Monday, September 4, 2023

குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி

🌻 குழந்தை பாக்கியம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி🌺🌺
கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகும். எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.🌺🌺🌺 🙏🙏 ஹரேகிருஷ்ணா
கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
👶 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள 'தசம ஸ்காந்தம்" படித்தால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
👶 இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திக்கூர்மையுள்ள குழந்தை பிறக்கும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
👶 குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புத்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்கியம் மிக்க சற்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திரத்தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
👶 கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை கணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமாகும். பகற்பொழுது உபவாசம் இருந்து இரவில், கண்ணனது திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.
👶 குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள், பூஜை செய்யும் கிருஷ்ணர் படம் அல்லது கிருஷ்ணர் பொம்மையை மடியின் மீது வைத்துக்கொள்வார்கள். இப்படிச் செய்வதால் மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். கிருஷ்ணரை மடியில் வைத்துக்கொள்பவர்கள், பூஜை முடிந்ததும் கொஞ்சம் பால் அல்லது பால் பாயசத்தை கிருஷ்ணருக்கு ஊட்டிவிடுவது போல் பாவனை செய்துவிட்டு அந்தப் பிரசாதத்தை தம்பதியர் அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருஷ்ணரது அருளால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.
👶 கண்ணன் என்பது கிருஷ்ணருக்கு இன்னொரு செல்லப் பெயர் என்று சொல்வார்கள். நாம் பிறவிப்பயனை அடைவதற்கு 'சகலமும் நானே, சர்வம் கிஷ்ணார்ப்பனமஸ்து" என்று அருள்வாக்குச் சொன்னவன் கிருஷ்ணன். நான்கு திருக்கரங்களுடன் பிறந்த கிருஷ்ணன், நான்கு வேதங்களுக்கும் நாயகனாக விளங்குகின்றான். கருமை நிறத்துடன் பிறந்த கிருஷ்ணன், மூன்று உலகங்களுக்கும் ஞான ஒளி காட்டும் தீப பிரகாச வண்ணனாகக் காட்சி அருளுகின்றான்.
👶 கிருஷ்ணன் பிறப்பின் மகிமையைப் போற்றுவதோடு, அவனுடைய புகழைப் பாடி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி, நம் இல்லங்களுக்குக் குட்டிக் கண்ணனை வரவேற்போம்.
👶 அன்றைய தினம் 'ஹரே ராமா! ஹரே ராமா! ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா! ஹரே கிருஷ்ணா! கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே" என்று அவனது திருநாமத்தை வணங்கி பலன் பெறுங்கள்.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...