Saturday, February 11, 2023

வரும் மாசி மகா சிவராத்திரியில்.. என்ன செய்யலாம்

🌹 மகா சிவராத்திரி...!!


வரும் மாசி மகா சிவராத்திரியில்.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

🌹 வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

🌹 மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். இந்நாளின் மூன்றாம் ஜாமக் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டு விலகிப் போகும் என்பது ஐதீகம்.

🌹 சிவனுக்குரிய நாளான மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும், கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம். அத்தகைய மகத்துவமிக்க நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

செய்ய வேண்டியவை :

🌹 மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை நினைத்து, சுக போகங்களை தவிர்த்து ஒருவேளை மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

🌹 அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு காலை வேளையில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்துவிட்டு, சிவாலயங்கள் சென்று வழிபட வேண்டும்.

🌹 வீட்டில் சிவ பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, தேவையான பொருட்கள், மாலை, தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். நண்பகலில் நீராடி விட்டு, உச்சிகால பூஜைகளை செய்ய வேண்டும்.

🌹 மாலை நேரத்தில் மீண்டும் குளித்துவிட்டு அலங்கரித்து வைத்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

🌹 நான்கு கால சிவ பூஜையில், பூஜைக்கு தேவையான வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியம் வைத்து படைத்து பூஜை செய்ய வேண்டும்.

🌹 சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

🌹 சிவாலயங்களில் நடைபெறும் பூஜைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்ய வேண்டும்.

🌹 சிவராத்திரியன்று வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை படிக்கலாம். இல்லையேல் அடுத்தவரை படிக்க சொல்லி கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

செய்யக்கூடாதவை :

🌹 சிவராத்திரியன்று பகலில் தூங்கக்கூடாது. சிவராத்திரியன்று கண்விழிக்க வேண்டும் என்பதற்காக, கைபேசிகளில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

🌹 சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும், மனதாலும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Followers

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள்..

அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்...