Tuesday, December 19, 2023

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும்.

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் உள்ள 
#திருநெல்வாயில்_அரத்துறை என்ற 
#திருவட்டத்துறை அருள்மிகு 
#ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸமேத 
#ஸ்ரீ_தீர்த்தபுரீஸ்வரர் ஆலயத்தில் தனுர்மாத தொடக்கத்தை முன்னிட்டு மூலவர் ஸ்வாமி அம்பாளுக்கு #முத்தங்கி சார்த்துப்படி செய்யப்பெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சிகள் 2023 🙏

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி), திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம்.

இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி “நீவா” என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே “நீவா–வடவெள்ளாறு” நதியாக மாறியது என்றும் கூறுவர்.

இது கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்தபோது அதனால் சேதம் உண்டாகாதிருக்க, நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தர் பெண்ணாடகம் பிரளயகாலேஸ்வரரை தரிசித்து விட்டு, இத்தலம் வர விரும்பி வழியில் உள்ள மாறன்பாடி தலத்தில் தங்கினார். சம்பந்தர் வரும் வழியில் ஏற்பட்ட வருத்தத்தை கண்ட சிவன், அவருக்கு, செல்ல முத்துச்சிவிகையும், முத்துகொண்டையையும் தந்தருளினார். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு கோயில் கர்ப்பகிகத்திற்கு இடப்புறம் “மகம் வாசல்” என்ற வாசல் உள்ளது.

கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர். மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம்.

தேவாரப்பதிகம்:

பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரும் அறிகிலார் அன்னொப் பானை யரத்துறை மேவிய தன்னொப் பானைக் கண்டீர்நான் தொழுவதே

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...