Sunday, August 11, 2024

தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாய தலங்கள்...

தரும் நவ கைலாய தலங்கள்
திருநெல்வேலி – தூத்துக்குடிமாவட்டங்களில் அமைந்துள்ள
நவகைலாசங்களிலேயே 
பரிகாரம் செய்யவேண்டும். 
இந்த ரகசியம்
பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

திருநெல்வேலி – தூத்துக்குடிமாவட்டங்களின் ஊடே பாய்ந்தோடும்தாமிர பரணி நதியின் கரைகளில் நவகைலாசம் என ஒன்பது சிவாலயங்கள்
அமைந்துள்ளன.
இவை நவகிரக பரிகாரஸ்தலங்களாக அமைந்துள்ளன. 

அவை கீழேதரப்பட்டுள்ளன.

பாபநாசம் – சூரியன்

சேரன் மகாதேவி – சந்திரன்

கோடக நல்லூர் – செவ்வாய்

குன்னத்தூர் – ராகு

முறப்ப நாடு – குரு

ஸ்ரீவைகுண்டம் – சனி

தென்திருப்பேரை – புதன்

ராஜாபதி – கேது

சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன்
அகத்திய மாமுனிவரின்
அறிவுரைப்படி  அவரின் சீடர்களில் ஒருவரான உரோமேச மகரிஷி 
தாமிர பரணி நதி
உற்பத்தியாகுமிடத்தில் 
ஒன்பது மலர்களைவிட்டார். 

அவர் மலர்களை விட்ட இடம்   
தற்போதைய பாபநாசம்
திருக்கோயிலாகும்.
 
.அகத்தியரின் சீடர் விட்ட ஒன்பது மலர்கள்தாமிரபரணி நதிக்கரையில் ஒன்பதுஇடங்களில் ஒதுங்கின. 

அந்த ஒன்பதுஇடங்களிலும் 
ஒன்பது கோயில்களை
அகத்தியரின் சீடர் கட்டினார். 

அந்த ஒன்பதுகோயில்களே நவகைலாசங்கள் எனஅழைக்கப்படுகின்றன. 

அகத்தியரின் சீடர்விட்ட மலர்களில் கடைசி மலர் சேர்ந்த
இடமே சேர்ந்த பூமங்கலம் எனஅழைக்கப்படுகிறது. 

தாமிர பரணி நதிகடலில் கலக்குமிடத்திற்கு அருகே
சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

திருநெல்வேலி – தூத்துக்குடிமாவட்டங்களில் அமைந்துள்ளநவகைலாசங்களை சர்ப்ப ரூபம் என
குறிப்பிடுகின்றனர். 

வளைந்துநெளிந்து செல்லும் நதிக்கரையில்அமைந்துள்ள இத்திருக்கோயில்களை கற்பனைக்கோடுகளால் இணைத்துப்பார்த்தால் அது 
சர்ப்ப ரூபமாகவே
காட்சியளிக்கிறது. 

எனவே சர்ப்ப தோச
நிவாரணத்திற்கு இந்த ஒன்பது
கோயில்களையும் ஒரே நாளில்தரிசித்தால் பலன் கிடைக்கும்.

மேலும் இந்த கோயில்கள் அமைந்துள்ள வரிசை முறையை 
கவனித்து பார்த்தால் ஒரு சூட்சுமம் புலப்படுகிறது. 

அதாவதுகிரகங்களின் விம்சோத்தரி தசா வரிசைமுறை எப்படி அமைந்துள்ளதோ, அதேவரிசைமுறையில் இந்த கோயில்கள்அமைந்துள்ளன. 

விம்சோத்தரி தசையில்கிரக வரிசை கேதுவில் தொடங்கி கேது– சுக்கிரன் – சூரியன் – சந்திரன் -செவ்வாய் – ராகு – குரு – சனி – புதன்என அமையும். 

இந்த கோயில்கள்சூரியனில் தொடங்கி சூரியன் –சந்திரன் - செவ்வாய் – ராகு - குரு – சனி– புதன் - கேது – சுக்கிரன் என
வரிசையாக அமைந்துள்ளன.

கும்பகோணத்தை சுற்றி நவக்கிரக பரிகாரஸ்தலங்களாக ஒன்பது திருக்கோயில்அமைந்துள்ளன.  

கோட்சார கிரகங்களால் உண்டாகும்பாதிப்புகளிலிருந்து விடுபட மட்டும்இந்த திருக்கோயிகளில் பரிகாரங்கள்
செய்யலாம். 

தசா – புக்திகளால் உண்டாகும்பாதிப்புகளிலிருந்து விடுபடதிருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள
நவகைலாசங்களிலேயே 
பரிகாரம் செய்யவேண்டும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...