Monday, February 6, 2023

பாகிஸ்தானில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான பஞ்சமுகி ஹனுமான் கோவில்

பாகிஸ்தானில் உள்ள 1500 ஆண்டுகள் பழமையான பஞ்சமுகி ஹனுமான் கோவில்

இந்து கோவில்கள் இந்தியாவில் மட்டுமல்ல நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய பல அண்டை நாடுகளிலும் இருக்கிறது. அப்படி 1500 ஆண்டுகள் பழமையான ஒரு ஹனுமன் கோவில் பாகிஸ்தானில் உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் கோவில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் சோல்ஜர் பஜாரில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவில். இயற்கையாகவே அனுமனின் திருவுருவச் சிலையைக் கொண்ட உலகின் ஒரே கோயில் இது என சொல்லப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்படாத ஹனுமானின் இயற்கை சிலையை கொண்ட உலகின் ஒரே கோவில் என்பதால் இந்துக்களுக்கு இந்த கோவில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோவில் சிந்து கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு சட்டம் 1994 இன் கீழ் தேசிய பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வனவாசத்தின்போது ராமபிரான் இந்த கோவில் இருக்கக்கூடிய இடத்திற்கு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பிறகு அந்த இடத்தில் இருந்து பஞ்சமுகி அனுமன் சிலை தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. இந்த பஞ்சமுகி அனுமன் சிலையை 11 அல்லது 21 முறை சுற்றி வந்தால் பக்தர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இந்த கோவில் 2209 சதுர அடி பரப்பளவில் இருந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் கோவில் புனரமைப்பு செய்யப்படும் பொழுது கோவில் தளத்தில் இருந்து பல இந்து தெய்வ சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான 8 அடி உயர சிலை ஒன்று இந்த கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...