சிவ வழிபாட்டிற்கு உகந்த மூன்று முக்கிய லிங்கங்கள் பற்றிய பதிவுகள் :*
1. ஷணிக லிங்கம்
2. இஷ்ட லிங்கம்
3.ஆத்ம லிங்கம்
*1. ஷணிக லிங்கம் :*
நாள்தோறும் சிவ வழிபாடு நடத்தி பின்பு கைவிடப்படும் லிங்கம் ஷணிக லிங்கம் எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். இதனை நாமே செய்யலாம். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.
1. புற்றுமண் லிங்கம் - மோட்சம் தரும்.
2. ஆற்றுமண் லிங்கம் - பூமிலாபம் தரும்.
3. பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்.
4. அன்ன லிங்கம் - அன்ன விருத்தி தரும்.
5. பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்.
6.வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்.
7. ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத் தரும்.
8. விபூதி லிங்கம் - அனைத்து செல்வமும் தரும்.
9. சந்தன லிங்கம் - அனைத்து இன்பமும் தரும்.
10. மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்.
11. தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலா நிலை தரும்.
12. சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்.
13. மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்.
14. பழ லிங்கம் - சுகத்தைத் தரும்.
15. தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்.
16. தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்.
*2. இஷ்ட லிங்கம்:*
மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு தினமும் தாம் செல்லுமிடமெல்லாம் கூடவே எடுத்து சென்று வழிபடும் லிங்கம் இஷ்ட லிங்கம் எனப்படும்.
1. இந்திரன் - பத்மராக லிங்கம்.
2. குபேரன் - ஸ்வர்ண லிங்கம்.
3. யமன் - கோமேதக லிங்கம்.
4. வருணன் - நீல லிங்கம்.
5. விஷ்ணு - இந்திர நீல லிங்கம்.
6. பிரம்மன் - ஸ்வர்ண லிங்கம்.
7. அஷ்ட வசுக்கள், வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்.
8. வாயு - பித்தளை லிங்கம்.
9. அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்.
10. மகா லட்சுமி - ஸ்படிக லிங்கம்.
11. சோம ராஜன் - முத்து லிங்கம்.
12. சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்.
13. பிராம்மணர்கள் - மண் லிங்கம்.
14. மயன் - சந்தன லிங்கம்.
15. அனந்தன் முதலான நாகராஜர்கள் - பவள லிங்கம்.
16. தைத்தியர்கள், அரக்கர்கள் - பசுஞ்சாண லிங்கம்.
17. பைசாசங்கள் - இரும்பு லிங்கம்.
18. பார்வதி - வெண்ணெய் லிங்கம்.
19. நிருதி - தேவதாரு மர லிங்கம்.
20. யோகிகள் - விபூதி லிங்கம்.
21. சாயா தேவி - மாவு லிங்கம்.
22. சரஸ்வதி - ரத்தின லிங்கம்.
23. யட்சர்கள் - தயிர் லிங்கம்.
*3. ஆத்ம லிங்கம்:*
தூய மனதுடன் மனப்பூர்வமாக வழிபட சிவபெருமான் கொண்ட திருவுருவம் ஆத்ம லிங்கம் ஆகும். இவ்வகை லிங்கத்திற்கு மனப்பூர்வமான வழிபாடே போதுமானது. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ஆத்ம லிங்க வழிபாடு எனப்படும்.
1. மண் - காஞ்சிபுரம் - ஏகாம்பர லிங்கம்.
2. நீர் - திருவானைக்கா - ஜம்பு லிங்கம்.
3. நெருப்பு - திருவண்ணாமலை - அருணாசல லிங்கம்.
4. வாயு - திருகாளத்தி - திருமூல லிங்கம்.
5. ஆகாயம் - சிதம்பரம் - நடராச லிங்கம்.
6.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்🙏*
No comments:
Post a Comment