் .அப்படி அழைப்பதற்கு ஸீதாதேவிக்கு மட்டுமே உரிமை உண்டு.

மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று கூறி வந்தார்கள்.

அந்த ஸ்லோகம் : —

ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம :

இது மிகவும் ப்ரஸித்தமான ஸ்லோகம் .ஆனால் இந்த பத ப்ரயோகங்களில் இருக்கும் உள் அர்த்தம் மனதைத் தொடுவதாகும் .
இப்படிப்பட்ட ராமனுக்கு நமஸ்காரங்கள்.

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...