Thursday, September 5, 2024

பிள்ளையார் கடவுளின் வரலாறு...

_பிள்ளை யார் ?_

இந்து மக்கள் முதல் கடவுளாக வழிபடும் கொண்டிருக்கக் காரணம் என்ன ?
பிள்ளையார் கடவுளின் வரலாறு...

பிள்ளையார் அல்லது விநாயகர், கணபதி (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: கணேஷா;)

இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதல் முதன்மைக் கடவுள். 

விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

பிள்ளையார் :-

அதிபதி அனைத்திற்கும், பூதகணங்களுக்கும், புதிய தொடக்கம், நிறைவேறுதல், மகிழ்ச்சி ஆகியவற்றின் கடவுள்

வேறு பெயர்கள் :-
விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர் , கணபதி, ஐங்கரன், ஆனை முகன், நர்த்தன, கற்பக, விக்ன, பால, மாணிக்க, சக்தி, உச்சிஷ்ட, வல்லப, சித்தி, முக்குறுணி,  விநாயகர்

சமசுகிருதம்:- गणेश கணேஷா,
மந்திரம்:- ஓம் கணேசாய நமஹ,

ஆயுதம் :-

பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சத்தி(வேல்), அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு முதலான அனைத்து ஆயுதங்களும்

துணை :-
சித்தி, புத்தி

பெற்றோர்கள் :-
சிவபெருமான், பார்வதி அம்மை

சகோதரன் :-
முருகப்பெருமான்

குழந்தைகள் :-
சுபன், லாபன், சந்தோஷி மாதா

வாகனம் :-
சுண்டெலி (மூஞ்சுறு)

நூல்கள் :-
கணேச புராணம், விநாயகர் அகவல்

சமயம் :-
காணாதிபத்தியம்

விழாக்கள்:-
விநாயகர் சதுர்த்தி

விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம்  எனப்படுகிறது. 

இந்தக் காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. ஸ்ரீவைணவர்கள், விநாயகரைத் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள்.

பெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள் காணபத்தியம் :-

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் சகோதரர்கள் கூறப்படுகிறார். 
இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’ :-

கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

கிருத யுகம் :-
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதாயுகம் :-
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

துவாபரயுகம் :-
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலி யுகம்‌:-
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

விநாயகர் பிறப்பு :-
விநாயகர் பிறப்பு பற்றிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. 

அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். 

அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.

பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். 

கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். 

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். 

பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்

சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். 

ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். 

அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் "விநாயகர்" என்ற பெயர் சூட்டினார். 

மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். 

பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். 

பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். 

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். 

அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், 

அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.

தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு :-

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார்.

இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி , கல்வெட்டு,

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவுருவ விளக்கம் :-

திருவடி ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

பெருவயிறு :-
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஐந்துகரங்கள் :-
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். 
தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. 

அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

கொம்புகள் :-
மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

தாழ்செவி :-
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

விநாயகர் மூர்த்தங்கள் :-

பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாகக் காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோயில்களில் காட்சியளிக்கிறார்.

நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்.

நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர். சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள் :-

உச்சிட்ட கணபதி
உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி,
ஏகதந்த கணபதி,
ஏகாட்சர கணபதி,
ஏரம்ப கணபதி,,,

சக்தி கணபதி,
சங்கடஹர கணபதி,
சிங்க கணபதி,
சித்தி கணபதி,
சிருஷ்டி கணபதி,

தருண கணபதி,
திரயாக்ஷர கணபதி,
துண்டி கணபதி,
துர்க்கா கணபதி,
துவிமுக கணபதி,
துவிஜ கணபதி,
நிருத்த கணபதி,

பக்தி கணபதி,
பால கணபதி,
மஹா கணபதி,
மும்முக கணபதி,
யோக கணபதி,
ரணமோசன கணபதி,
லட்சுமி கணபதி,

வர கணபதி,
விக்ன கணபதி,
விஜய கணபதி,
வீர கணபதி,
ஹரித்திரா கணபதி,
க்ஷிப்ர கணபதி,
க்ஷிப்ரபிரசாத கணபதி,

விநாயக சதுர்த்தி ;-

ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும்.!

மும்பையில் தனிப்பெரும் பெரும் விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா 

துர்வா கணபதி விரதம் துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.

விநாயகர் அகவல் :-

ஔவையார், விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத் தொடங்கும் விநாயகர் அகவல்.

விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை

கணேச பஞ்சரத்னம் :-
கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.

தமிழ் நாட்டின் சிறப்பு;-

தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்துக் கூரையும் விமானமும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட ஆடம்பரமான இல்லாமல்...
அரசமரத்தடி, 
குளக்கரை, 
முச்சந்தி, 
நாற்சந்தி, 
தெருமுனை 
முக்குக்கு முக்கு பல இடங்களில் என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

ரூபாய் நோட்டில் :-
சர்வதேச அளவில் பல நாடுகளில்... ஸ்ரீ மஹா கணபதி வழிபாடு உண்டு!

மற்றும் இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.

நமது வீடுகளிலும் மற்றும் கோயில்களில் முதல் கணபதி வழிபாட்டில் செய்து பின் இஷ்டதெய்வத்தை வழிபாடு செய்வோம்...

நம் வினைகள் தீர்க்கும், கஷ்டங்கள் தீர்க்கும், 
பிள்ளையாரை வழிபடுவோம் வாழ்வில் வளமும், நலமும் பெறுவோம்.! ஞானம் பெற்றவரிடம் உண்மையின் நறுமணம் இருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...