அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
*ஊர்:*
அவனியாபுரம், மதுரை
*மாவட்டம்:*
மதுரை
*மூலவர்:*
கல்யாண சுந்தரேஸ்வரர்
*தாயார்:*
பாலமீனாம்பிகை
*தல விருட்சம்:*
வில்வ மரம்
*தீர்த்தம்:*
சூர்ய தீர்த்தம்
*தொன்மை:*
1000 ஆண்டுகளுக்கு முன்
*தல வரலாறு:*
இக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பாண்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் போது தோழியர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment