Friday, November 3, 2023

திருமணத்தடை நீக்கும் கல்யாண லட்சுமி நரசிம்மர்...!

திருமணத்தடை நீக்கும்  கல்யாண லட்சுமி நரசிம்மர்...!
வேதப்பொருளாகவும்,
வேள்விகளின் பலனாகவும்,நாயகனாகவும் விளங்குபவர் ஸ்ரீமன் நாராயணன்.

இந்த மண்ணுலகம் செழிக்கவும்,அதில் உலவும் சகல ஜீவராசிகளும் அச்சமின்றி சௌபாக்கியங்களுடன் இன்புற்று வாழவும்,உருவானவை யக்ஞங்கள் ஆகிய புனித வேள்விகள்.

இந்த வேள்விகள் தங்கு தடையின்றி நடைபெறவும்,சகல தலங்களிலும் பரிபூரணமாக வேள்விகள் நிகழும் வகையில் வேள்வி முறைகள் கற்றுக் கொடுக்கப்படவும்,மண்ணுலகில் உருவானது ஒரு புனிதத் தலம்.

அதுவே இஞ்சிமேடு என்று தற்போது அழைக்கப்படும் யக்ஞவேதிகை திருத்தலம்.

இங்கு பெருமானே வேதியராக முன் நின்று முதல் யக்ஞத்தை நடத்திக் கொடுத்தார் என்பதால்,இங்குள்ள பெருமாள் அருள்மிகு "யக்ஞ நாராயணர்" என்றே அழைக்கப்பட்டார்.

யக்ஞரட்சகனாக ஸ்ரீராமன் அருள் வழங்க,அவர் கரத்தில் உள்ள ராம பாணத்தில்,நரசிம்மம் எழுந்தருளும் அபூர்வ க்ஷேத்திரம் இது.

மேலும் நரசிம்மர் இங்கே "கல்யாண லட்சுமி நரசிம்மராக" அருள்பாலிப்பதால்,
திருமணத் தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது,இஞ்சிமேடு.

எக்காலமும் வேத முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருந்த திருத்தலம் இது என்பதால் யாகமேடு என்று வணங்கப்பட்டதாம் இந்தப் புண்ணிய க்ஷேத்திரம்.

தற்போது ‘இஞ்சிமேடு’ என்று பெயர் பெற்றுத் திகழ்கிறது.

இந்தத் திருத்தலத்தில் பக்தவத்சலனாக,தீனதயாளனாக எழுந்தருளி அடியார்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார் வரதராஜப் பெருமாள் எனும் திருமகன் திருவுடையார்.

பெருந்தேவித் தாயாா் சமேதராக அருள்பாலிக்கும் இந்த வரதர் அன்பே வடிவான கோலத்தில் இங்கு காட்சி தருகிறாராம்.

நலிவுற்ற மண்ணுலகம் மீண்டு வாழவென்றே மாதவன் அருளால்,பேறு பெற்ற நித்ய அக்னி ஹோத்ரிகள் பலரும் இங்கு அவதாரம் செய்துள் ளார்கள்.அவர்களில் அஹோபில மடத்தின் 34-வது பட்டம்,சடகோப ராமானுஜ யதீந்த்ர மஹாதேசிகன்,42-வது பட்டம் ரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த மகான்களின் அவதாரம் நிகழ்ந்ததால் மேலும் புனிதம் பெற்றுத் திகழ்கிறது இஞ்சிமேடு திருத்தலம்.

இங்குள்ள ஆலயத்தில் அருளும் கல்யாண லட்சுமி நரசிம்மர் மிகுந்த வரப்பிரசாதி.

இவர் சந்நிதியில்,தன் தந்தை இரண்யனுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று பிரகலாதன் நரசிம்மரைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது,
சிறப்பம்சம்.

சுவாதி நட்சத்திர நாளில் இந்த நரசிம்மரைத் தரிசித்து வேண்டினால்,நம் இன்னல்கள் யாவும் விலகி ஓடிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஓம் நமோ நாராயணாய🙏

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...