Thursday, August 22, 2024

மஹா சங்கடஹர சதுர்த்தியின் மகிமை கள்......

மஹா சங்கடஹர சதுர்த்தியின் மகிமை கள்...... 


விநாயகரை வணங்கினால் வினைகள் தீரும். கணங்களின் அதிபதி ஆதலால் இவர் கணபதியாவார். விக்னங்களை போக்குபவர் விநாயகர்.

விநாயகருக்கு உகந்த விரதம் சதுர்த்தி விரதம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் துன்பங்கள், துயரங்கள், சங்கடங்களை நீக்கி சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். 

திதி வரிசையில் நான்காவது வரும் திதி சதுர்த்தி திதியாகும். இதில் தேய்பிறையில் வரும் 4 வது திதியை சங்கட ஹர சதுர்த்தி திதி என்கிறோம். 

இந்த சதுர்த்தி விரதம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வேண்டி, இருக்கும் விரதம். 

சங்கடஹர சதுர்த்தி என்பது சந்திரன் உதயமாகும் போது விநாயகரை வழிபட்டு சந்திரனுக்கு பூஜை செய்வதாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். 

இரவு சந்திரனுக்கு பூஜை முடிந்தபின் அந்த பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு தனிமையில் படுத்து உறங்க வேண்டும். 

செல்வ வளம் தரும் செவ்வாய் சதுர்த்தி
ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை சதுர்த்தியில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் புராணம் சொல்கின்றன. 

புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். 

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...