செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம் (மஹாபலிபுரம்), பல்லவ மன்னர்கள் காலத்தில் முக்கிய துறைமுகமாக
விளங்கியது. இங்கு ஒன்பது குகை கோயில்கள் ஏராளமான சிற்பங்களுடன் அமைந்துள்ளன. குறிப்பாக கிருஷ்ணர் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டமானவை. பிரளய காலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு உறங்கும் கோலத்தில் உள்ள சிற்பம் காணக் கிடைக்காதது. இங்குள்ள தலசயனப் பெருமாள் கோயில்
திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டது. பூதத்தாழ்வார் அவதரித்தது இவ்விடத்தில்தான்.
இங்கு ஒரு குருக்கத்திப் பந்தலில், ஒரு குருக்கத்தி மலரில் பிறந்தவராக இவர் பாராட்டப்படுகின்றார். திருமாலைக் கைதொழுதால், அதன்பிறகு ஒருவனுக்கு மண்ணுலகை ஆளும் பெருவளமும், வானவர்க்கு வானவனாய் வாழும் வாழ்க்கையும், விண்ணுலகப் பேறும் ஒரு பொருளாதல் இல்லை என்கின்றார் பூதத்தாழ்வார். இக் கூற்றினை, "ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" என்ற குலசேகர ஆழ்வாரின் கூற்றோடு ஒப்பிடலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment