கோயில் சொத்து திருடியவனையும்....
அவன் குலத்தையும்
நாசம் செய்துவிடும்.
நம்மை படைத்த இறைவனுக்கு தொண்டு செய்யமுடியாமல் போனாலும் பரவாயில்லை அவனுக்குரிய பொருள்களைக் களவாடினால் இறைவனின் கடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும்.
எவன் ஒருவன் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறானோ அக்கணமே அவனை மன்னிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
செய்த பாவங்களுக்கு கூட புண்ணியம் தேடிக்கொள்ள் வழிகள் பல உண்டு.
ஆனால் என்ன செய்தும் தீராத பாவம் ஒன்று உண்டு என்றால் அது சிவன் சொத்து.... கோயில் சொத்து திருடியவனையும்.... அவன் குலத்தையும் நாசம் செய்துவிடும்.
நம்மை படைத்த இறைவனுக்கு தொண்டு செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை
அவனுக்குரிய பொருள்களைக் களவாடினால் இறைவனின் கடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும்.
ஒருமுறை எமதர்மன் தனது தூதர்களை அழைத்து,
”இன்ன இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட இந்த மனிதனின் இறுதிகணம் இன்று முடியப்போகிறது.
நீங்கள் சென்று அவனை அழைத்து வாருங்கள்.
ஆனால் இம்முறை உங்களை நான் சோதிக்க போகிறேன்.
நீங்கள் செல்லும் இடத்தில்
ஒரே மாதிரி இரண்டு பேர் இருப்பார்கள்.
இதில் ஒருவன் கலியுகம் போற்றவும், மற்றொருவன் கலியுகம் தூற்றவும் வாழ்ந்துகொண்டிருப்பான்.
எனக்கு கெடுதல் புரிபவனின் உயிர்தான் தேவை” என்றார்.
யம தூதர்களும் பூலோகம்
வந்து யமதர்மன் சொன்ன இருவரையும் கண்காணித்தார்கள்.
ஒருவன் தினமும் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு ஆலய பணிகளில் ஈடுபட்டு பக்தியுடன் இருந்தான்.
மற்றொருவன் கள்ளம்,
கபடு, திருடு, பொய் பித்தலாட்டம் என்று இருக்கும் அத்தனைதீயவழிகளையும்
தன் குணமாக்கி வாழ்ந்துவந்தான்.
அவனது தோற்றமும், வாழும் முறைகளும் அருகிலிருந்த மக்களை வெறுப்படைய செய்தன.
தூதர்கள் இருவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிவாலயத்துக்குள் பணியில் இருந்தவனை பாசக்கயிறு போட்டு இழுத்து சொர்க்கவாசல் வழியைத் தவிர்த்து நரகத்துக்குள் இழுத்துச் சென்றனர்.
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த யமதர்மன் ”என்ன செய்கிறீர்கள் தூதர்களே?
நல்லவனை மாற்றி
அழைத்து வந்ததோடு
அவனை நரகலோலத்துக்குள் பிரவேசிக்க செய்துவிட்டீர்களே?”
என்று கோபம் கொண்டார்.
”இல்லை யமதர்மராஜனே, இவன் சிவாலயங்களில் சேவை செய்வதாக சொல்லி அங்கிருக்கும் பொருள்களை யாரும் அறியாமல் களவாடி சமூகத்தில் நல்ல முறையில் நல்ல பெயர் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
கேட்பவர்களுக்கு உதவி செய்தாலும் இறைவனுக்குரியதை எடுத்து அனுபவித்து அதையே உதவி என்று பொய் முகம் காட்டி மக்களை ஏமாற்றி இறைவனையும் ஏமாற்றுவதாக நினத்துக் கொண்டிருக்கிறான்.
இன்னொருவன் மக்களிடம் கொள்ளையடிக்கிறான். அவனுக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை.
ஆனால் இவனுக்கு நன்மை தீமை என அனைத்தும் தெரியும்.
இருந்தும் இவன் படைத்த இறைவனிடமே ஆட்டுத்தோல் போர்த்திய புலியாய்
நல்லவ னாய நடித்து நாடகமாடிக்
கொண்டிருக்கிறான்.
அதனால் தான் இவனை அழைத்து வந்தோம்.
இவனுடைய குடும்பத்தினரும் இவனது வம்சமும் இனி நல்லதை நினைத்து கூட பார்க்க முடியாது.
வாழ்க்கையில் கவலையும், அச்சமும், தரித்தரமும் சூழவே அவர்கள் இறுதிக்காலம் வரை கழிக்க வேண்டும்.
மரணத்தைக் கூட அகால மரணமாக தான் பெறமுடியும்” என்றனர்.
புன்னகைத்த யமதர்மன் என்னுடைய தூதர்கள் எப்போதும் தரும வழியிலேயே செல்வார்கள் என்பதை
நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றார்.
அதனால் தான் சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறோம்.
சிவன் சொத்து குல நாசம்’ என்று கூறுவதால் சிவன் கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே போட்டுவிட்டு வருவது சரியா? தவறா? உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன?
சிவன் சொத்து குலநாசம் என்கிற பழமொழியை நம்பி பலரும் சிவன் கோவிலில் கொடுக்கும் விபூதி மற்றும் குங்கும பிரசாதங்களை கூட வீட்டிற்கு கொண்டு வர தயக்கம் காட்டுகின்றனர்.
எந்த ஒரு பழமொழியும் சரியாக புரிந்து கொள்ளா விட்டால் நமக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் அங்கு தடைபட்டுவிடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த பழமொழி திகழ்கிறது
சிவன் கோவில் மட்டுமல்ல
எந்த ஒரு கோவிலில் இருந்தும் நீங்கள் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் உங்கள் குலமே(வம்சம்) நாசம் அடையும் என்பது தான் சாஸ்திர நியதி.
கோவில் சொத்து மேல் ஆசைப்படுபவர்கள் உடைய சந்ததிகள் அடியோடு நாசமாகி சீர்குலையும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே கையை வைத்த பஸ்மாசுரன் உடைய நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும்.
உண்மையில் சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் முதலான பிரசாதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இந்த பிரசாதங்களை வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டே வந்தால், ஈசனுடைய அருள் மற்றும் பாதுகாப்பு உங்கள் வீட்டிற்கு அரணாக அமையும்.
இதனால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தன் பலத்தை இழந்து வெளியேறிவிடும்.
பழமொழியின் உண்மை அர்த்தம் தெரியாத காரணத்தால் இந்த நன்மைகளை எல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.
அனைத்து விதமான ஆசைகளையும் அடக்கி,
பந்த பாசங்களை அறுத்து, முழுமையாக தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சித்தர்கள் அக்காலத்தில்
அதிக வித்தைகளை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர்.
சித்தர் எனும் மகா புருஷர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து யோகப் பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தியை பெற்றார்கள்.
இதற்கு அந்த ஆண்மகன் தன்னுடைய சுக்கிலத்தை அடக்கி பூமியை நோக்கி விழாமல், தன்னுடைய ஆன்ம பலத்தால், உச்சந்தலையை நோக்கி விந்துவை உயர செய்து உள்நாக்கில் விழ வைப்பார்கள்.
இப்படி அவன் செய்தால் அவனுடைய குலமே
அவனோடு முடிந்துவிடும்.
இதனை செய்வதன் மூலம் அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.
சித்தி பெற்ற ஒருவரே சித்தன் ஆகிறான்.
முற்றும் துறந்து உச்சி முதல் பாதம் வரை அடக்கி, அஷ்டமா சித்திகளை பெற்று ஞானத்தை அடைந்து மோட்சம் பெறும் சித்தர்கள், உடலால் அழிந்தாலும் ஆன்மா பல
நூறு ஆண்டுகளுக்கு அழியா நிலையை பெறுகிறது.
இதைத்தான் சிவன் சொத்து குல நாசம் என்று நம் முன்னோர்கள்கூறி வைத்தனர்.
எனவே சிவனுடைய சொத்து மட்டுமல்ல, எந்த கடவுளின் சொத்தாக இருந்தாலும், அதனை அடைய நினைப்பவர்களுக்கு
வம்சம் நாசமடையும்.
சிவன் கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வருவதால் எந்த
ஒரு ஆபத்தும் நேர போவதில்லை.
மற்ற கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்கள் போலவே, சிவன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களும் வீட்டிற்கு நன்மைகளை மட்டுமே வழங்கும்.
எந்த ஒரு தீங்கையும் இழைத்து விடாது.
சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதியை, வீட்டின் நான்கு மூலைகளிலும் தூவிவிட்டால் போதும்.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, தெய்வ சக்தி ஊடுருவி நேர்மறை ஆற்றல் பெருகும்.
தினமும் சிவன் கோவில் விபூதியை குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெற்றியில் வைத்துக் கொண்டு தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.
அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனமும் அமைதி அடைந்து நிம்மதியான தூக்கமும் பெறுவீர்கள்.
