தேவாரப் பாடல்கள் பெற்ற சிவாலயங்களின் சிறப்புக்கள் வரிசையில் 169 வதாக நாம் திருஅவளிவணல்லூர் ஸ்ரீ சாட்சிநாதர் மற்றும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி திருக்கோவிலை பற்றி காணலாம்:
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, இத்தலத்திற்கு நம் திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சேக்கிழார், திருமால், காசிபர், அகத்தியர், முதலானோர் வந்து நம் இறைவனை தரிசித்துள்ளனர், இத்தலம் பஞ்சாரண்ய தலங்களுள் இரண்டாவது தலம், வராகவடிவம் கொண்டு திருமால் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.
இத்தலதில் பூஜித்து வந்த சிவாச்சார்யரின் மகள்கள் இருவருள் மூத்தவளின் கணவன் காசி யாத்திரை சென்று வரும் காலத்திற்குள் அவளுக்கு அம்மைவார்க்கப்பட்டு உடல் நலம் கெட்டு உருவின் நிறம் மாறியிருக்க, காசியாத்திரை சென்று வந்த கணவனோ உருவம் மாறிய மனைவியை பார்த்து இவள் தன் மனைவி இல்லையென்றும் இளையவளே தன் மனைவி என்றும் வாதிட்டான்.
இதனால் துடித்த மூத்தவளின் வேண்டுதலுக்கு நம் இறைவனும் இரங்கி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூத்தவளே உன் மனைவி,என்று விளங்க வைத்தார் , மேலும் பொருள் பட அவள் இவளே என்று சுட்டிக்காட்டியதன் காரணமே நல்லூருடன் அவள் இவள் எனும் தொடரையும் சேர்த்து அவளிவணல்லூர் என்றும் இவ்வூரின் பெயர் நிலைத்திற்று , இத்தல இறைவனின் கருவறையில் இச்செய்தியை உணர்த்தும் பிரதிமைகள் உள்ளது, அம்மைவார்க்கப்பட்ட சிவாச்சார்யரின் மூத்த மகள் இத்தல தீர்த்தத்தில் மூழ்கி மீண்டும் பழைய வனப்பும் இழந்த கண் பார்வையையும் மீண்டும் பெற்றதாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment