Friday, October 4, 2024

சக்தி வாய்ந்த மரகதலிங்கம்.

மரகதலிங்கம்
அபூர்வ சக்தி வாய்ந்த மரகதலிங்கம்.
அதைப் பற்றிய விரிவான விளக்கம்

மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது.

இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை.

கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது. இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது.

புதன் கிரக ஆற்றலை நிரம்ப பெற்ற ரத்தினமான மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி, பதவி, போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .
சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .

மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.
ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில்

வேதாரண்யம்,

திருக்குவளை,

திருக்கரவாசல்,

திருவாரூர்,

திருநள்ளாறு,

நாகப்பட்டினம்,

திருவாயுமூர்

ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க ஸ்தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.
சப்தவிடங்க தியாகத் ஸ்தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது . அன்பர்கள் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஸ்தல லிங்கம்.
சகலமும் சிவார்ப்பணம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

திருநெல்வேலி நவ கைலாய தலங்கள்....

"நவ கைலாய தலங்கள்' 
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். 

சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். 

அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.

நவ கைலாயம் தலங்களின் விபரம்:-
சூரிய தலம்........

தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய திருத் தலம் இது. 

கோயிலின் எதிரில் உள்ள தாமிரபரணி நீராடுபவரது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இத் திருத் தலத்தின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.

பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு சமவெளியினை அடையும் இடமே பாபநாசம். அகத்திய முனி தங்கி வழிபட்ட இத் திருக்கோயிலின் 80 அடி உயர ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.

அகத்திய முனிவருக்கு பெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் திருமணக் கோல காட்ச்கியளித்த புண்ணிய தலம் இது. விராட்டு என்பவர் மோட்சம் அடைந்த தலம் இது. மூலவர் வயிராச லிங்கம், பழமுறை நாயகர், முக்காளாலிங்கர், பரஞ்சோதிலிங்கர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.

சந்திர தலம்........

தலம்: சேரன்மகாதேவி
அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது நவ கைலாயமாகும். 

தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இது சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும்.

மூலவர் சுயம்பு மூர்த்தியான " ஸ்ரீ அம்மநாத சுவாமி ", அம்பாள் " ஆவுடை நாயகி ". முன்னொரு சமயம் இத் தல மூலவருக்கான கருவறையை கட்டிட வேண்டி, நெற் குத்தும் தொழில் கொண்ட இரு பெண்கள் காசு சேர்த்து வந்தனர். 

நீண்ட காலம் ஆகியும் , போதிய பணம் கிடைக்கவில்லையே என எண்ண, சிவ பெருமான் அந்தணர் உருவில் வந்து அவர்களது வீட்டில் உணவருந்தி சென்றார். வீட்டில் செல்வம் பெருகியது. பின்னரே கருவறை கட்டி முடிக்கப்பட்டது.

இதை கூறும் வண்ணம் நெற் குத்தும் இரு பெண்டிரின் உருவம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் யாக தீர்த்தம் ஒன்று உள்ளது. இத் தீர்த்தத்தில் 41 நாட்கள் தொடர்ந்து நீராட தீரா கொடிய நோய்களும் தீர்கிறது.

செவ்வாய் தலம்.........

தலம்: கொடகநல்லூர்
அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

நவக்கிரகங்களில் " செவ்வாய் " ஆட்சி பெற்று விளங்கும் " கோடகநல்லூர் " , திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூன்றாவது நவ கைலாயமாகும்.

செவ்வாய் திசை நடக்கும் அனைவரும் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருக் கோயில் இது. 

ரிஷி குமாரர் ஒருவரின் சாபத்தால் பரிஷத் மஹாராஜையும், சனி தோஷத்தால் நள மகாராஜாவையும் தீண்டிய கார்கோடகம் என்ற கரு நீல வண்ண சர்ப்பம், முக்தி வேண்டி மஹா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவோ கோடகநல்லூருக்கு சென்று தவம் செய்ய சொன்னார். 

