Thursday, October 3, 2024

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரி முதல் நாள் வழிபாடு பற்றிய பதிவுகள் :*
அக்டோபர் 02ம் தேதியை கொலு பொம்மைகள் அல்லது கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டினை துவக்கி விடுவது தான் பெரும்பாலானவர்களின் வழக்கம். அன்றே அம்பிகைக்கு நைவேத்தியம் வைத்து வழிபட துவங்கி விட வேண்டும். 

அக்டோபர் 03ம் தேதி நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை சைலபுத்திரியாக வழிபட வேண்டும். இவளுக்குரிய நிறம் வெளிர் ஆரஞ்சு அல்லது பிங்க். 

ஒரு கையில் திரிசூலமும், மற்றொரு கரத்தில் தாமரையும் ஏந்தி, ரிஷப வாகனத்தில் காட்சி தரும் இந்த அம்பிகைக்கு மஞ்சள் நிறத்தால் ஆன பொருட்களை படைத்து வழிபட வேண்டும். 

மஞ்சள் நிற ஆடையை நாம் உடுத்திக் கொண்டு, எலுமிச்சை சாதம், வெண் பொங்கல், மஞ்சள் நிற கேசரி நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். அதோடு கடலை பருப்பு சுண்டல் படைத்தும் வழிபடலாம்.

*முதல் நாள் படிக்க வேண்டிய மந்திரம் :*

நவராத்திரியின் முதல் நாளில் கொலு அல்லது கலசம் வைத்து என எப்படி வழிபட்டாலும் மஞ்சள் நிற மலர்களால் அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 

1. அபிராமி அந்தாதி, 
2. லலிதா சகஸ்ரநாமம், 
3. துர்காஷ்டகம், 
4. தேவி மகாத்மியம், 
5. லலிதா திரிசதி, 
6. ஷ்யாமள தண்டகம் 

உள்ளிட்ட ஸ்லோகங்களை படிப்பது மிக விசேஷமானதாகும். 

அபிராமி அந்தாதியை மொத்தமாக 100 பாடல்களையும் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் 10 பாடல்கள் என்ற விகிதத்திலும் படிக்கலாம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...