Saturday, February 11, 2023

ஏகாதசி, துவாதசி, சனிமஹாபிரதோஷம், சனிமஹாசிவராத்திரி, . ♥ ♥♥♥ இந்த 2023 ம் வருடம் 18-2-2023 மாசி 6 ம் தேதி சனிக்கிழமையும் சிவராத்திரியும், சனி மஹா பிரதோஷமும் இணைந்து வருகிறது.

♥ ஏகாதசி,  துவாதசி,  சனிமஹாபிரதோஷம்,  சனிமஹாசிவராத்திரி, . ♥
                     ♥♥♥   இந்த  2023  ம்   வருடம்  18-2-2023  மாசி  6 ம்  தேதி  சனிக்கிழமையும்   சிவராத்திரியும்,  சனி மஹா பிரதோஷமும்  இணைந்து வருகிறது.     
                     ♥  சிவராத்திரியும்,  சனிக்கிழமையும்    இணைந்து வரும்  18-2-2023  மாசி  6 ம்  தேதி  பகல்,  இரவு   முழுவதும்    சாப்பிடாமலும்,  தூங்காமலும்  விரதம் இருந்து,  அந்த  இரவில்   குலதெய்வம்  மற்றும்  சிவ வழிபாடு  செய்ய  வேண்டும். ,    19-2-2023  மாசி 7 ம்  தேதி  பகலிலும்  தூங்கக்கூடாது. இப்படி   தூங்காமல்   பூஜை+விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்.
                     ♥  அன்றைய   தினம்   குலதெய்வம்  மற்றும்  சிவன்  கோவில்   ஆகிய  இரண்டு  கோவில்களுக்கும்   செல்ல  முடியாமல்  ஏதேனும்   ஒரு  கோவிலுக்கு  மட்டுமே   செல்லமுடியும்    என்ற  நிலைமை   இருந்தால்   குலதெய்வக்கோவிலுக்கே  முன்னுரிமை  தந்து  குலதெய்வ கோவிலுக்கு    சென்று  வழிபடவேண்டும்.
                     ♥  சிவாகமம்   எனும்   நூலில்  சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம்  120  வருட  சாதாரண தினப் பிரதோஷம் விரதம்  இருந்த   பலனைத் தரும்  என   கூறப்பட்டுள்ளது.  
                     ♥♥♥   தேய்பிறை சனிக்கிழமை  சனிமஹாபிரதோஷத்துடன்,   சனிக்கிழமை  வரக்கூடிய   மஹாசிவராத்திரியும்   கூடியுள்ள   இந்த   தினத்தில் சிவன் அல்லது  குலதெய்வத்தை   தரிசிப்பதால், சகல பாவங்களும்,  தோஷங்களும்   விலகும், . புண்ணியம் சேரும்.  ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம   சனியால் வரும் துயரம் சிறிதும் நெருங்காது..
                     ♥ 16-2-2023  மாசி 4    வியாழன்  தேய்பிறை   ஏகாதசியும்,   17-2-2023  மாசி 5 வெள்ளி  கிழமை துவாதசியும்   வருகிறது.
                     ♥ மாதந்தோறும் வருகிற ஏகாதசியும்,   துவாதசியும்  சிறப்பான  முக்கியத்துவம்   வாய்ந்தது.  ஏகாதசியும் துவாதசியும் மகாவிஷ்ணுவுக்கு உகந்தநாட்கள். இந்தநாட்களில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் பலனுள்ளது. பலமும் வளமும் தரும்.
                     ♥ முதல்  நாள் தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்
                     ♥ இரண்டாம்  நாள்  ஏகாதசி  திருநாளில்  அதிகாலையில் எழுந்து குளித்து,  தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருக்க வேண்டும்     உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.  விரதத்தை அனுஷ்டிக்கும்போது  தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.  மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். 
பகலிலும்,, இரவிலும்  தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். 
                     ♥ மூன்றாம்  நாள்  துவாதசியன்று  காலையில்  பூஜைகளை முடித்து விட்டு,     காலையில் 21 வகையான காய்கறிகளை சமைத்து  பெருமாளுக்கு  படையலிட்டு    வணங்கியபின்பு,  விருந்தினருக்கும்   ஏழைகளுக்கும்  அன்னதானம் அளிக்க   வேண்டும்.   இதை  பாரணை  எனக்கூறுவார்கள்.. இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.  அன்று  ஒருவேளை  உணவருந்த    அந்த  படையலை   மட்டுமே   சாப்பிட   வேண்டும்.    பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தால் புண்ணியங்கள் கிடைக்கும்.   இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்க   வேண்டும்.
                     ♥ துவாதசி  முன்னோர்களை வணங்கி வழிபடுவதற்கும்   அற்புதமான நாள் ஆகும்.
                     ♥ துவாதசி  நாளில், பெருமாளையும் முன்னோர்களையும்  துளசி மாலை சார்த்தி   வழிபடுங்கள்.  
                     ♥  துவாதசியன்று  ஆசாரத்துடன்   உணவு சமைத்து,  கருப்பு  எள்,  பால்  ஆகியவை  சேர்த்து முன்னோர்களுக்கு  படையலிடுங்கள்.  அதில்  ஒரு பகுதியை  காகத்துக்கு வழங்குங்கள். எவருக்கேனும் ஐந்துபேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பித்ருக்களின் பாவங்கள் நிவர்த்தியாகும். மகாவிஷ்ணு  அவர்களை சொர்க்கலோகத்துக்கு அழைத்துக் கொள்வார்.
                     ♥ நாமும்   மகாவிஷ்ணுவின்  அருளையும்,  முன்னோர்களின் பரிபூரண ஆசியையும்   பெற்று சகல செளபாக்கியங்களுடன் வாழலாம். கஷ்டங்களும் கடன் தொல்லையும் நீங்கப் பெறலாம்.
                     ♥ இந்த நாட்களில் , விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளக்கூடாது. .

No comments:

Post a Comment

Followers

கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முப்பெரும் தேவியரும்  ஒன்றாக அமைந்த  ஒரே #மூகாம்பிகை தலமான தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற ச...