நீலமேக கருப்புசாமி நாட்டு கருப்புசாமி
நீலமேக சுவாமி இவரை நீலமேகத்தான், அல்லது கார்மேகத்தான்,
கருப்பன், கருத்திணன் அதாவது இன்றைய இந்து மத மாடுலேஷன் கதாப்பாத்திரம் கிருஷ்ணன் என்றும் கூறலாம்.
ஆனால் இவர் உண்மையில் ஆரிய உருவாக்கம் கிடையாது.
குறிப்பாக
சமஸ்கிருத வேதங்களில் சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. தொல் தமிழ் இலக்கியங்களில் மால், வேந்தன், சிவன் போன்ற கடவுள்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மால்" என்றால் "கருமை நிறம்"என பொருள்.
கருப்புசாமி அல்லது கருப்பு என்றால்
மால் பெருமாள்,
வெள்ளைச் சாமி என்றால் சிவன்.
ஐவகை நிலத்திற்கு பல பெருமைகள் உள்ளன. ஐவகை கடவுளரும் தமிழ் நிலத்தின் பெருமையுள்ளது.
மொஹஞ்சாதரோ ஹரப்பா போன்ற நாகரிகங்கள் தொட்டு அதன் நீட்சியாக தமிழகம் வரை இந்த கடவுள்களே ஆதி கடவுள்கள் தான். இவற்றை பின் நாளில்
இதிகாச நாயகர்களாக படைக்கப்பட்டனர்.
தமிழர்கள் இயல்பாகவே கரிய நிறத்தவர்.
உத்திரபிரதேசம் டெல்லி போன்ற இடங்களில் கடல் கிடையாது.
அங்கு விஷ்ணு'வை பாற்கடலில் பள்ளி கொண்டவர் என குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை.
சேர சோழ பாண்டிய நாடுகள் முப்புறமும் கடல் சூழ்ந்த திராவிட நிலம்.
ஆக இயல்பாகவே கருப்பான தமிழர்களின் கடவுள் கருப்பாக இருப்பது வியப்பல்ல.
ஆந்திரா திருவேங்கட மலையில் ஆதி பழங்குடி மக்களால் ஆடு, மாடு, கோழி, பன்றி என விலங்குகளை பலியிட்டு வணங்கப்பட்ட " கருப்புக்காளி"
இராமானுஜரால் எப்படி திட்டமிட்டு திருமால் என்று மாற்றப்பட்டது..?
திரு என்பது
ஒரு தமிழ்ச் சொல்லாகும்.
இச்சொல் ஒருவரைச் சிறப்பிப்பதற்கு முன்னொட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.
அடுத்து மால் - என்றால் கருப்பு.
திரு + மால் = திருமால்.
மலைக்காளி எப்படி திருமாளாக மாற்றினார்கள் பாருங்கள்.
இன்றும் உழுகுடி மக்கள் கருப்பராயன், சுடலை மாடன் சாமிகளை வணங்குவது தொன்றுதொட்டு தொடரும் பாரம்பரியம்.
இந்த கருப்பராயனே - மாலே - பெருமாளே கிருஷ்ணர் எனவும் கிருஷ்ணன் - சியாமளன் என்றாலும் அது கருப்பு நிறத்தைக்கொண்டே
வட இந்திய பெயரிலும் வழங்கப்படுகிறது.
மேலும் உங்களுக்கு தெளிவாக
கூறவேண்டுமெனில்,
மலையாள நாட்டு நம்பூதிரிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளவர் இவர்.
இவரே வைணவ சமயத்தின் பெருமாளாகவும்
தமிழர்களிடையே சிறுதெய்வ வழிபாட்டில் கருப்புசாமியாகவும் கொண்டாடப்படுகிறார்.
சில சிறுதெய்வக் கோயில்களில் கிருஷ்ணரின் நீல நிற உருவ அமைப்போடும் நெற்றியில் நாமத்துடனும் உள்ளார்.
சில இடங்களில் நெற்றியில் பட்டையுடனும் காட்சிக்கொடுப்பார்.
வைரிசெட்டிபாளையம் அன்னை காமாட்சியம்மன் காேவிலில்
முத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள்,
மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
சங்கிலிக் கருப்புசாமி மிகவும் உக்கிரம் கொண்டவராகவும்,
அவரை அடக்கப் பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டுச் சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது
அதாவது ஒருவரை இடத்திற்கு இடம் மாற்றி அமைத்துக்கொண்டது
மனிதர்களின் சுய நலமே தவிர
இங்கே தெய்வங்களின் விருப்பமல்ல.
தமிழர்களின் சிறுதெய்வவழிபாட்டில்
இவருக்கு பலி கொடுத்து
விழா எடுப்பதும்,
வைணவத்தில் இவருக்கு காய்,பழம், வடை, சுண்டல் என சைவ பாத்தார்த்தங்களை படையல் செய்து வழிபடுவதும்
அவரவரின் உள் விருப்பமே.
சரி.
வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமை காலையில் குளித்து முடித்து
வீட்டில் சுத்தமான ஒரு அறையில் அல்லது
பூஜை அறையில் ஒரு சிறு பீடம்
அமைத்து
அதற்கு மஞ்சள், குங்கும், பன்னீர், சந்தனம், புனுகு, ஜவ்வாது போன்றவற்றை வைத்து
அந்த பீடத்தை நீலமேக சுவாமியாக நினைத்து பூமாலை போட்டு
அதன் எதிரில் ஒரு வாழையிலை வைத்து அதில்
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல், வடை, பால், பாயாசம் போன்றவற்றை படையல் செய்து
தூப தீபம் காட்டி சாம்பிராணி போட்டு
வணங்கி,
மூல மந்திரம் :-
"அவ்வும், கிலியும், சௌவும், கிலியும், ஓம் நீலமேக சாமளவண்ணா,
கார்மேக காயம்பு கருப்பையா என் மீது சன்னதங்கொண்டருள் செய்வாய் ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை தினம் 108 உரு
48 நாட்கள் பூஜை செய்து வர
சன்னதம் உண்டாகி அதாவது நம் மீது
நீலமேக சுவாமி இறங்கி
கேட்ட கேள்விக்கு குறி சொல்லலாம்,
பல காரீய சித்திகளும்,
பல வேலைகளும் செய்யலாம்....
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்...
No comments:
Post a Comment