Monday, December 18, 2023

சிவபெருமானின் வாகனமான நந்தியின் அவதார தலம்

தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டு தலங்களில் ஒன்றானதும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான, சிவபெருமானின் வாகனமான நந்தியின் அவதார தலமானதும்,நந்தி சிவபெருமானை சுமக்கும் ஆற்றல் பெற்ற தலமானதும்,
51 சக்தி பீடங்கள் மற்றும் 18 மகாசக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த இடமான , சத்ரபதி சிவாஜிக்கு அம்பாள் வாள் வழங்கிய தலமான ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள
#திருப்பருப்பதம் என்ற
#ஸ்ரீசைலம் #மல்லிகார்ஜுனசுவாமி
(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
#பிரம்மராம்பிகை (பருப்பநாயகி)  திருக்கோயிலில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிவபெருமானின் 64 சிவ வடிவங்களில் ஒன்றான
#வீரபத்திர_சுவாமி
கீழே  வலப்புறம் ஆட்டுத் தலையுடன் தட்சன் மற்றும் இடப்புறம் தாட்சாயணி 

சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய #திருப்பருப்பதம் என்ற ஶ்ரீசைலம் தேவாரப் பதிகம்:

"மானும்மரை இனமும்மயில்
  இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ்
  சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி
  லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில்
  சீபர்ப்பத மலையே.   

மலைச்சாரலும் பொழிற்சாரலும்
  புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட
  மலங்கித்தன களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை
  அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ்
  சீபர்ப்பத மலையே.   

மன்னிப்புனங் காவல்மட
  மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
  கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று
  எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
  சீபர்ப்பத மலையே. 
                        __சுந்தரர்

சிவாய நம 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் : இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்...