அவ்வறே கார்கோடகன் முக்தி பெற்ற தலம் இது என்பதால் " கோடகநல்லூர் " என்றானது. இன்றும், இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும், நல்லோரை தீண்டுவதில்லை. 

மூலவர் " ஸ்ரீ கைலாசநாதராக " கிழக்கு நோக்கியும், அம்மை " சிவகாமி அம்பாளாக " தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர். 

ராகு தலம்.........

தலம்: குன்னத்தூர் (சங்காணி)
அம்சம்: ராகு
நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. 

இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. 

நவக்கிரகங்களில் ராகு பகவான் ஆட்சி புரியும், செங்காணி, சங்காணி என்றெல்லாம் அழைக்கப்படும் குன்னத்தூர் திருநெல்வேலியில் இருந்து மேலவேங்கடபுரம் செல்லும் 
சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத் திருத் தலத்தில் சுவாமி " கைலாச நாதர், கோத பரமேஸ்வரர் " எனவும், அம்பாள் " சிவகாமி அம்மையாகவும் " வழிபடப்படுகிறார்கள்.

கருவறையில் கோத பரமேஸ்வரர் மார்பில் சர்ப்பம் தரித்த நிலையில் அருளுகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. கோயிலில் நில அளவு கோல் ஒன்று உள்ளது. 

இது, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாள பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தடைபட்டு கொண்டே போகும் திருமணங்கள் இனிதே நடக்க, நல்ல மக்கட் பேறு அமைய, கால சர்ப்ப தோஷங்கள் நீங்க, உத்தியோக பிராப்தி கிட்ட, லாப ஸ்தானம் அடைய, ராகு தோஷ நிவர்த்தி பெற இத் தல வழிபாடு சிறந்தது. 

குரு தலம்........

தலம்: முறப்பாடு
அம்சம்: வியாழன் (குரு) 
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான " முறப்ப நாடு " குரு பகவான் ஆட்சி புரியும் தலமாகும்.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

நவ கைலாயங்களில் எந்த தலத்திற்க்கும் இல்லாத ஒரு சிறப்பாக, சிவ பெருமானே இங்கு "குரு பகவானாய்" அருள் புரிகிறார். 

தாமிரபரணி ஆறு, காசியைப் போன்றே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால், இவ்விடம் " தட்சிண கங்கை " என்றானது. இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு நிகர். இத் தலத்தில் ஒரே கல்லிலாலான தசாவதாரச் சிற்பம் ( மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ) ஒன்றுள்ளது.

இத் தலத்தில் உள்ள சபரி தீர்த்தத்தில், தை மாத அமாவாசைகளிலும், மாதாந்திர கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் நீராடி கைலாச நாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிட்டும். மூலவர் கைலாசநாதராகவும் , அம்பாள் சிவகாமியாகவும் அருள் புரியும் தலமாகும்.

சனி தலம்.......

தலம்: ஸ்ரீவைகுண்டம்
அம்சம்: சனி
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 
நவ கைலாயங்களில் சனீஸ்வர பகவான் ஆட்சி புரியும் ஆறாவது திருத் தலமாகும். 

இது, குமர குருபரர் அவதரித்த புண்ணிய பூமி. பூத நாதர் மற்றும் நவக்கிரக வழிபாடுகள் சிறப்பு பெற்ற இத் தலம், சனி திசை நடப்பவர்கள் அனைவரும் தவறாமல் வந்து வணங்க வேண்டிய தலமாகும். 

இத் தல அம்பிகை, சிவகாமி அம்பாளாகவும், இறைவன், சுயம்புவாய் ஸ்ரீ கைலாசநாதராகவும் வீற்றிருக்கின்றனர். 

ஸ்ரீ வைகுண்டம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும், நவ கைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்ற திருத் தலமாகும். 

குமர குருபரர் தன் திருவாய் மொழிந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. 

