Sunday, December 3, 2023

அன்னை ஶ்ரீ லலிதாம்பிகையின் ஆலயம் எங்கே இருக்கிறது?

_போதுமான அளவுக்கு செல்வ வளத்தை தரும் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை..!!
உங்களின் குழந்தைக்கு 15 வயது நிரம்பி விட்டதா..? 

இந்த பதிவை அப்படியே பின்பற்ற உங்கள் குழந்தையை தயார் செய்யுங்கள்.!!

அதன் மூலமாக உங்கள் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் பணக் கஷ்டம் இல்லாமல் சுபிட்சமாக வாழ்ந்து வரும் என்பது சத்தியம்!!!

கலியுகத்தில், இப்போது ஆன்டிராய்டு யுகம் ஒரு பகுதியாக  நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் ஒழுக்கமாக வாழ்ந்து வருவது மிக பெரிய சாதனை !!!  எனவே ,உங்கள் குழந்தையை இந்த ஆன்மீக முயற்சியில் ஈடுபட வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!!!

அகத்தியர் தான் நம்முடைய ஆன்மீக முதல் குரு!!! நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு முறை மட்டுமாவது "ஓம் அகத்தீசாய நமஹா" என்று ஜெபிக்க வேண்டும்.

கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்ற கலைமகள்!!! கலைமகளின் குரு குதிரை முகம் கொண்ட கடவுளான ஶ்ரீ ஹயக்ரீவர்!!!

இவர் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை யின் ஆணைப்படி அகத்தியருக்கு ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் என்ற தெய்வீக படைப்பை உபதேசம் செய்தார்!!!

உபதேசம் செய்த பின்னர், "அன்னை ஶ்ரீ லலிதாம்பிகையின் ஆலயம் எங்கே இருக்கிறது? "என்று அகத்தியர் ,ஶ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டினார்.

ஶ்ரீபுரம் என்ற பெயரில் ஒரு ஊர், ஆன்மீக தமிழ்நாட்டில் இருக்கிறது. அங்கே சென்று அன்னை ஶ்ரீ லலிதாம்பிகையை தரிசனம் செய்து வழிபடுங்கள் என்று வழிகாட்டினார்!!!  

இன்றைய 
திருமீயச்சூர் தான் அந்த காலத்தில் ஶ்ரீபுரம் என்ற பெயரில் இருந்தது.

இன்றைய மயிலாடுதுறை அருகில் பூந்தோட்டம் என்ற ஊரை கடந்து பேராளம் என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கே இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கே தங்கும் வசதிகள் மிகவும் குறைவு.

இந்த ஊருக்கு அகத்தியர் தனது துணைவியாக இருக்கும் அன்னை லோபமுத்ராவுடன் வருகை தந்தார்.

இங்கே லலிதாம்பிகை சமேத மேகநாதர் திருக்கோவில் உள்ளது.

இங்கே லோபமுத்ரா உடன் அகத்தியர் வருகை தந்து ஶ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை விடாமல் துதித்தார்!!! பூஜித்தார்!!! யாகங்கள் நடத்தி,அன்னதானம் செய்தார்!!!

அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை அகத்தியர் தம்பதிக்கு நவரத்தின கற்கள் போன்று காட்சி அளித்தார்!!! வரங்களை அருளினார்!!!

அதனால் நம் அனைவருக்கும் குரு வாக இருக்கும் அகத்தியர் ஒரு பாடல் தொகுப்பை இயற்றினார்.

அதற்கு பெயர் ஶ்ரீ லலிதா நவரத்தின மாலை!!!

எப்படி இந்த பாடலை பயன்படுத்தி போதுமான அளவுக்கு செல்வ வளத்தை பெறுவது?

இதை வாசிக்கும் நீங்கள் இன்று முதல் அடுத்த 64 நாட்களுக்கு கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது. மது அருந்துதல் தவிர்க்க வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். ( உங்களுடைய மகன் அல்லது மகளுக்கு 15 வயது நிறைந்து விட்டால் அவர்களும் இந்த முயற்சியில் ஈடுபடலாம்!!!)

தினமும் காலையில் 4.30 மணிக்குள் குளித்து முடித்து ரெடியாகி விட வேண்டும்.

ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து கொண்டு,வாசனை மிகுந்த பத்தி குச்சி பொருத்தி கொண்டு, புதிய மஞ்சள் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்.

ஶ்ரீ லலிதாம்பிகை போட்டோ ஒன்று கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். அருகில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு ஜெபம் செய்ய வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவு பொருள் அல்லது பழங்களை தினமும் அன்னைக்கு படையலாக வைக்க வேண்டும். ஜெபித்து முடித்த பிறகு அதை சாப்பிட்டு விட வேண்டும்.

பின்வரும் அகத்திய சித்தர் இயற்றிய. ஶ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடலை ஒரு நாளுக்கு 64 முறை ஜெபிக்க வேண்டும். அதற்கு இரண்டு மணி நேரம் வரை ஆகும்!!!

இப்படி தொடர்ந்து 64 நாட்கள் ஜெபிக்க வேண்டும். பல விதமான தடைகள் வரும்.... விட்டு விட்டாவது 64 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.

63 ஆம் நாள்  அன்று திருமீயச்சூர் வந்து விட வேண்டும். அதற்கு மறுநாளும்  அந்த நாளும்  பவுர்ணமியாக இருந்தால் நல்லது 

அல்லது

ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமை நாளாக இருப்பது நல்லது. வியாழக்கிழமை அன்று மதியத்திற்குள் வந்து விட வேண்டும்.

இங்கே மேகநாதரை தரிசனம் செய்துவிட்டு வலம் வர வேண்டும். அப்போது பக்கவாட்டில் இருக்கும் துர்கை அம்மனை தரிசிக்க வேண்டும். அந்த தாயின் கையில் ஒரு கிளி சிறியதாக இருக்கும்... அதை பார்த்தவாறு ,

" என் பெயர்......நான் ......ஊரில் இருந்து வருகிறேன்.எனது கோத்திரம்...........கோத்திரம்!

கடந்த 64 நாட்களாக அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை யின் அருளை பெற வேண்டி அகத்தியர் அருளிய ஶ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடலை ஜெபித்து முடித்து விட்டேன்.

எனக்கு இந்த பிறவி முழுவதும் தேவையான அளவு செல்வ வளம் வேண்டும் ...என் சார்பாக கிளியாகிய தாங்கள் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை யிடம் தெரிவித்து விடுங்கள். உங்களுக்கு நன்றிகள்!!!" என்று வேண்டிக் கொள்ள வேண்டும். (உங்கள் கோத்திரம் எது என்று தெரியாமல் இருக்கிறதா? பரவாயில்லை. அதை நினைக்க  வேண்டிய அவசியம் இல்லை)

அதன் பிறகு அன்னை ஶ்ரீ லலிதாம்பிகையின் சன்னதிக்கு சென்று விட வேண்டும். சன்னதியின் இருபுறமும் தலா ஒரு துவார பாலகி இருக்கிறார்கள். அவர்களில் யாராவது ஒரு தாயிடம்  இதே போல பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பின்னர் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை யை தரிசனம் செய்ய வேண்டும்.

பின்னர் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை சன்னதியை வெளிப்புறமாக 64 முறை வலம் வர வேண்டும்.

இதற்கு மூன்று மணி நேரம் வரை ஆகும்.(40 வயதை கடந்தவர்கள் 15 தடவை வலம் வந்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு 15 முறையும் வலம் வந்து சிறிது ஓய்வு எடுத்து கொண்டு 64 முறை வலம் வந்து முடிக்க வேண்டும்)

அதன் பிறகு அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை சன்னதி இருக்கும் பகுதியில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு இதே ஶ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடலை 64 முறை ஜெபிக்க வேண்டும்.

பின்னர் மீண்டும் அன்னை ஶ்ரீ லலிதாம்பிகை சன்னதி சென்று குங்கும பிரசாதம் வாங்கி கொண்டு ஊருக்கு திரும்ப வேண்டும்.

காப்பு

ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம் 
ஞான ஸத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம்

 ஆகும் தொழில் ஐந்தனலாற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
 காக்கும் கணநாயக வாரணமே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங் கனவான தவம்

 பெற்றும் தெளியார் நிலைஎன்னில் அவர் பெருகும் பிழை என் பேசத்தகுமோ

 பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க் கெமனாக எடுத்தவளே

 வற்றாத அருட்சுனை வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

நீலம்

மூலக் கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்

 கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளி குவையை சரணம்

 நீலத்திருமேனியிலே நினைவாய் நினைவற் றெளியேன்  நின்றேன்
 அருள்வாய்

 வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

முத்து

முத்து வரும் முத் தொழிலாற்றிடவே முன் நின்ற ருளும் முதல்வீ சரணம்

 வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம்

 தத்தேறிய நான் தனையன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறுத்திக் கிணை வாழ்வடை யேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

பவளம்

 அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை 

சிந்தை நிறம் பவளம் பொழி பாரேர் தேன் பொழி லாமிது  செய்தவளாரோ

 எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் எண்ண மிகுந்தாள் 

 மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாணிக்கம் 

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே 

பூணக் கிடையாப் பொலியானவளே  புனையக் கிடையாப் புதுமைத்தவளே

 நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே

 மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம் 

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம்

 ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்

 வரநவ  நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்

தீ மேலிடினும் சக்தி எனதிடமாய் அடியேன் மொழியும்  திறமும்

 கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்

 மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

புஷ்ப ராகம்

ரஞ்ஜனி நந்தினி அங்கணி பதும ராகவிகாஸ  வியாபிணி அம்பா

 சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

 அஞ்ஜன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபணி நித்ய கல்யாணி

 மஞ்ஜுள மேரு ச்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

வைடூரியம் 

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப்

பறையாற்றொளி யொத் தவிதால் 

நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்

 அலையற்ற சைவற்  றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே

 மலையத் துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !

நூற்பயன் 

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்

 அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார் சிவ ரத்தினமாய் திகழ்வா ரவரே
 மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

 மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
 மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

அரிதாக சில பேருக்கு 64 நாட்கள் இவ்வாறு முயற்சி செய்து போதுமான அளவு செல்வ வளம் கிடைக்காமல் போகலாம் ;அப்படிப்பட்டவர்கள் மொத்தம் 108 நாட்கள் இதேபோன்று முயற்சி செய்ய வேண்டும் !!!!

ஒவ்வொரு நாளும் 64 முறை இந்த பாடல்களை ஜெபம் செய்தால் போதுமானது.

மிகவும் உயர்ந்த வழிபாட்டு முறையை உங்களுக்கு அகத்தியர் அருளால் தெரிவித்து உள்ளோம்.....


ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...