Saturday, April 12, 2025

கோவிலில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதன் காரணம்.




கோவிலில் சிலைகளுக்கு பால் மற்றும் பல விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வதன் காரணம்.
மந்திரங்களின் உச்சரிப்புக்கு மத்தியில் பூஜிக்கப்படும் தெய்வத்தின் உருவத்தை நீராடி அர்ச்சகர்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது . பொதுவாக, பால் , தயிர் , நெய் , தேன், பஞ்சாமிர்தம் , நல்லெண்ணெய் , பன்னீர் , சந்தனம் போன்ற பிரசாதங்களை அபிஷேகம் செய்யப்படும் வகையைப் பொறுத்து மற்ற பிரசாதங்களில் ஊற்றலாம். இந்த சடங்கு வழக்கமாக இந்து கோவில்களில் செய்யப்படுகிறது.

சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் என்றெல்லாம் உண்டு. அலி கல் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது. பதுமை செய்வது போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே இந்த அலி கல்லைப் பயன்படுத்துவார்கள்.

ஆண் கல்தான் முக்கியமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கற்களுக்கு செதுக்கி செதுக்கி உயிரூட்டம் கொடுக்கிறார்கள். இந்தக் கற்கள் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு வஸ்து. இதற்கு இயற்கையோடு இயற்கை, கல் என்பதும் இயற்கை, தர்பை என்பதும் இயற்கை. இந்த தர்பையால்தான் கும்பாபிஷேகத்தின் போது இறைவனுடைய சிற்பத்தைத் தீண்டுகிறோம். அதன்மூலம் அதற்கு ஒரு உயிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறோம்.

இதேபோல அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனுடைய அழைப்பு கூடுகிறது. பால் அபிஷேயம் என்றால் ஒரு அழைப்பு, தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு.

அபிஷேக நீரை எடுத்து சென்று வீட்டில், தோட்டத்தில்,, கிணற்றில் மற்றும் பல இடங்களில் தெளிப்பதை நாம் இன்றும் கிராமங்களில் காணலாம்.

இது ஒரு நுண்ணுயிர் பெருக்கத்திற்காக இருந்திருக்கலாம்.

பஞ்ச் கவ்யா மற்றும் நவகவ்யா தயாரிக்கும் பொருட்களும், அபிஷேகம் செய்யப்படும் பொருட்களும் (மாட்டு சாணத்தை தவிர) ஒத்திருப்பதை காண்க.

அபிஷேகம் செய்யும் அனைத்து பொருட்களும் நுண்ணுயிர் பெருக்கி ஆகும். அபிஷேகம் செய்யப்பட்ட அனைத்து திரவங்களும் ஒரு தொட்டியில் கலக்கும். இங்கு நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு செறிவூட்டப்பட்ட நீராக இருக்கும். இது பயிர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

பண்டைய காலத்தில் கோயில்கள் பெரும்பாலும் ஆறு மற்றும் குளக்கரைகளிலும் அமைந்திருந்தது. அபிஷேகம் செய்யும் நீர் தொட்டிகளில் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்பட்டு ஆறு மற்றும் குளத்து நீரில் கலந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது பயிர் செழித்து வளர பயன்படும்.

(வாழைப்பழம் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து காற்று புகாமல் மூடி வைத்து 21 நாட்களுக்கு பிறகு வடிகட்டி 1 லிட்டர் நீரில் 10 மில்லி கலந்து தெளிக்க செடி நன்றாக வளரும்)

பொதுவாக இறைவனை எவ்வாறு பார்க்கிறோம். சில நேரம் நண்பனாகப் பார்க்கிறோம், சில நேரத்தில் தாய், தந்தையாக நேசிக்கிறோம். அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்து விட்டு நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம்.

ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பவானி (திரு நணா) சங்கமேஸ்வரர் திருக்கோயில்

*⚜️ பவானி*  (திரு நணா)   *சங்கமேஸ்வரர் திருக்கோயில்*.               *வழிபட்டவர்கள்*  :   அரி அயன் சரஸ்வதி காயத்திரி சாவித்திரி ப...