Friday, December 8, 2023

சோழர்கால மழைநீர் வடிகால் அமைப்பு.தஞ்சை பெரிய கோவில்..

சோழர்கால மழைநீர் வடிகால் அமைப்பு.
தஞ்சை பெரிய கோவில்.. 
 கோவில் வளாகத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு மழைநீர் சேகரிப்புத் திட்டத்துடன் இணைந்து மிகச்சிறப்பான முறையில் அமைக்கப்பட்டது.
தஞ்சை பெரியகோவில் கட்டுமானத்தை பல ஆண்டுகளாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தஞ்சையை சேர்ந்த பொறியாளர் இராஜேந்திரன் அவர்கள் , தஞ்சை பெரியகோவில்,  மழை நீர் சேகரிப்புத்திட்ட அமைப்புடன் வடிகால் அமைப்பாகவும்  கோவில்  கட்டுமானம் அமையப்பெற்றது என்கிறார்.

விமானத்தின் மேல் விழும் மழைநீர் சொட்டுத் தண்ணீர் கூட விமானத்தில் தேங்காமல் அப்படியே பூவரி இடுக்குகளின் வழியே பயணித்து கீழே ஒரு குழியில் வந்து சேர்கிறது. இந்த நீர் நிலத்தடியில் பதிக்கப்பட்ட  குழாய் வழியாகச் சென்று கோவிலுக்கு வெளியே அமைந்துள்ள  சிவகங்கை குளத்தை அடைகிறது.
கோவிலுக்குச் சென்று நன்கு நோக்கினால் இந்த கட்டமைப்பு மிகச்சிறப்பாக செயல்பாட்டில் இருந்திருக்கிறது. என்பதை அறியலாம்.

விமானத்திலிருந்து வழியும் நீர் மற்றும் கோவில் வளாகத்தில் பெய்யும் மழைநீர் ஒரு  குழியில் சேகரிக்கப்பட்டு நீண்ட குழாய்அமைப்பு  மூடப்பட்ட கால்வாய் போன்ற கல்லால் ஆன  அமைப்பு  மூலம் ஒரு சுரங்கக் குழியின் வழியாக  கோவிலுக்கு வெளியே சென்று குளத்தை அடைகிறது.

பெருவுடையாருக்கு செய்யப்படும் அபிசேக நீர் கூட, தரையெங்கும் வழிந்து ஓடாமல்.. ஒரு தொட்டியில் வந்து விழுகிறது. அந்த நீரானது தொட்டியில் உள்ள குழி வழியாக மூடப்பட்ட கால்வாய் வழியே சென்று வெளியேறுகிறது..

மிகச் சிறந்த நீர் மேலாண்மை ..

பிற்கால கட்டமைப்பு, தரைத் தளமாற்றம் என்று எவ்வளவோ நடந்தாலும் 
சோழர்கால நீர் வடிகால் மேலாண்மை கட்டமைப்பு பளிச்சென்றுத் தெரிகிறது.

எவ்வளவு மழை பெய்தாலும் சொட்டுநீர் கோலில் வளாகத்தில் தங்காது. அந்த மழைநீரும் வீணாகமல் ஒரு குளத்தில் சேகரிக்கப்படுகிறது.

வடிகால் அமைப்பும் மழை நீர் சேகரிப்பும் இணைந்த சோழர்கால கட்டுமானம்.
இந்த வடிகால் அமைப்பில் பல்வேறு அடைப்புகள் ஏற்பட்டு தற்காலத்தில் பயன்பாடு வெகுவாக குறைந்தேவிட்டது. இருந்தும் அந்தக் கட்டுமானத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.


ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...