ஆறு கால பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெறும், சிவ பெருமான் சனி பகவானாய் விளங்கும் இத் திருத் தலத்தில் செய்யப்படும் சனி தோஷ பரிகார வழிபாடுகள், நடைபெறாமல் தடை பட்டுக் கொண்டே வரும் திருமணங்களை இனிதே நிறைவேற்றி தரும். இழந்த செல்வங்களை மீட்டுத் தரும். 

புதன் தலம்.........

தலம்: தென் திருப்பேரை
அம்சம்: புதன்
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை
இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

புதன் பகவான் ஆட்சி புரியும் " தென் திருப்பேரை " ஏழாவது தலமாகும். நவ கைலாயங்களில் ஒன்றான இத் தலம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் இரட்டை சிறப்பு கொண்டது. 

திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கைலாசநாதர். இறைவி சிவகாமி என்ற அழகிய ஸ்ரீ பொன்னம்மாள். கருவறையில் மூலவர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சி அருள்கிறார். 

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே விமானங்கள் கொண்டிருக்கும் இத் தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது. கோயில் சந்நதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது. 

ஆங்கிலேயர் காலத்தில், கேப்டன் துரை என்ற கலெக்டர் " கோயில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா இருக்கிறது? " என்று கேட்டு இளநீர் பறிக்க, பறித்த இளநீர் மூன்று கொம்புகளுடன் இருந்ததாம். அந்த, இளநீர்தான் இன்றும் கோயிலில் தொங்க விடப்பட்டுள்ளது. 

கேது தலம்.........

தலம்: ராஜபதி
அம்சம்: கேது
நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

நவ கைலாயங்களில் எட்டாவது திருத் தலமாக விளங்குவது, கேது பகவான் அருளாட்சி புரியும் " ராஜ கேது ". எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நான் தர்மத்தின் பக்கமே நிற்பேன் என்று உள்ளோருக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கேது பகவான். நவ கைலாயங்களில் மற்ற தலங்களை போல் இல்லாது, வெட்ட வெளியில் கூரையின்றி, வானமே கூரையாக, பூமியே கோவிலாக ஒரு கற்சிலை மட்டுமே கோயிலாக உள்ளது.

கோயில் இருந்த இடம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது. சிவ பெருமான் இருந்த இடத்தில் , தற்பொழுது இருக்கும் ஒரு கல்லையே மூலவராக வழிபடுகின்றனர். 

கோயிலாக இல்லாவிட்டாலும், இத் தலத்தை வணங்கினால் கைலாச நாதனின் அருளாசி கிடைக்கும் என்பது நிச்சயம். இத் தலத்தை வணங்கினாலோ அல்லது இத் தல நந்தி பெருமான் உள்ள ஒட்டப்பிடரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்தாலோ கால் நடைகளுக்கு நோய்கள் வருவதில்லை. 

சுக்கிரன் தலம்........

தலம்: சேர்ந்த பூமங்கலம்
அம்சம்: சுக்கிரன்
நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி
இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஆட்சி புரியும் நவ கைலாய தலமாக விளங்குவது " சேர்ந்த பூ மங்களம் ". இத் தலத்தின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. எத்தனையோ இயற்கை சீற்றங்களை இந்த ஊர் சந்தித்து இருந்தாலும், இத் திருக் கோயில் மட்டும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 

அகத்திய முனிவர் ஆற்றில் விட்ட மலர்களில் ஒன்பதாவது மலர் வந்து நின்ற இடம் இது. மற்ற தலங்களை போலவே இங்கு இறைவன் ஸ்ரீ கைலாச நாதராகவும், அம்மை சிவகாமி அம்பாளாகவும் அருளுகின்றனர்.

திருச் சுற்றில் தட்சிணா மூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் , நவக்கிரகங்கள் மற்றும் சனீஸ்வரர் ஆகியோர் தனி சந்நதி கொண்டு அருள்பாளிக்கின்றனர்.