சிவன் சொத்து குல நாசம் என்ற தலைப்பில் வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்த கதையின் பகிர்வு!
(shared message.)
நான் சென்னை சைதாப்பேட்டை கிளையில் பணிபுரிந்தேன். வாடிக்கையாளர் ஒருவர் என்னிடம் அறிமுகமானார். நடுத்தர வயது; நெற்றி நிறைய விபூதி; சிவப்பழமாக காட்சியளித்தார்.
வியாபாரத்திற்காக கார் ஒன்று தேவைப்படுவதாக தெரிவிக்க, அவரது கணக்குகளை ஆராய்ந்தேன். ஏகப்பட்ட வரவு செலவு. லட்சக்கணக்கில் இருப்பு.
கடன் கொடுக்க சம்மதித்தேன். ஓரிரு நாளில் தொகை வழங்கப்பட்டது.
வண்டியை டெலிவரி எடுத்து விட்டு சந்திக்க வந்தார். ''சார்... இன்னிக்கு சாயந்தரம் காரணீஸ்வரர் கோயிலில் பூஜை! நீங்க வந்து சாவியை எடுத்துக் கொடுக்க வேண்டும்'' என்றார். ஆனால் என்னால் போக முடியவில்லை.
காரணீஸ்வரரை தரிசிக்க முடியவில்லையே என வருத்தம்.
மறுநாள் பஜாரில் கடைகள் மூடப்பட்டு இருந்தன. விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய வண்டியை எடுத்துக் கொண்டு மகாபலிபுரம் சென்ற வணிகரின் மகன் பலியாகி விட்டான். உடனே அவரது வீட்டிற்கு ஓடினேன்.
என்னிடம் அவர் 'திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தார். காரணீஸ்வரர் கோயிலின் தலைமை நிர்வாகி இவர் என்பது அப்போது தான் தெரிய வந்தது அதன் பின் ஒருநாள் என்னைத் தேடி வந்தார். ''என் மகனுக்கு இன்னும் வண்டி ஓட்டும் வயசு வராததால் இன்சூரன்ஸ் பணம் வாங்குவது சிக்கலா இருக்கு' எனத் தெரிவித்தார். ஆனால், கடன் தொகையைக் கட்டினார்.
இப்படி ஒரு நல்ல மனிதருக்கு ஏன் இந்த சோதனை?' என மனம் நொந்தேன். ஓராண்டு கழித்து மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்தது. அவரது மற்றொரு மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான். நான் அவரைப் பார்க்க போகவில்லை. ஆனால் ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சென்றார்.
அவரது வீடு கலை நயத்துடன் இருந்தது. *வீடே கோயில் போல இருக்குதே* என வியந்தேன். ஒரு நிமிடம் என்னையே பார்த்தவர், *கோயில் தான் சார் இது* என கோவென அழுதார். இந்த இடம் காரணீஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரம். என் முன்னோர்கள் பராமரித்த கோயில் இது. என் நிர்வாகத்தின் கீழ் வந்ததும் எனக்கு திராவிட கட்சிகளின் சகவாசம் வந்தது. கோயில் நிலத்தில் வீட்டைக் கட்டினேன். கோயிலின் மற்ற நிலங்களையும் ஆக்கிரமித்தேன். உறவினர்கள் சொன்ன அறிவுரையை துாக்கி எறிந்தேன். இப்போது தொடர்ந்து இரு அசம்பாவிதங்கள். வாரிசு இல்லாமல் போனது. நான் விலை கொடுக்க வேண்டிய நேரம் இது தான் போலிருக்கு' என்றார். இதைத் தான் சிவன் சொத்து குல நாசம் என்பார்களோ?
பின்னர் பல சந்தர்ப்பம் வாய்த்தும் ஏனோ இன்றளவும் காரணீஸ்வரரை தரிசிக்கவே இல்லை.
வட மாநிலங்களுக்கு பணி மாறுதலாகி மீண்டும் சென்னை வந்த போது அவரைப் பற்றி விசாரித்தேன். சொத்தை எல்லாம் விற்ற அவர், காசியில் தர்ம சத்திரம் கட்டி அங்கேயே இறந்ததாக தெரிந்தது.
இவரைப் போல உள்ளவர்கள் எத்தனையோ பேர் இன்றும் நன்றாகத் தானே வாழ்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம்?
ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு நேரம் குறித்திருக்கிறார்!
*சிவன் சொத்து குல நாசம்*!
ஓம் நமச்சிவாய!
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment