Thursday, September 5, 2024

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?
பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் நீங்கள் வாங்கி வரும் விநாயகர் சிலைக்கு வெவ்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்தால், அதற்கான விஷேச பலன்கள் கிடைக்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று தண்ணீர், நல்லெண்ணெய்,பஞ்சாமிர்த, பால், மஞ்சள் பொடி, தயிர், இளநீர்,கரும்புச்சாறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து அதற்கான் அபலன்களைப் பெற்று பெரு வாழ்வு வாந்திடுங்கள்.

பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் நீங்கள் வாங்கி வரும் விநாயகர் சிலைக்கு வெவ்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்தால், அதற்கான விஷேச பலன்கள் கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று தண்ணீர், நல்லெண்ணெய்,பஞ்சாமிர்த, பால், மஞ்சள் பொடி, தயிர், இளநீர்,கரும்புச்சாறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து அதற்கான் அபலன்களைப் பெற்று பெரு வாழ்வு வாந்திடுங்கள்.
இந்த அற்புத தினத்தில் எந்த பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

தண்ணீர் அபிஷேகம் - மன சாந்தி, அமைதி ஏற்படும்.
 

நல்லெண்ணெய் அபிஷேகம் - மனதில் தூய்மையான எண்ணங்கள் உண்டாகும். பக்தி ஏற்படும்.

பஞ்சாமிர்த அபிஷேகம் - உங்களுக்கு நீண்ட ஆயுளும், செல்வ கடாட்சம் ஏற்படும்.



பால் அபிஷேகம் - உங்கள் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆயுள் அதிகரிப்பதோடு, தோஷங்கள் நீங்கும்.


மஞ்சள் பொடி அபிஷேகம் - ராஜ வசியம் ஏற்படும். உங்களுக்கு மற்றவர்கள் உதவ முன்வருவார்கள்.


தயிர் அபிஷேகம் - புத்திர பாக்கியம் ஏற்படும்.


விநாயகர் சிலை கொண்டு வருவதற்கு முன் மற்றும் அதன் பின் எப்படி வழிபட வேண்டும்?


இளநீர் அபிஷேகம் - மன அமைதியும், அறிவு கூர்மை ஏற்படும். உங்களின் கஷ்டங்கள் தீரும்.


கரும்புச்சாறு அபிஷேகம் - உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கல்வி, கேள்விகளில் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.


அரிசி மாவு அபிஷேகம் - வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லை நீங்கும்.


32 வடிவங்களில் அருளும் விநாயகரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சந்தன அபிஷேகம் - உடல், மன குளிர்ச்சி பெறும். நிதி நிலை பெருகும். மன அமைதி ஏற்படும்.


சொர்ண அபிஷேகம் - சிறப்பான எதிர்காலம் கொடுக்கும். நினைத்த காரியங்கள் இனிதாக நடந்தேறும்


கணபதிக்கு வஸ்திரம் அணிவித்தால் - மதிப்பு, மரியாதை காக்கப்படும்.


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ விநாயகர் சதுர்த்தி அன்று ஷோடஷோபாச்சார பூஜை வழிபாடு முறைகள்

எலுமிச்சை பழம் அணிவித்தால் - துர்க்கை அருள் கிடைக்கும். மரண பயம் நீங்கும்.


மலர்களால் அர்ச்சனை செய்தால் - குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள், பிரச்னைகள் நீங்கி மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கை வசந்தமாகும்.


விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்: விநாயகர் அகவல், காயத்ரி மந்திரம்


தேன் அபிஷேகம் - திருப்புறப்பயத் தலத்தில் இருக்கும் விநாயகர் கடல் சிப்பி, கிளிஞ்சில்களால் செய்யப்பட்டவர். இவர் தேன் அபிஷேக பிரியர். இவருக்கு தேனாபிஷேகம் செய்யப்படும் போது ஒரு சொட்டு கூட கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகருக்குள் போவதைக் காணலாம்.


திருநீற்று அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் கண்பதிக்கு திருநீறு அபிஷேகம் செய்து வர நீங்கள் நினைத்த காரியம் எளிதாகவும், சிறப்பாகவும் நிறைவேறும்..



கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் பிள்ளையாருக்கு கஸ்தூரி மஞ்சல் அபிஷேகம் செய்து வந்தால் சிறப்பான வெற்றியைப் பெற்றிடலாம்.

அன்ன அபிஷேகம் - பூர நட்சத்திர நாளில் கணேஷருக்கு அன்ன அபிஷேகம் செய்து வர உங்கள் இல்லத்தில் அனைத்து வளங்களும் கிடைக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...