இறைவன் சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ள இத் திருத்தல வழிபாட்டினால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம். 

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்."நவ கைலாய தலங்கள்' 

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவக்க வேண்டும்,

நவராத்திரி வழிபாடு பற்றிய பதிவுகள் :
நவராத்திரி வழிபாட்டினை எப்படி துவக்க வேண்டும், எந்த நாளில் பொம்மைகள் அடுக்க துவங்க வேண்டும், முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை வழிபட வேண்டும், எந்த நிறத்தில் உடை உடுத்தி, என்ன நைவேத்தியம் படைத்து, எப்படி வழிபட வேண்டும் என்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி என்பது அம்பிகையை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான காலமாகும். 

நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை நாம் வழிபட வேண்டும், நவராத்திரி வழிபாடு தோன்றிய முறை, கொலு வைக்கும் முறை தோன்றிய வரலாறு, முதல் நாளில் அம்பிகையை எந்த நிறத்தில், என்ன நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய முறைகளில் வழிபடுவது சிறப்பு. 

நவராத்திரியை கொண்டாடுவதற்கும், கொலு வைப்பதற்கும் இரண்டு விதமான கதைகள் புராணங்களில் சொல்லப்படுகிறது.

மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள். பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள். 

கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள். அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது ராமாயணத்தில் ராமன், ராவணனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் வதம் செய்த நாளை தசரா பண்டிகையாக கொண்டாடுகிறோம். 

ராவண வதம் முடிந்து, மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் அமாவாசையில் ராமன் அயோத்திக்கு திரும்பியதாகவும், அன்று மக்கள் தீபம் ஏற்றி அவரை வரவேற்ற நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுவதாக சொலல்ப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Thursday, October 3, 2024

பிடிகேஸ்வர சுவாமி கோவில், பிடிகாயகுல்லா, ஆந்திரப் பிரதேசம்..

 பிடிகேஸ்வர சுவாமி கோவில், பிடிகாயகுல்லா, ஆந்திரப் பிரதேசம்
 பிடிகேஸ்வர சுவாமி கோயில் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிடிகாயகுல்லா கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.  இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 கோவில்

 இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  கருவறை சன்னதி, அந்தராலா, மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  முக மண்டபத்தில் சன்னதியை நோக்கி நந்தியை காணலாம்.  கருவறையைத் தவிர, மற்ற அனைத்து கட்டமைப்புகளும் காலத்தின் அழிவால் இழந்தன.  இந்த கட்டமைப்புகளின் அடித்தளங்களை மட்டுமே பார்க்க முடியும்.  கருவறையில் கருப்பு பசால்ட் பாறையால் செய்யப்பட்ட லிங்கம் உள்ளது.  கருவறையின் மேல் உள்ள ஷிகாரா வார்ப்பட செங்கற்களால் பின்வாங்கும் அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது.

 கருவறையின் நுழைவாயிலில் சாளுக்கிய மன்னரால் வெளியிடப்பட்ட கிபி 7 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையிலான தெலுங்கு எழுத்துக்களில் கல்வெட்டு உள்ளது.  சப்தமாத்ரிகா சன்னதியில் சப்தமாத்ரிகா பேனல்கள் உள்ளன, அவற்றின் ஏற்றங்கள் கீழே செதுக்கப்பட்டுள்ளன.  அவளது சன்னதி செவ்வக வடிவில் உள்ளது.  சண்டேஸ்வரர் சன்னதியில் பல்லவர் கால சண்டேசுவரர் ஒரு கையில் கோடரியையும், மற்றொரு கையில் நாகப்பாம்பையும் பிடித்தபடி கரண்ட மகுடத்துடன் தனது சிறப்பியல்பு தோற்றத்தில் அமர்ந்துள்ளார்.  அனைத்து சன்னதிகளும் செங்கற்களால் கட்டப்பட்டவை, குப்தர்களுக்குப் பிந்தைய கோயில் பாணியில் இருந்து பெறப்பட்ட ஒரு அம்சம், பைலஸ்டர்களுடன் கூடிய அதிஸ்தானங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழி 

 பெஸ்தாவரிபேட்டாவிலிருந்து சுமார் 11 கிமீ தொலைவிலும், ஜக்கம்போட்லா கிருஷ்ணாபுரம் இரயில் நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், மார்கபூரிலிருந்து 41 கிமீ தொலைவிலும், ஓங்கோலிலிருந்து 117 கிமீ தொலைவிலும், விஜயவாடா விமான நிலையத்திலிருந்து 256 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

தலைச்சங்காடு அருள்மிகு ஶ்ரீ நாண்மதியப்பெருமாள்..

திருத்தலைச்சங்க நாண்மதியம்,
*தலைச்சங்காடு அருள்மிகு ஶ்ரீ* *நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்,*
*தலைச்சங்காடு,*
*தரங்கம்பாடி வட்டம்,* *மயிலாடுதுறை மாவட்டம்,தமிழ்நாடு மாநிலம்.*

*(108 திவ்ய தேசங்களில் 25 வது திருக்கோவில் ஆகும்)*

தென்னிந்திய கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த வைணவஸ்தலம் 900 ஆண்டுகள் முதல் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ ஸ்தலம்,திருக்கோவில் முழுக்க முழுக்க எம்பெருமாள் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

🛕மூலவர் : எம்பெருமாள் மகாவிஷ்ணு
🌷நாண்மதியப் பெருமாள்,
🪷வெண்சுடர்ப் பெருமாள்,
🪷வியோம ஜோதிப்பிரான்,
🪷வெஞ்சுடர்பிரான்

🛕 அம்மன்/ தாயார்:  
மகாலட்சுமி 
🪷லோகநாதன் தலைச்சங்க நாச்சியார்,

🛕உற்சவர் தாயார்:
செங்கமலவல்லி.

🛕இடம்: தலைச்சங்காடு

🛕கிராமம் :
தலைச்சங்காடு

🛕மாவட்டம்: மயிலாடுதுறை

🛕மாநிலம் : தமிழ்நாடு

🛕 தீர்த்தம்:
சந்திர புஷ்கரணி

🛕 பாடல் வகை:
நாலாயிரத்திவ்ய பிரபந்தம்

🛕மங்களாசாசனம் செய்தவர்கள்:
திருமங்கையாழ்வார்.

🛕விமானம்:
சந்திர விமானம்

🛕புராண பெயர்:
தலைச்சங்க நாண்மதியம்

🛕வெண்சுடர்ப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகம்

🛕தீர்த்தம் : சங்கு தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது).

🛕தல மரம்:புரசு

🛕பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .

🛕 தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும்.

🛕சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. 

🛕இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. 

🛕பெருமாள் கையில் சங்குடன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு தலைச்சங்காடு என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

🛕இக்கோவிலில் ஒரே ஒரு பிரகாரமும், இரண்டு சன்னதிகளும் மட்டுமே அமைந்துள்ளன.

🛕மூலவர் நாண்மதியப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

🛕கோவிலின் முன்புறம் குளம் காணப்படுகிறது. 
சந்திரன் நீராடி சாபம் தீர்ந்த குளம் என்பதால் இதற்கு சந்திர புசுகரிணி என்று பெயர். 

🛕காவிரி ஆற்றின் தென்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. 

🛕சோழர்கள் ஆட்சி காலத்தில் வணிக நகரமாக இருந்த பூம்புகாருக்கு மிக அருகில் இத்தலம் அமைந்துள்ளதால் சங்கிற்கு பிரபலமான ஊராகவும் இது இருந்தது..

🛕கோவிலின் தனிச்சிறப்பு

🌷சந்திரனின் சாபம் தீர்த்த தலம்.

🌷கையில் சங்குடன் காட்சி தரும்.

🌷பெருமாள்
சிவனை போல் பிறை சூடி காட்சி அளிக்கம் பெருமாள்.

