தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பு பெற்றது. மற்ற நாட்டவர்கள் வருட கணக்கை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே நம் முன்னோர்கள் சூரியன் மற்றும் சந்திரனின் அசைவுகளை வைத்து மாதங்களை கணக்கிட்டு வந்தனர். அப்படி கணக்கிடப்பட்ட 12 மாதங்களில் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான சித்திரை மாதத்தை முதல் மாதமாக கருதினார்கள். இந்த மாதத்தில் எல்லாமே மிக சிறப்பு வாய்ந்தவை தான் அதிலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பதிவில் சித்ரா பௌர்ணமி எப்போது வருகிறது, இந்த திருவிழாவில், பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவது தங்கள் பாவங்களை கழுவுவதை அடையாளப்படுத்துகிறது. இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சித்ரா நதியில் வழக்கமாக உள்ளது. மற்ற ஊர்களிலும் இந்த திருவிழா நடைபெறுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி செவ்வாய் கிழமை பூஜை நேரங்களை கடைபிடிப்பதன் மூலம் சித்ரகுப்தரின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.
பௌர்ணமி திதி ஆரம்பம் – ஏப்ரல் 22, 2024 அன்று மாலை 05:55
பௌர்ணமி திதி முடிவடையும் தேதி – ஏப்ரல் 23, 2024 அன்று இரவு 07:48
பௌர்ணமி சிறப்புகள்
சித்ரா பௌர்ணமி பூஜை:
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்
சித்ரா பௌர்ணமி குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுகிறது, இருப்பினும் இந்த நாளில் ஆண்களும் பூஜை செய்யலாம். பெண்கள் குளித்த பின், தங்கள் வீட்டின் நுழைவாயிலை சுத்தம் செய்து, அரிசி மாவினால் கோலமிட்டு, கடவுளை அலங்கரிப்பார்கள். அதன் பிறகு கடவுளை வணங்க வேண்டும். இப்படி வணங்குவதால் குழந்தை பாக்கியம், திருமண வரம் மற்றும் உங்களின் ஏழு தலைமுறையையும் காக்கும் என நம்பப்படுகின்றது.
சித்திரை பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் மிகவும் முக்கியமான ஒன்று அன்று கிரிவலம் வந்தால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்ததற்கு பலன் கிடைக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment