Monday, September 4, 2023

பல பெயர்களைக் கொண்ட கங்கை

பல பெயர்களைக் கொண்ட கங்கை நதி, மூல நதியை கண்டு பிடிக்க முடியாமல்
திணறும் விஞ்ஞானம்.
பல பெயர்களைக் கொண்ட கங்கை
இமயமலையின் பனி சூழ்ந்த கோமுகி என்னும் பகுதியே கங்கையின் பிறப்பிடம் என்கிறார்கள். அங்கே கங்கோத்ரி என்று பெயர் பெறுகிறது. இந்த இடம் மிகச் சிறிய சுனையாகத் திகழ்ந்தாலும் உண்மையில் இதன் பிறப் பிடம் யாரும் காண இயலாத நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கங்கை தோன்றும் இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. பக்தர்கள் இதைத்தான் தரிசித்து வழிபட்டு திரும்புகிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சியின்படி கங்கை, இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுட இணைந்த பின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது. கங்கை உற்பத்தியாகும் 
இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கை நதிக்கரையில் ஒரு கோவில் உள்ளது. அதன் பெயர் கங்கோத்ரி. 

இதுவே கங்கைக்கு முதல் கோவில் என்பர். அதையடுத்து சுமார் 250 கிலோமீட்டர் பயணித்து ஹரித்வாரை அடைகிறது. இங்கு கங்கை ஏழு கிளைகளாகப் பிரிந்து தன் பயணத்தை மேற்கொள்கிறது. கிழக்கு நோக்கி ஓடும் கிளைகள் ஹாலதினி, பவானி, நளினி என்று பெயர் பெறுகின்றன. 

அதன் பின், 785 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அலகாபாத் நகரை அடைகிறது.
இதற்கிடையில் கங்கை பல காரணப் பெயர்களையும் பெறுகிறது. அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானுடன் விளையாடும் போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டதாம். அந்த மையை சிவ பெருமான் கங்கையில் கழுவும் போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்ட தாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது.

கயிலையிலிருந்து மானசரோவர் வழியாக கங்கை நதி காளி போல் குதித்துக் கொண்டு செல்வதால் "காளிகங்கா' என்று பெயர் பெற்றது.
உத்திரப் பிரதேசத்தில் காசிப்பூர் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போது ராம் கங்கா என்றும்; பித்தோராகர் மாவட்டத்தில் ஓடும் போது ஜடகங்கா என்றும்; ஹுமாயூன் மண்டலின் தார்குலா, முன்சியாரி கிராமத்தை அடுத்து ஓடும் போது வெண்மையாகக் காட்சி தருவதால் கோரி கங்கா எனவும்; அல்மோரா மாவட்டத்தில் பைஜ்நாத் திருத் தலத்தின் அருகே செல்லும் போது கருட கங்கா எனவும் பெயர் பெறும் கங்கா நதி, ஜம்முவைக் கடந்து வைஷ்ணவி கோவில் அருகே செல்லும் போது பாண கங்கை என்று பெயர் பெறுகிறது.

வைஷ்ணவி தேவி, தன் கூந்தலை கங்கை நதியில் அலசியதால் "பால்கங்கா' என்றும் பெயர் பெற்றது. இந்தி மொழியில் "பால்' என்றால் கூந்தல்.
கேதார்நாத் திருத்தலத்திற்கு அருகே பாய்ந் தோடும் நதியை துக்தகங்கா என்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் அருகே பேடாகாட் என்ற இடம் உள்ளது. இது பிருகு முனிவர் தவம்புரிந்த இடமாம். இங்கு செல்லும் கங்கையை வாமன கங்கை என்பர் நர்மதை நதிக்கரையில் சூலபானேஸ்வரர் என்ற திருத்தலம் உள்ளது. 

அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோக்கடி என்ற கிராமத்தின் அருகில் நர்மதையுடன் கலக்கும் கங்கையை மோட்ச கங்கா என்கிறார்கள். இப்படி பல பெயர்களைப் பெற்ற கங்கை நதி எங்கே எவ்விதம் உருவாகிறது என்பது இன்று வரை மனிதர்களால் அறியப்படாத ரகசியமாகவே உள்ளது. பல முறை முயன்றும் அறிய முடியவில்லை.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...