Sunday, August 11, 2024

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் மற்றும் சுந்தரர் முக்தி தளம்...

திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் - இசைஞானியார் - சடைய நாயனார் - ஞான சிவாச்சாரியாருக்கு - சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தலம்.  நாயனார் குடும்பம்.
திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சுந்தரர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும். இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.  மேலும் இது சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலமும் ஆகும்.
இது விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவர் திருப்பெயர்: பக்தஜனேஸ்வரர், திருநாவலேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மனோன்மணி, சுந்தரநாயகி, சுந்தராம்பிகை.
தல மரம்: நாவல்.
தீர்த்தம் : கோமுகி தீர்த்தம்.
வழிபட்டோர்: சுக்கிரன்.
இத்தலம் கிருதயுகத்தில் விஷ்ணுவாலும, த்ரேதாயுகத்தில் சண்டிகேஸ்வரராலும், த்வாபரயுகத்தில் ப்ரம்மாவாலும், கலியுகத்தில் சுந்தரர் வழிபட்ட தலம் சவப்பிரியர் என்பவர் த்ரேதாயுகத்தில் இத்தல ஸ்வயம்பு லிங்கமான  பக்தஜனேஸ்வரரை பூஜித்து வழிபட்டதனால் சண்டிகேஸ்வரர் என்ற பட்டம் பெற்றார்.  ஆதிஷேஷன் உமிழ்ந் நஞ்சானால் கருடன் கருநிறமடைந்தான்.  இத்தல இறைவனை வழிபட்டதனால் கருடன் விஷம் நீங்கி தனது உண்மையான உருவம் பெற்றதாக கருதப்படுகிறது.
அசுர குருவான நவகிரகங்களில் முக்கியமாக விளங்கும் சுக்கிரன் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபனம் செய்து முறைப்படி வழிப்பட்டு பூஜைகள் நடத்தி இறையருள் பெற்றார்.  இத்தலத்தில் சுக்கிரன் ஸ்தாபனம் செய்த சிவலிங்கம் நவக்கிரஹ சந்நிதிக்கருகே உள்ளது.  வெள்ளிக்கிழமைகளில் இந்த லிங்கத்திற்கு விஷேச அபிஷக வழிபாடுகள் நடக்கின்றன.  இங்கு நவக்கிரஹ சன்னிதியில் சூரியன் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார்.  பங்குனி மாதம் 23 முதல் 27 வரை சூரியனின் ஒளி கதிர்கள் மூலவர் மீது விழுவது விஷேஷமாக கருதப்படுகின்றது.
அமிர்தத்தை கடைந்த காலத்தில் வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை இறைவன் விழுங்கி நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்று ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில் ஸ்வயம்புவாக தோன்றியதாக கருதப்படுகிறது.  இத்தல திருத்தல திருக்கோவில் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களால் விரிவாக கட்டப்பட்டது.  ஜம்புநாதேஸ்வரர் என்று பண்டைய காலத்திலிருந்து அழைக்கப்பட்டு வந்த ஸ்வயம்பு லிங்கம் கலியுகத்தில் சுந்தரரால் திருநாவலீஸ்வரர் என்ற நாமத்தினால் வழிபட்டு இத்தலத்தை திருநாம நல்லூர் என்று அழைக்கப்பட்டார்.

அருணகிரிநாதரின் திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).

இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி. சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன. 

சடையனார் நாயனார் – இசைஞானியார் :

இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.

திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

சிவன் தொண்டு ஆற்றி பேரும் புகழோடு முக்தியும் அடைந்தவர்களில்  அறுபத்தி நான்கு நாயன்மார்கள் மிகமுக்கியமானவர்கள்.   அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இருவர் மட்டுமே பெண்கள். இருவரில் இசைஞானியார் ஒருவர். இன்னொருவர் கையிலாயத்தில் தன் கால் படக்கூடாதுன்னு தலைக்கீழாய் நடந்த காரைக்கால் அம்மையார். மற்றொருவர் மங்கையர்கரசியார். மூன்றாமவர் இசைஞானியார். நால்வர் என அழைக்கப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயன்மாரை பெற்றதால் நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்தவர். இவரின் கணவரும், மகனும்கூட நாயன்மார்களே. அதனால இவர்களை நாயன்மார்கள் குடும்பம்ன்னு சொல்வதில் தவறில்லை.

நித்தியக்கன்னியான தமிழின் முப்பிரிவுகளில் ஒன்று இசை.  புல், பூண்டு, முதல் இறைவன் வரை இசைக்கு மயங்காதவர் யாருமில்லை. இசையால் (ஆமிர்தவர்ஷினி ராகம்) மழையை கொண்டு வந்த கதையெல்லாம் இங்குண்டு. அப்பேற்பட்ட இசையில் ஞானம் கொண்டவர்தான் சோழ நாட்டுக்குட்பட்ட   திருவாரூரில் பிறந்தார். . அவர் தந்தை சிறந்த சிவபக்தர். அவரைப்போலவே சிறுவயதிலிருந்தே சிவன்பால் பற்றுக்கொண்டு வளர்ந்து வந்தார்.

சடையனார் நாயனார் தனது மாமனார் மற்றும் துணைவியார் வழியில் அயராது சிவத்தொண்டு செயது வந்தார்.  

சடையனார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்  கொண்டாடப்படுகிறது.  இசைஞானியார் குருபூசை நாள் : சித்திரைச் சதயம் நட்சத்திரத்தில்  கொண்டாடப்படுகிறது.

இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.  சடைய நாயனாரும் இசைஞானி அம்மையாரும் தவமிருந்து பெற்ற தங்கள் பிள்ளைக்கு நம்பியாரூரார் என்று இறைவனது திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள். ஒரு நாள் நம்பியாரூரார் சிறு தேர் உருட்டி வீதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்த நரசிங்கமுனையார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.  பால் மணம் மாறா பாலகனின் அழகிலும், தெய்வ ஒளியை ஏந்தியிருக்கும் அத்திருமுகத்தையும் கண்டு மனம் இன்புற எப்படியாயினும் இந்தக் குழந்தையை நம்மோடு அரண்மனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்னும் அவா பிறந்தது. தேரிலிருந்து இறங்கி குழந்தையைத் தூக்கி அணைத்து உச்சி முகர்ந்த அரசன், அந்தக்குழந்தையை கையில் ஏந்தியபடி சடைய நாயனாரின் வீட்டுக்கு வந்தான்.
அரசனின் வரவை எதிர்பாராத சடைய நாயனாரும், இசைஞானியாரும் அவரை வரவேற்க, தம்முடைய பால்ய நண்பனான சடைய நாயனா ரைக் கண்டதும் அரசருக்கு உவகை பொங்கிற்று. நண்பா உன் குழந்தையின் அழகும் ஒளியும் என்னைக் கவர்ந்துவிட்டது. இவனை என்னுடன் அழைத்து சென்று அரண்மனையில் வளர்க்க விரும்புகிறேன் என்றார்.  உவகையோடு அரசனின் வேண்டுக்கோளுக்கிணங்க நம் குழந்தை அரண்மனையில் வளரவேண்டும் என்பது திருநாவலூர் பெருமானின் விருப்பம் போல என்று அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு அனுப்பி வைத்தார்கள். அதனால் தான்  சேக்கிழார்  இவரை மேம்படு சடையனார் என்று புகழ்கிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருத்தொண்ட தொகையில் தங்கள் பெற்றோர்களைப் பற்றி சிறபித்துக் கூறியிருக்கிறார். சடைய நாயனாரும், இசைஞானியாரும் அயராது சிவனடியார்களின் தொண்டில் ஈனுபட்டு தவ புதல்வனான  சுந்தரமூர்த்தி நாயனாரை பெற்று அவர்களைப்போல் சிவத்தொண்டாக திகழ்ந்ததால் சடைய நாயனாரும், இசைஞானியாரும் 63 நாயன்மார்கள் பட்டியலில் இடம்பெற்று இறைவனின் திருவடியை அடைந்தார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...