Sunday, December 3, 2023

திருமாணிக்குழி உதவிநாயகி உடனுறைஉதவிநாயகர்[வாமனபுரீஸ்வரர்"..கடலூரிலிருந்து 15 கி.மீ..பண்ருட்டி அருகில்.

.."திருமாணிக்குழி உதவிநாயகி உடனுறை
உதவிநாயகர்[வாமனபுரீஸ்வரர்]திருக்கோயில்"..கடலூரிலிருந்து 15 கி.மீ..பண்ருட்டி அருகில் உள்ளது.இங்கு ஆவணியில் திருஓணம் நன்னாள் சிறப்பு.வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் அவனிடம் கொள்ளையடிக்க முற்பட,அவன் ஈசனை வேண்ட,  ஈசன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்;
இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் ஈசன் 'உதவிநாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்..இங்கு ஈசன் எப்போதும் அம்பிகையுடன் கருவறையில் இணைந்து இருப்பதால் , இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை
நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம்.ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே ஈசன்  தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.ஆம்!ஈசனும் அம்பாளும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான "பீமருத்ரர்' திரைச்சீலை வடிவில் இங்கு உள்ளார்.எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரைநீக்கப்பட்டு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது.ஒருமுறை இந்திரனின் தாயார் அதிதி தேவி திருமறைக்காடு (வேதாரண்யம்) திருத்தலத்திற்கு வந்து நெய் தீபம் ஏற்றி ஈசனை வழிபட்டார்.
அப்போது விளக்கின் சுடர் அணையும் நிலையில் இருந்தது.அந்த நேரத்தில் பசியால் அலைந்து கொண்டிருந்த எலி ஒன்று, விளக்கின் நெய்யை சாப்பிட முயன்றது.எலியின் மூக்கு பட்டு விளக்கின் திரி தூண்டிவிடப்பட்டதில் விளக்கின் சுடர் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.இது  தற்செயலாக இருந்தாலும் எலியின் செயலால் மனம் மகிழ்ந்த இறைவன், அந்த எலியை மறுபிறவியில் மகாபலி
சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார்.மறுபிறவியில் சிவனின் மேல் பக்தி கொண்டு தர்ம வாழ்வை மகாபலி மேற்கொண்டான். இருப்பினும் அவன் அசுர வம்சத்தவன் என்பதால் தேவர்கள் அவனை அழிக்கும்படி விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெரியசுவாமி,விஷ்ணுவும்,வாமனராக குள்ள அவதாரம் எடுத்தார்.பின்னர் மகாபலியின் யாசக சாலைக்கு சென்று மூன்றடி மண் கேட்டார். தர்மத்தின் வழி நின்ற மகாபலி அதை தர ஒப்புக் கொண்டான். முதல் அடியால் பூமியையும்,இரண்டாம் அடியால் விண்ணையும் அளந் தார். மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்தில் தள்ளி, பாதாள லோகத்தையும் அளந்து முடித்தார்.மகாபலி தர்மவான் என்பதால் தர்மம் செய்தவனை துன்புறுத்திய பாவம் வாமனரைத் தொற்றிக் கொண்டது. இதையடுத்து அந்த தோஷம் நீங்குவதற்காக
திருமாணிக்குழி தலம் வந்தார் வாமனர்.அங்கு ஈசனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றார்.இதனால் இத்தல இறைவன் வாமனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்தை கடந்து மூலவரை தரிசிக்க உள்ளே செல்லும் வழியில் வாமன அவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்
நான்கு வேதங்களும், நான்கு தூண்களாக அமைந்துள்ளன. மூலவரான வாமனபுரீஸ்வரர் சன்னிதி எப்போதும் திரைச்சீலை போடப்பட்டு காணப்படுகிறது.திரைச்சீலையில் பதினொரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்திரர் வடிவம் உள்ளது. அர்ச்சனை,
தீபாராதனை யாவும் முதலில் பீமருத்திரருக்கே செய்யப்படுகிறது. அதன்பிறகே மூலவருக்கு திரை விலக்கி இது நடைபெறும்.இது முடிந்ததும் மீண்டும் திரைச்சீலை போடப்பட்டு விடும். மகாவிஷ்ணு இங்கு வந்து வழிபட்டபோது ஈசன் தன்னுடைய ருத்ர கணங்களில் ஒருவரான பீமசங்கரன் என்பவரை பூஜையைக் காவல்
காக்கும் காவல் கணமாக நியமித்தார்.ஆகவே இத்தலத்தில் எப்போதும் முதல் பூஜை பீமசங்கருக்கே. இத்தலத்தில் இறைவன் எப்போதும் இறைவியுடன் அம்மையப்பனாக இருப்பதாக கூறப் படுகிறது.எனவே இங்கு தனியாக பள்ளியறை கிடையாது.இங்கு கருவறையே பள்ளியறையாக விளங்குவதால், இவ்வாலயத்தில்
அர்த்தஜாம பள்ளியறை பூஜை செய்யப்படுவதில்லை. இத்தல ஈசனையும்,அம்பாளையும் வழிபட்டு திருமண பூஜை செய்து வந்தால், திருமண தடைகள் அகலும்.இத்தலத்தில் உள்ள யுக லிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர், நடராஜர், சப்தமாதர்கள்,
அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை. இங்குள்ள பைரவரை இராகு கால வேளைகளிலும், அஷ்டமி நாட்களிலும் புனுகு சாத்தி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், உடற்பிணிகள் விலகும் என்று கூறப்படுகிறது.திருவோண நாளில் மகாவிஷ்ணு இங்கு ஈசனை பூஜிப்பதாக ஐதீகம் உள்ளது.கார்த்திகை
மகாதீபத்திற்கு மறுநாள் ரோகிணி நட்சத்திர நாளில் இங்குள்ள மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.இந்த தீபம் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும்.இங்கு ஈசன் எப்போதும் அம்பாளுடன் இணைந்து இருப்பதால் இங்கு வழிபட கணவன் மனைவி பிணக்குகள்  நீங்கும்.இத்தல கருவறையில் ஈசனை அம்மைஅப்பனாக நாம் அந்த திரை சீலை விலகும் நேரத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.அப்போது நாம் அந்த திருக்காட்சி காணும்போது நம் மனம் ''ஏகாந்த வேளை-இனிக்கும் இன்பத்தில் வாசல்;திறக்கும்-ஆரம்ப பாடம்; நடக்கும்-ஆனந்த கங்கை'' என்று ஆனந்தத்தில் முனுமுனுக்கிறது.ஆம்!தம்பதியர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு விழிகளில் நீர் சொறிய உண்மை அன்பு இருந்தும் இணையமுடியவில்லையே என ஏங்குபவர்கள் இங்கு வந்து ஈசன்,அம்பாள் வழிபாடு செய்தால் பிணக்கு தீர்ந்து தம்பதிகள் இணக்கமாவர்.பல ஆயிரம் பேர் பலன் அடைந்திருகிறார்கள்.11 திங்கள் கிழமைகளில் தொடர்ந்து வழிபடுவது சிறந்த பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.

ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருமாகறலீஸ்வரர் திருமாகறல் காஞ்சிபுரம்

மூலவர் : #திருமாகறலீஸ்வரர்  உற்சவர் : #சோமாஸ்கந்தர், நடராஜர்  அம்மன்/தாயார் : #திரிபுவனநாயகி  தல விருட்சம் : எலுமிச்சை  தீர்த்தம் : அக்னி  ப...