#கண்
கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
பொழிப்புரை:
கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.
விளக்கம்:
சிவபிரானின் நடனக் காட்சியைக் காணுமாறு கண்களை பணிக்கும் பாடல் இது. நஞ்சு உண்ட பின்னரும், இறவாமல் இருந்த காரணத்தால், பிறப்பு இறப்புகளைக் கடந்த இறைவன் சிவபெருமான் என்பது எங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் நம்மை, சிவபிரானது நடனக் கோலத்தை கண்டு களிக்குமாறு அறிவுறுத்துகின்றார். ஏதாவது ஒரு தொழிலினைச் செய்துகொண்டு நடனம் ஆடுவதே கடினம். ஆனால் சிவபெருமான் அல்லும் பகலும் இடைவிடாமல் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாலும், ஐந்து தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே இந்த நடனக் கோலம்.
நாதத்திலிருந்து உலகம் தோன்றியது என்பர். எனவே நாதம் எழுப்பும் உடுக்கையினை கையில் கொண்டு ஆடும், சிவபிரான் படைப்புத் தொழிலினை அதன் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். அபயமுத்திரை காட்டும் வலது கரம் காக்
No comments:
Post a Comment