🌷 திருக்கோயிலை  மூலஸ்தானம் முக்காலச் சோழர்களால் கட்டப்பட்டதாக ஐதீகம்..

🌷 பிற்காலத்தில் சோழர்களாலும் மராட்டிய மன்னர்களாலும் திருக்கோவிலுக்கு நன்கொடை கிடைக்கப்பட்டுள்ளது..

🛕 சந்திரதேவன்  மகா லட்சுமியின் சகோதரர் மற்றும் சூரியனுக்கு அடுத்தபடியாக சக்திவாய்ந்தவராக கருதப்பட்டார். 

🛕சந்திரன் ஒரு ராஜசூரயக்ஞத்தை நடத்தினார், அங்கு குருவின் மனைவி தாராவால் ஈர்க்கப்பட்டார். 

🪷தாராவுக்கும் , சந்திர தேவனுக்கும் புதன் என்ற மகன் பிறந்தான். 

🌷குரு மகா விஷ்ணுவிடம் முறையிட்டு தொழுநோயால் பாதிக்கப்படும்படி சாபமிட்டார். 

🪷சந்திரன் சாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை வழிபட்டார்.

🪷 சந்திரதேவன்  தக்ஷனின் 27 மகள்களை மணந்தார், ஆனால் அவர் ரோகினியுடன் அதிக பாசம் கொண்டிருந்தார். எனவே மற்றவர்கள் தங்கள் தந்தை தக்ஷனிடம் புகார் செய்தனர், அவர் சந்திரனை தனது சக்தியை இழக்கும்படி சபித்தார். 

🌷சாப விமோசனம் பெற, சந்திரன் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ நன்மதியப் பெருமாளை வழிபட்டார். 

🪷பெருமாள் சந்திரனை சாபத்தில் இருந்து விடுவித்தார். எனவே இக்கோயிலின் விமானம் சந்திர விமானம் என்றும் தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது.   

🪷மற்றொரு புராணக்கதையில், விநாயகர் குபேரனுடன் விருந்தில் இருந்து திரும்பும் போது, ஒரு பாம்பு அவர்கள் வழியைக் கடந்தது. 

🪷வாகன மூஞ்சூறு பயந்து ஓட ஆரம்பித்தது. இதனால் விநாயகர் கீழே விழுந்து சாப்பிட்டதை வாந்தி எடுத்துள்ளார். இதைக் கண்டு 
சந்திரன் சிரித்தார். கோபமடைந்த விநாயகர், சந்திரனை தனது சக்தியை இழக்கும்படி சபித்தார். 

🛕 இரண்டு புராணக்கதைகளும் சிவபெருமானுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதில் அவர் சாபத்தால் 15 நாட்களுக்கு தனது சக்தியை இழக்க நேரிடும், மேலும் 15 நாட்களுக்கு சிவபெருமானின் வரமாக இந்த விஷயத்தில் மகா விஷ்ணுவிடமிருந்து சக்தியை மீண்டும் பெற்றார். 

🛕வைணவ மரபின் தென்கலை பிரிவின் மரபுகளைப் பின்பற்றும் இந்த கோயில் பாஞ்சராத்ர ஆகமத்தைப் பின்பற்றுகிறது .

🛕இக்கோயிலுக்கு அருகில் 
🌷திருநாங்கூர், 
🌷திருவாலி, 
🌷திருநகரி, 
🌷திருவெண்காடு, 🌷பல்லவனீஸ்வரம், 🌷கீழப் பெரும்பள்ளம், 
🌷மேலப் பெரும்பள்ளம், 
🌷திருக்கடையூர் போன்ற தலங்கள் அமைந்துள்ளன..

🛕திருமங்கை யாழ்வார் இத்தலத்தை தலைச்சங்க நாண்மதியம் என்று அழைத்தார்.

🪷நாண்மதியப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார்.

🪷இத்தல பெருமாள், சிவபெருமானைப் போல தலையில் பிறைச் சந்திரனை தலையில் சூடி அருள்பாலிக்கிறார். 

🪷சந்திரன் தனது சாபம் நீங்கும் பொருட்டு இவ்வூர் தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

🪷சந்திர தோஷம் உள்ளவர்கள், இத்தலத்தில் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

🪷இக்கோயிலில் சில காலம் வழிபாடு இன்றி இருந்த நிலையில் வடுக நம்பி சீரமைக்க முயன்றார். 

🪷 சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

🪷தலை + சங்கு + காடு – என பிரித்து பார்த்தால் பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்துக்கும் அதைச் சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்துள்ளனர் என்பதை உணர முடியும்.

🪷சங்குச் செடிகள் மிகுதியாகப் பயிரிடப்பட்டு, அதன் பூக்கள் இவ்வூர் கோயில்களுக்கும், சுற்று வட்டாரங்களில் உள்ள கோயில்களுக்கும் அனுப்பப்பட்டன..

🪷பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகியிருக்க வேண்டும்.

🪷இவ்வுலக உயிர்களைக் காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை வழிபாடு செய்து தனது ஆயுதமாக சங்கைப் பெற்றுள்ளார் 

🪷திருமால். அதனால் இவ்வூரில் உள்ள சிவபெருமான் கோயிலில் திருமாலுக்கு தனி சந்நிதி உண்டு. 

🪷திருமாலுக்கு பாஞ்சசன்யம் என்ற சங்கை அருளிய காரணத்தால் சிவபெருமான், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

🪷பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

🌷பவித்ரோத்ஸவம், 🌷ராம நவமி,
🌷கிருஷ்ண ஜெயந்தி,
🌷வைகுண்ட ஏகாதசி, 
🌷நவராத்திரி,
 🌷புத்தாண்டு நாட்கள் போன்ற அனைத்து வைணவ முக்கிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.  

🛕கோவில் நேரங்கள்

🪷கோவில் 09.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், 15.00 முதல் 17.30 மணி வரையிலும் திறந்து வைக்கப்படும்.

🛕தொடர்பு விவரங்கள்
மேலும் விவரங்களுக்கு 

🪷மயிலாடுதுறை +91 99652 73712 என்ற  முகவரியில் இருந்து வரும் வரதராஜன் பட்டரின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.   
*(உறுதி செய்யப்படவில்லை)*

🪷எப்படி அடைவது
இக்கோயில் 
🌷தலைச்சங்காடு இடத்திலிருந்து ஒரு கிமீ தொலைவிலும், 🪷சீர்காழியிலிருந்து 18.6 கிமீ தொலைவிலும், 
🌷மயிலாடுதுறை யிலிருந்து 23 கிமீ தொலைவிலும், 
🌷காரைக்காலில் இருந்து 30 கிமீ தொலைவிலும், 
🌷நாகப்பட்டினத்தி லிருந்து 50 கிமீ தொலைவிலும், 
🌷சென்னையிலிருந்து 255 கிமீ தொலைவிலும் உள்ளது.
🌷அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழி.

ஒரு நாளைக்கு பூஜைகள் மூன்று முறை செய்யப்படுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

பெண்களுக்கே உரித்தான இந்த நவராத்திரியின் சிறப்பு:

நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.
 
பெண்களுக்கே உரித்தான இந்த நவராத்திரியின் சிறப்பு:

காளையர்க்கு ஓரிரவு  சிவராத்திரி அல்லது வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி

ஆனால்  கன்னியர்க்கு ஒன்பது  நாள் நவராத்திரி

*ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு :

சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.

ஆஷாட நவராத்திரி, ஆனி, ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.

புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் முதல் வரும் நவராத்திரியே மிகப் பிரதானமாக  எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியு டன் நிறைவுபெறுகிறது

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

*நவராத்திரி பண்டிகை :

எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

இவன் பிரம்மனை குறித்து  பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.

தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியில் முதன்மையாக திகழ்பவர்கள்  யார்?: மகிசாசூரன் மற்றும் அன்னை சக்தி இருவருமே.

நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் (மாலை 6 முதல் 9 மணி வரை) பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு பெண்கள் மாலை மற்றும் இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள்

இந்த நாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள் மற்றும் விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் பற்றி இந்த பதிவில் மேலும் தெரிந்துக்கொள்வோம். 

*நவராத்திரி விரதம்:

நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.

நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன. இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிச்சடி, உப்புமா,  தோக்லாஸ் (குஜராத்தி) அல்லது பாயசம் (கீர்) தயாரிப்பதில் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது தினை, ஜவ்வரிசி (சாபுதானா) உபயோகப் படுதா படுகிறது பயன்படுத்தப்படலாம்.

நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர்  இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் - உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது பால் மற்றும் பால் பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன.

வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாது

*நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்:

நவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும்.

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்

இந்த நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன.

துர்க்கை: மகேசுவரி, கெளமாரி , வாராகி.

இலட்சுமி: மாகா லெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி.

சரஸ்வதி : சரஸ்வதி, நாரசிம்மி , சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார அம்ச தேவதைகளாகவும் கொண்டாடுகிறோம்.

சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுகிறோம்

ஒன்பது நாட்கள் மகிசாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி – வெற்றியின்  திரு நாள்

குழந்தைகள் கல்வியினை கற்க இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி முதல் தினம் தொடங்கி  ஒன்பது நாட்கள்  முழுவதும் காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும்.

*நாளும் ஒரு வண்ண மயம்:

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணம் முக்கியத்துவம் பெறும். முதல் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை, அந்தந்த நாளுக்கான நிறத்தில் ஆடைகள் அணிந்து பெண்கள் பராசக்தியின் வெவ்வேறு அவதாரத்தை வழிபட்டு மகிழ்வர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு பற்றிய பதிவுகள் :*
அக்டோபர் 02ம் தேதியை கொலு பொம்மைகள் அல்லது கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டினை துவக்கி விடுவது தான் பெரும்பாலானவர்களின் வழக்கம். அன்றே அம்பிகைக்கு நைவேத்தியம் வைத்து வழிபட துவங்கி விட வேண்டும். 

அக்டோபர் 03ம் தேதி நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை சைலபுத்திரியாக வழிபட வேண்டும். இவளுக்குரிய நிறம் வெளிர் ஆரஞ்சு அல்லது பிங்க். 

ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி, ரிஷப வாகனத்தில் காட்சி தரும் இந்த அம்பிகைக்கு மஞ்சள் நிறத்தால் ஆன பொருட்களை படைத்து வழிபட வேண்டும். 

மஞ்சள் நிற ஆடையை நாம் உடுத்திக் கொண்டு, எலுமிச்சை சாதம், வெண் பொங்கல், மஞ்சள் நிற கேசரி நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அதோடு கடலை பருப்பு சுண்டல் படைத்தும் வழிபடலாம்.

*முதல் நாள் படிக்க வேண்டிய மந்திரம் :*

நவராத்திரியின் முதல் நாளில் கொலு அல்லது கலசம் வைத்து என எப்படி வழிபட்டாலும் மஞ்சள் நிற மலர்களால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 

1. அபிராமி அந்தாதி, 
2. லலிதா சகஸ்ரநாமம், 
3. துர்காஷ்டகம், 
4. தேவி மகாத்மியம், 
5. லலிதா திரிசதி, 
6. ஷ்யாமள தண்டகம் 

உள்ளிட்ட ஸ்லோகங்களை படிப்பது மிக விசேஷமானதாகும். 

அபிராமி அந்தாதியை மொத்தமாக 100 பாடல்களையும் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் 10 பாடல்கள் என்ற விகிதத்திலும் படிக்கலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...