Thursday, September 5, 2024

நாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர் கோவில்.



                   

நாளுக்கு நாள் வளரும்
 அதிசய விநாயகர் கோவில். 

                  வரசித்தி விநாயகர் கோவில்...!


 ஒவ்வொரு கோவிலுக்கும் ஏதாவதொரு தனிச்சிறப்பு இருக்கும். அந்த வகையில் வரசித்தி விநாயகர் கோவிலின் சிறப்புகளை பற்றி இங்கு காண்போம்.


 ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

கோவிலின் சிறப்புகள்:

இக்கோவிலானது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புமிக்க கோவிலாகும்.


 இக்கோவிலின் மூலவரான வரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த விநாயகர், கிணற்றில் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார். இவர் தோன்றிய கிணறு இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்று வரை இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

விநாயகரின் மகிமையும், வியக்க வைக்கும் உண்மையும்:

இந்த வரசித்தி விநாயகருக்கு கிணற்றுக்குள்ளேயே சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் விநாயகரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை சற்று கவனித்து பார்த்தால் 
 இன்னும் நம்மை பிரம்மிக்க வைக்கும் நிகழ்வாக இத்தல விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம். முதலில் பொருந்திய வெள்ளி கவசம் காலப்போக்கில் வரசித்தி விநாயகருக்கு பொருந்தவில்லையாம்.

 இந்த விநாயகர் சிலை வளர்ந்துகொண்டே வருவதால் கவசம் பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் வரசித்தி விநாயகரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறப்படுகிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

பாரிஜாத வனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,  திருக்களர்,  திருவாரூர்.  திருவாரூர் மாவட்டம். +91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட...