தமிழகத்தின் தலைகீழ் செதுக்கப்பட்ட அதிசயக் கோயில் – கழுகுமலை வெட்டுவான் கோயில்
தமிழர்களின் பழம்பெரும் கட்டிடக் கலை என்ன வளமை கொண்டது என்பதை உலகத்துக்கு நிரூபிக்கும் ஒரு அற்புதம் கழுகுமலை வெட்டுவான் கோயில்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் குடைவரை கோயில், கிபி 800ல் பாண்டிய மன்னர்களால் மலையை நேரடியாகக் குடைந்து உருவாக்கப்பட்டது. ஒரு பெரிய பாறையைப் ‘ப’ வடிவில் வெட்டி அதின் நடுவில் ஒரே கல்லால் மேற்கிலிருந்து கீழே நோக்கி செதுக்கப்பட்ட கோயில் இது.
மேல் பகுதியில் கோபுரம், கீழே சிற்பங்கள், கருவறை, அடித்தளம் என அனைத்தும் தலைகீழாகக் கட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு — இதுவே இந்தக் கோயிலை இந்திய அளவிலும் உலக அளவிலும் வியக்க வைக்கும் அற்புதமாக்குகிறது. இயற்கை பாறைக்குள் செதுக்கப்பட்ட இந்த கோயிலின் சிற்பங்கள் மிக நுணுக்கமாக அமைந்துள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூதகணங்கள் போன்ற பல தெய்வங்களின் அழகிய வடிவங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், அரிதாகக் காணப்படும் மிருதங்க தட்சிணாமூர்த்தி சிலை கூட இங்கு மட்டுமே உள்ளது.
இந்த கோயில் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் இருந்தாலும், செதுக்கப்பட்டுள்ள பகுதி ஒரு சிறந்த கலைக்கூடம் போல தெரிகிறது. பணிகள் நடந்து கொண்டிருந்தபோது பாறை வெடிப்போ அல்லது அரசர் இறப்போ காரணமாகவே நிறுத்தப்பட்டதாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
கழுகுமலை முழுவதும் பாண்டியர்களின் ஜைனர் மரபின் தொல்லியல் சான்றுகள் நிறைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிலைகள், 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் கொண்ட ஜைனர் படுக்கைகள் இங்குள்ள மலைக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
இதோடு சேர்ந்து, இந்த மலையின் கீழ்பகுதியில் மேற்கு நோக்கி நிற்கும் அரிய வடிவ முருகன் குடைவரைக் கோயிலும் உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய தலம் இது. வள்ளி – தெய்வானையுடன் அழகாக காட்சி தரும் இத்தலம் ராஜயோக இடமாகப் போற்றப்படுகிறது.
ஒரே கல்லிலிருந்து தலைகீழாக செதுக்கப்பட்ட இந்த வெட்டுவான் கோயில், தமிழகத்தின் தொன்மையையும், தமிழர் கட்டிட அறிவையும் உலகம் முன் உயர்த்திக் காட்டும் ஒரு மறக்க முடியாத மரபுக் பொக்கிஷம்.
“ஒரே கல்லில் மேலிருந்து கீழாக செதுக்கிய தமிழர்களின் அதிசய கோயில்!”
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment