Thursday, August 22, 2024

நம்மை சோதிக்கும் பூத கணங்கள்_

_நாம் அறியாமல் நம்மை சோதிக்கும் பூத கணங்கள்_

பூத கணங்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பழமையான கோவில் கோபுரங்களில் நான்கு திசைகளிலும் வீற்றிருக்கும் இவை, சிவனுக்கு சேவை செய்ய பிறப்பிக்கப்பட்டவை. 

இவைகள் நம் வாழ்விலும் சில இன்ப துன்பங்களை ஏற்படுத்த வல்லவை.

இதை பற்றி பழம்பெரும் கிரந்தங்களில் பல குறிப்புகள் உண்டு. 
தற்காலத்திலும் அவை பொருந்தும்.

இந்த முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தரும் என பார்ப்போம்.

காம பூதம் : பெயரே விளக்கம் தரும். ஒருவரை காமத்தில் மோகம் கொண்டு அலைய செய்து வீணாக்கும்.

ராட்சச பூதம் : மனிதனை ராட்சச குணம் கொள்ள செய்யும்.

வேதாள பூதம் : அடுத்தவரை மதியதிருத்தல், தன்னை தானே அழித்து கொள்ளல்.

கிரண பூதம் : மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.

ஷூஸ்மாண்ட பூதம் : நற் சகவாசம், ஆன்மீக பிரியம் ஏற்படுத்தும்.

யக்ஷ பூதம் : தற்கொலைக்கு தூண்டும்.

பைசாச பூதம் : தெய்வத்தை நிந்திக்க செய்யும்

சித்த பூதம் : ஞானமளிக்கும்

குரவ பூதம் : பிறருக்கு ஞானத்தை போதிக்க செய்யும்.

கந்தர்வ பூதம் : அழகிய தேகத்தை தரும்.

அசுர பூதம் : பிராமண துவேஷம்,
ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ள செய்யும்.

முனி பூதம் : சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.

விருத்த பூதம் : உடல் கோணலை கொடுக்கும்.

தேவ பூதம் : தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ள செய்யும்.

வருண பூதம் : நீர் நிறைந்த பிரதேசத்தில் வாசம் கொள்ள செய்யும்.

அர்த்தபிதா பூதம் : சோம்பலை கொடுக்கும்.

ஈசுர பூதம் : சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச்செய்யும்.

வித்தியுன்மாலி பூதம் : பயம் கொள்ள செய்யும்.

நிகட பூதம் : பெண்கள் மீது நாட்டம்.

மணிவரை பூதம் : எவற்றிற்கும் பயமில்லா  தன்மையையும், அதீத கோபத்தையும் கொடுக்கும்.

குபேர பூதம் : தன விருத்தி.

விருபாச பூதம் : தேகத்தில் வலிமையுண்டாக்கும்.

சக பூதம் : பித்தம், சதா பயம்.

சாகோர்த்த பூதம் : நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை.

யாகசேனா பூதம் : பெருமை, தற்புகழ்ச்சி.

நிஸ்ததேச: பெண்களை இம்சித்து புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும்.

இந்திர பூதம் : குறையாத தனத்தை தரும்.

நாக பூதம் : மயான வாசம், மலை வாசம்.

விசாக பூதம் : எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறி கொண்டிருத்தல்.

கசுமால பூதம் : அதீத தீனி எண்ணம்.

அசாத்திய பூதம் : வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல்.

பித்த பூதம் : மன சுழற்சி, பைத்திய நிலை.

ப்ரம்ம ராக்ஷச பூதம் : தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.

மேற்கண்டவற்றை நீங்கள் ஆழ்ந்து நோக்கினால் நம்மிடம், நாம் பார்க்கும், பலரிடம் மேற்கண்டவற்றை காணலாம்.

இவைகள் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டவை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...