Friday, September 6, 2024

விநாயகர் சதுர்த்திக்கான பூஜை நேரம் வழிபாடு பற்றிய பதிவுகள்

விநாயகர் சதுர்த்திக்கான பூஜை நேரம் வழிபாடு பற்றிய பதிவுகள் :*
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் 3 நாட்களும், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் வரையும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது. 

விநாயகர் புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, விநாயகப் பெருமான் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும் என்பது ஐதீகம். 

விநாயகர் சதுர்த்தில் நாளில், வீடுகளிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும், வழிபாடு செய்வதற்கான நல்ல நேரம் மற்றும் சிலையை நிறுவுவது, 

*விநாயக சதுர்த்தி எப்போது?*

செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 5.35 மணிக்குள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான சதுர்த்தி திதி உள்ளது.

உதய திதியின்படி, விநாயக சதுர்த்தி விரதம் செப்டம்பர் 7-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டும் என்பதால் அன்றைய தினம் சிலை நிறுவி வழிபாடு செய்ய உகந்தது. 

*வழிபாட்டுக்கான நேரம் :*

பஞ்சாங்கத்தின் படி, பிரம்மா, சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் இந்திர யோகத்துடன், சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரங்களும் விநாயகர் சதுர்த்தி அன்று உள்ளன. புராணங்கள் படி விநாயகப் பெருமான் மதிய வேளையில் பிறந்தார் என்பது ஐதீகம்.

அதனால்தான் விநாயகர் வழிபாட்டிற்கு மதிய நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 7 ஆம் தேதி காலை 11:00 மணிக்கு மேல் மதியம் 01:30 மணிக்கு பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை செய்ய நல்ல நேரமாக இருக்கும். 

10 நாட்கள் வரை விநாயகர் வழிபாடு செய்யும் வழக்கம் உடையவர்கள் வரும் செப்டம்பர் 17-ம் தேதி அன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். 

*விநாயகர் சிலையை நிறுவுதல் :*

வீட்டில் விநாயகர் சிலையை நிறுவும் போது திசையை மனதில் வைத்து செயல்படுவது மிக முக்கியம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலையை சரியான திசையில், சரியான வழியில் நிறுவுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சாஸ்திர படி வீட்டின் வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். வடகிழக்கு மூலையில் காலி இடம் இல்லை என்றால், கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையிலும் சிலையை நிறுவலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் சிறப்பு வாய்ந்தது. விநாயக சதுர்த்தி அன்று, மக்கள் விநாயகப் பெருமானின் சிலையை வெகு விமரிசையாக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். 

விநாயகர் சிலையை நிறுவும் வரை விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விநாயகப் பெருமான் முழுச் சடங்குகளுடன் வழிபடப்படுகிறார். பின்னர் அனந்த் சதுர்தசி நாளில், விநாயகரை மக்கள் நீர்நிலைகளில் கரைக்கின்றனர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...