Wednesday, December 20, 2023

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் சனீஸ்வர பகவான் சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற தலமானதும்,

தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,
சப்த விடங்க தலங்களில் ஒன்றான,
சனீஸ்வர பகவான் சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்ற தலமானதும்,
நளச்சக்கரவர்த்தி சனி திசையில் நள்ளாற்றில் ஈசனை வழிபட்டு சனி தோஷம் விலகிய தலமான,
நவகிரகங்களில் சனி பரிகார தலமான 
உலகப் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 
#திருநள்ளாறு #தர்ப்பாரண்யேஸ்வரர்
(#திருநள்ளாற்றீஸ்வரர் )
#பிராணாம்பிகை (போகமார்த்த பூண்முலையாள்)
திருக்கோயிலில் இன்று
#சனிப்பெயர்ச்சி_பெருவிழா 

இன்று ஸ்ரீ சோபகிருது தமிழ் வருடம், 
மார்கழி மாதம் 4-ஆம் நாள் (20.12.2023, புதன்கிழமை)  
மாலை 05.20 மணிக்கு  ஸ்ரீ சனீஸ்வர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..

"ஆயுள் காரனான 

"அனுக்ரஹ மூர்த்தி" திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் அனைவருக்கும் சர்வ மங்களம் அருளட்டும் 

****

"நள்ளாறா! தியாகேசா!!"
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"மந்தனாம் காரி , நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும் இனிய நாள் ஆக மாற்று!"

கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவானின் பெயர்ச்சி, ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நீதி, செயல்பாடு, பலன்கள் இருக்கும். அதில் சனி பகவான் நம் வினைகளுக்கு ஏற்ற நன்மை மற்றும் தண்டனை தரக்கூடிய கிரகமாக செயல்படுவதால், அவரின் கோள்சார அமைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேறு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரட்சனை தீரும். நள தீர்த்தத்தில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் வழிபட்டு பேறு பெறுகின்றனர்.

இக்கோயிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி.
மூலவர் தர்ப்பாரண்யேசுவரர். இவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். இவரை திருமால், பிரம்மன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலத்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

#இடையனார் கோயில்

கோயிலின் நிர்வாகத்திற்காக அரசர்கள் பசுக்களை கோயில்களுக்கு தானம் தந்து, அவற்றை மேய்த்து வழிநடத்த இடையர் குலத்திலிருந்து ஒருவரை நியமனம் செய்தனர். அதன்படி இடையன் அப்பசுகளை மேய்த்து பாலைப் பெற்று கோயிலுக்குத் தர வேண்டிய பங்கினை தர வேண்டும். இதனால் இடையனின் வாழ்வும், நிர்வாகமும் சீராய் நடைபெறும். இத்தலத்திலும் இடையர் ஒருவர் இப்பொறுப்பில் இருந்தார். கணக்கர் அப்பாலைப் பெற்று தன் வீட்டுக்குத் தந்து கோயிலுக்குப் பொய்க்கணக்கு எழுதி வந்தார். அதனால் இறைவன் கணக்கரை சூலம் எய்தி கொன்றார். அத்துடன் இடையருக்கு இறைவன் காட்சி தந்தார். இறைவனிடமிருந்து எரியப்பட்ட சூலம் கணக்கரைக் கொல்ல வந்த போது, நந்தியும், பலிபீடமும் விலகிக் கொண்டன. அதனால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கிய நிலையில் உள்ளது,

கோயிலின் தென்புறமாக இடையனார் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையன், அவன் மனைவியுடன் உள்ளார். இவர்களுடன் கணக்கன் சிலையும் அமைந்துள்ளது.

#தல வரலாறு:

தமயந்தி எனும் சேதி நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய எண்ணினார்கள். தமயந்தி அவர்களைத் தவிர்த்து நளன் எனும் நிடத நாட்டின் மன்னனை திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனைத் துன்புறுத்த வற்புறுத்தினார்கள். சனீஸ்வரனும் நளனை துன்பப்படுத்தினார்.
அவ்வாறான சூழலில் திருநள்ளாறு நகரில் இருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரான சிவபெருமானை நளன் வணங்கியமையால், சனீஸ்வரன் நளனை தன் துன்பப் பிடியிருந்து விடுவித்தார்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனி பகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும். சப்த விடங்கத் திருத்தலங்களில் ஒன்றான தலம்.

#திருஞானசம்பந்தர் அருளிய 
#திருநள்ளாறு தேவாரப் பதிகம்:

"போகமார்த்த பூண்முலையாள் 
  தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் 
  ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் 
  கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் 
  மேயது நள்ளாறே.     

தோடுடைய காதுடையன் 
  தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் 
  பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ 
  டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் 
  மேயது நள்ளாறே.   
      _திருஞானசம்பந்தர்

#அருணகிரிநாதர் அருளிய திருநள்ளாறு திருப்புகழ்:

"பச்சை யொங்கிரி பொலிரு மாதன
     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
          பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான

பத்தி வேந்தர ளாமெனும் வாணகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
          பத்ம செண்பக மாமனு பூதியி ...... னழகாளென்

றிச்சை யந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவி நாளிலை போல்வயி
          றிற்ப சுங்கிளி யானமி நூலிடை எ கியாபிங்குராமி      லயபிங்குராமி

......
திந்திரு நாழிநெ லாலற
          மெப்பொ தும்பகிர் வாழ்கும ராஎன ...... வுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
          கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
          கட்ட வெங்கொடு..... .விடும்வேலா

நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
          நற்க ரந்தனு கோல்வளை நேமியர் ...... மருகோனே

நற்பு நந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 



No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...