Friday, December 8, 2023

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...!

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...!
முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...!
  'வேலனை வணங்குவதே நமது முதல் வேலை" என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.

வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன். அவனை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

முருகப்பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்த நாட்கள் ஆகும்.

முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.  

மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

No comments:

Post a Comment

Followers

மஹா அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்..

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள் ⚫தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்ற...