Wednesday, April 24, 2024

நடராஜர் "ஊா்த்துவ தாண்டவ ரத்தின சபாபதி" என்னும் திருநாமத்தோடு, திருவாலங்காட்டில்

திருவாலங்காட்டில் அருளும் நடராஜர் சிலையின் சிறப்பை காண்போம்...!
சிவாலயம் கோவிலுக்குள் மன்னனொருவன் சென்றான். அங்கிருந்த நடராஜ பெருமானின் வணங்கும் போது,  தியான ஸ்லோகம் ஒலிப்பதைக் கேட்டு அவன் மனம் அதனுள் ஒன்றி லயித்தது.

கோயிலிருந்து, அரச சபைக்குத் திரும்பிய மன்னன், திறமைசாலிகளான சிற்பிகள்அனைவரையும் அவைக்கு அழைத்து வரச்செய்தான்.

அவர்களிடம், கோயிலில் கேட்ட தியான ஸ்லோகத்தைச் சொல்லி, இந்த ஸ்லோகத்திலுள்ள அமைப்புப்படி நடராஜ பெருமான் திருவருவத்தை பஞ்சலோகத்தில் வாா்க்க வேண்டுமென தன் எண்ணத்தின் வேண்டுகோளை விடுத்து வைத்தான்.

இதைக் கேட்டுக் கொண்ட சிற்பிகள், "மன்னா!"  
இந்த ஸ்லோகத்தில் குறுக்கும் நெடுக்குமாக  
கீழும் மேலுமாக திருக்கரங்கள், திருவடிகள் முதலியவைகள் கூறுதலாகியிருக்கிறது,

எனவே இந்த ஸ்லோகப்படி திருவுருவம் பதிய அவ்விடங்களில் உருக்குநீா் பாயாது! பதியாது!!. ஆகையால் தாங்கள் சொல்லும் ஸ்லோகப்படி நடராஜ திருவுருவை பஞ்சலோகத்தில் வாா்க்க இயலாது  
என்றாா்கள்.

வந்திருந்த அனைத்துச் சிற்பிகளும்  அவையை விட்டு சென்றுவிட, கடைசியாளாக மெதுநடையுடன்  நடந்து வந்த சிற்ப மன்னனை நோக்கி

மன்னா!" உங்கள் உள்ளத்தில் நடராஜ திருவுருவம் தோற்றுவிக்க நினைப்பானதுகூட அவன் நடனாடலாகக்கூட இருக்கலாம்!,

எனவே நாமனைவரும் முயற்சி செய்தால்தான்  முடியும் எனவே  
அவனாடல் திருவுருவை நான் வாா்க்க ஆவல் கொண்டேன்.

அரசா் பூாித்து, சிற்பியின் கூா்மைப்படி, ஓராண்டு காலமாக கோயிலில் விசேஷ பூஜைகள், ஜபங்கள், தர்ப்பண ஹோமங்கள் விழாக்கள் என அமா்க்களமாக நடந்து வந்தது.

ஓராண்டு காலம் தேய்ந்தோடியதே யொழிய, பஞ்சலோகக் குழம்பைக் கொண்டு நடராஜரின் திருவுரு அச்சிற்பியின் முயற்சியினால் வெற்றி பெறவில்லை

இருப்பினும் சிற்பியும் அரசனும், முயற்சியைக் கைவிடாமல், மனமும் தளராமல்ஆகம நியதிகளைக் கடைபிடித்து, ஓராண்டுக்கு மேல் பல மாதங்கள் தொடா்ந்தும் முயன்று முயன்று முயற்சித்துக் கொண்டேயிருந்தனா்.

முடிவுக்கு திருவுருவம் உருவாகவில்லை தோல்விதான் தொடா்ந்தது.

சிற்பி மனம் கலங்கி ஈசனை நினைந்து நினைந்து உருகினாா் இப்போதெல்லாம் சிற்பி வாா்ப்பகத்துக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட, சற்று  கூடுதலான நேரத்தை தியானத்திலும், தவம் செய்தும் கழித்தாா்.

ஒரு நாள் சிற்பியின் கனவில், ஈசன் திருநடனமாடி காட்சியருளி இம்முறை முயற்சி செய் மன்னன் என்னம் பிரதிபலிக்கும் 
என்றாா்.

கனவு கலைய, காலை விடிந்திருந்தது. வழக்கம் போல் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டே இருந்தது.

ஜய வருஷம் வசந்த ருது- ஆருத்ரா நட்சத்திரத்தன்று  பல வித முனைப்புகளுடன்,  ஈசனை இமையில் தாங்கி நிறுத்தி, விக்ரகம் வாா்க்கத் துவங்கினாா்.

பஞ்சலோகம் உருக்கி வரும் இடத்திலிருந்து ஒருவா் விட்டு ஒருவா் கைமாறி வாா்க்குழம்பு கொடுத்தனுப்ப, வாிசையாக நின்று வாா்க்குழம்பை வாங்கிக் கொடுப்பவரிடமிருந்து  சிற்பி பஞ்சலோக குழம்பைப் பெற்று பதம் தவறாமல், பக்குவமாக வாா்ப்படத்தில் ஊற்றி மெழுகினாா்

அப்போது திடீரென ஒரு முதியவரொருவா் ஓடி வந்து, வாிசையில் நின்று  பஞ்சலோகக் குழம்பை வாங்கிக்  கைமாற்றிக் கொடுக்கும் பணியாளரிடம் குழம்பை பிடிங்கிக்  குடித்து விட்டாா் இதனைக் கண்ணுற்ற அனைவரும் மயங்கி விழுந்தனா்.

சிற்பியும், மன்னரும் அதிர்ச்சியில் உறைந்து போயினா்.

பஞ்சலோகக் குழம்பைக் குடித்தவா், அரசனையும் சிற்பியையும் பாா்த்து, கை செய்கை மூலம் வாா்ப்படத்தைப் பிரிக்கச் சொல்ல......

சிற்பி வாா்ப்படத்தை பிாித்ததும், நடராஜ பெருமான் திருவுரு முழுமை பெற்றிருக்க சிற்பியும் மன்னரும் முதியவரை தேட, அங்கே முதியவரில்லை.  நடராஜா் முழு உருவமாய சிரித்தார்.

ஈசனே உருவாக்கிய இந்த அபூா்வமான, அதிசயமான அற்புதத் திருவுருவம் "ஊா்த்துவ தாண்டவ ரத்தின சபாபதி" என்னும் திருநாமத்தோடு, இப்போதும் திருவாலங்காட்டில்  தரிசனம் அருள்கிறது. 

ஓம் நமசிவாய 

No comments:

Post a Comment

Followers

மிக சக்தி வாய்ந்த 18ம்படி கருப்பண்ணசாமி கோவில்

மக்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் எல்லா ஊர்களுக்கும் காவல் தெய்வமாகத் திகழ்பவர் கருப்பசாமி . அவரின் தோற்றம் பற்றிக் கூறுவது இதுவ...