Tuesday, February 7, 2023

இராமாயணத்தில் இடம் பெற்ற 69 கதாபாத்திரங்களை கொண்டு அதனை நினைந்து பயனுள்ளதாக செய்வோம்

இராமாயணத்தில் இடம்  பெற்ற   69 கதாபாத்திரங்களை கொண்டு அதனை நினைந்து  பயனுள்ளதாக செய்வோம்
 
பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் குறிப்பாக அவரின் முக்கிய 10 அவதாரங்களில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ந்ருசிம்ஹர் ஆகிய மூன்று அவதாரங்கள் மிகவும் அதீதமாக பெரியோர்களால் போற்றப்பட்டு வருகின்றன

அதிலும் இந்துமத பிரதான இதிகாச காப்பியங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ ஒருசில முக்கியமான கதாபாத்திரங்களையும் ( வால்மீகி உட்பட) தமிழில் அதை காவியமாக தந்த கம்பன் என கிட்டதிட்ட  69 பாத்திரங்களை பற்றிய சிறு விளக்கம்.

முதலில் அகல்யையில் இருந்து ஆரம்பிப்போம் (அ ஆ இ க கா கு ... 
ச சா என்ற தமிழ் எழுத்து வரிசையாக காண்போம்)

1. அகல்யை (Agaligai)

இராமாயண காலத்துக்கு முந்தய கால கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இட  பின்னர் 

இராமாயண காலத்தில் மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் ஶ்ரீபாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப்பெற்றவள்.

இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் முதன்மையானவள் 

2. அகத்தியர் (Agathiar)

குள்ளமான முனிவர் சகல வேத அஸ்த சாஸ்திரங்கள் அறிந்தவர் இவர் ராமனுக்கு ஶ்ரீராம இராவண யுத்த போர்க்களத்தில் ஶ்ரீராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்

3. அகம்பனன் (Agambanan)

இவன் பாத்திரமும் முக்கியமான ஒன்று காரணம் ராவணனிடம் ராமனைப்பற்றி தவறாக கோள்சொன்னவன் அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான்.

கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு  ஒருமுறை தப்பிப்பிழைத்து வந்த அதிசய ராட்சஷன்

4. அங்கதன் (Angathan)

வானர அரசன் மகாபலவானான வாலிக்கும் அவன் மனைவி தாரைக்கும் பிறந்த மகன் கிஷ்கிந்தையின் இளவரசன் 

இராம இராவண யுத்தத்தில் ஶ்ரீராமனுடன் சேர்ந்து இராவண சேனையை துவம்சம் செய்தவன் ஶ்ரீராமனின் அன்புக்கு மிகவும்  பாத்திரமானவன்

5. அத்திரி (Aththri)

இவர் ஒரு மகரிஷி அனுசூயா என்ற பத்தினியின் கணவர் அந்த பத்தினியின் காரணமாக ஶ்ரீராம தரிசனம் பெற்றவர்

6. இந்திரஜித் (Indrajith)

இலங்கை வேந்தன் ராவணனின் மகன் இந்திரனையே போரிட்டு ஜெயித்ததால் இந்திரனை ஜெயித்தவன் என்ற அர்த்தத்தில்  இந்திரஜித் என அழைக்கப்பட்டான் 

ஶ்ரீராம ராவண யுத்தத்தில் தன் தந்தைக்காக போரிட்ட போது அயோத்தி இளையவர் ஶ்ரீலட்சுமணனால் அழிந்தவன் இவனுக்கு மேகநாதன் என்ற பெயரும் உண்டு 

7. கரன் & தூஷணன் (Karan Dooshanan)

இலங்கை வேந்தன் ராவணனின் இனிய தம்பிகள் 

தன் மூக்கையும் காதையும் இலக்குமணனால் துண்டிக்கபட்ட சூர்பனகை தூண்டலால் ஶ்ரீராமனுடன் போரிட்டு அவர் கையால் அழிந்தவர்கள் ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்

8. கபந்தன் (Gabandhan)

இந்த அசுரன் (கந்தர்வன் ஆனால் சாபம் ஒன்றால்) தலையும் காலும் இல்லாத அரக்கனாக அலைந்தான் 

கானகத்தில் ஶ்ரீராமன் இருந்தபோது அவருக்கு தொல்லை கொடுக்க ஶ்ரீராமனாலேயே வதைக்கப்பட்டவன்

பின்னர் இவனே கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்

9. குகன் (Kugan)

இவன் வேடர் தலைவன் கங்கைகரை படகோட்டி ஶ்ரீராமர் இலக்குமணர் தாயார் ஆகியோர் கங்கையை கடக்க உதவியதால் ஶ்ரீராமரால் ஐந்தாவது சகோதரனாக ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍வன்

10. கும்பகர்ணன் (Kumbakarna)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி பிரமனிடம் கேட்ட வரத்தில் ஏற்பட்ட சிறு தவறால் ஆறுமாதங்கள் சாப்பிட்டும் மீதமுள்ள‍ ஆறுமாதங்கள் பெரும் தூக்கம் என உண்டும் தூங்கியுமே பொழுதை கழித்தவன் செஞ்சோற்று கடனுக்காக மகாபாரத்த்தில் உயிரை விட்ட கர்ணனுக்கு செஞ்சோற்று கடனை கழிப்பது எப்படி என  வழிகாட்டிவன்

11. கும்பன் (Kumba)

இவனும் இலங்கையின் இளவரசன் ஆனால் மேலே சொன்ன கும்பகர்ணனின் மகன் இவனும் தந்தையை போலவே இராம இராவண போரில் இராமலக்குமணர்களா்ல் அழிக்கப்பட்டவன்

12. குசத்வஜன் (Susajvajan)

பகவான் ஶ்ரீராமரின் மாமனாரும் தாயார் சீதாதேவியின் தகப்பனாருமான ஶ்ரீஜனகரின் தம்பி அதாவது பரத சத்ருக்கனர் மனைவிகளான மாண்டவி சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை இவர்தான் பரத சத்ருக்கனின் மாமனார்

13. கவுசல்யா கைகேயி சுமித்திரை (Kowsalya Kaikeyee Sumithra)

இவர்கள் முறையே ஶ்ரீராம பரத லக்குமண சத்ருக்கன் ஆகியோரின் தாயார்கள் அயோத்தி மாமன்னர் ஶ்ரீதசரதரின் மூன்று திவ்யமான பட்டத்தரசியர் 

இதில் இளைய மனைவியான கைகேயி ஒருமுறை போரில் தசரதனுக்கு தேர் சாரதியாக இருந்து தேரை அழகாக செலுத்தி  அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்ததால் அகம் மகிழ்ந்த தசரதன் கைகியிடம் இரண்டு வரம் தருவதாக கூற கைகேகி அதை தனக்கு வேண்டும் பொழுது கேட்டு பெற்று கொள்வதாக கூற

ஆம் ஜானகியை மிதிலையில் ஶ்ரீஶ்ரீஜனக மன்னனிடம் இருந்து கன்னிகாதானமாக பெற்று கைபிடித்து அயோத்திக்கு அழைத்து வந்த ஶ்ரீராமனுக்கு தசரதர் பட்டாபிஷேகம் செய்ய எண்ண கைகேகி ஶ்ரீராமன் மண்ணில் பிறந்த காரணத்தை முற்றிலும் அறிந்தவளாக தன் தோழி மந்தரை போதனையாக ஏற்று 

மன்னனான தசரதனிடம் ஸ்வாமி தற்போதைய இளவரசனான ஶ்ரீராமன் இன்று முதல் 14 ஆண்டுகள் கானகம் செல்லவும் 

அவருக்கு பதிலாக தன் மகன் பரதன் ராஜாவாக அயோத்தி நாட்டை ஆளவேண்டும் என முன்பு போர்களத்தில தருவதாக சொன்ன இரண்டு வரமாக இப்போது கேட்க அப்போதே அந்தக்ஷணமே இராமாயண காவியத்தின் கதை தொடங்க காரணமான இருந்த ஶ்ரீராமனுக்கு பிரியமான தாய் இந்த கைகேகி

கைகேகி இல்லையேல் இராமாயண கதை இல்லை என்னும்படியாக முக்கிய மனுஷி ஆனால் தான் பெற்ற மகனால் முற்றிலும் வெறுப்கப்பட்டவள்

14. சுநைனா (Sunaina)

மிதிலை மன்னர் ஶ்ரீஜனகரின் மனைவி தாயார் சீதையின் தாய் 
ஶ்ரீராமனின் மாமியார்

15. கௌதமர்  (Gowthamar)

கல்லாகி ஶ்ரீராமர் கால் தூசிபட்டு மீண்டும் பெண்ணான கற்புக்கரசி ஶ்ரீஅகல்யையின் கணவர் மாகபெரிய முனிவர் 

இஷ்வாகு குல ஆசாரியர் 

16. சதானந்தர் (Sadhanandha)

மேலே சொன்ன அகல்யை கவுதமரின் மகன்
இவர்தான் மிதிலையில் ஶ்ரீராம சீதா கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதர்

17. சம்பராசுரன் (Sambrasoora)

மகா பெரிய வீரன் அசுரன் ஒருமுறை இவனுக்கும் தேவர்களுக்கும் நடந்த போரில் இந்திரன் வேண்டுதலை ஏற்று தசரதர் அஅவனை அழித்து தேவர்களுக்கு வெற்றிகிட்ட உதவினார்

18. சபரி (Sabari)

நல்ல தபசி ஶ்ரீமதங்க முனிவரின் மாணவி சிறந்த சிஷ்யை முனிவரின் ஆக்ஞை படி பல ஆண்டுகள் காத்திருந்து பகவான் ராமனை தரிசித்தவள் தான் உண்ட எச்சில் பழத்தை பகவானுக்கு பிரசாதமாக சமர்பித்து மோட்ச்தை அடைந்தவள்

19. சதபலி (Sadhabali)

சுக்ரீவனின் வானர சேனையில் ஹனுமனை போன்ற வீரன் இவன் ஶ்ரீராம தூதனாக ஹனுமன் தென் திசையில் தாயாரை தேட செல்ல அதே தூதனாக இவர் வடதிசையில் சீதையை தேடச்சென்றவன்

20. சம்பாதி (Sambadhi)

இலங்கை வேந்தன் இராவணன் சீதையை சிறைபிடித்து சென்ற போது அவனை எதிர்து கடுமையாக போரிட்ட ஒரே ஜீவனான பறவை அரசனான சிறந்த மனிதாபிமானம் கொண்ட ஜடாயுவின் உடன்பிறந்த அண்ணன் 

ஹனுமன் உட்பட்ட பலரும் தாயாரான சீதா தேவியை எப்படி தேட எண விவாதித்த போது இவர்தான் எங்கு தாயார் உள்ளாள் எப்படி செல்ல வேண்டும் என கூறி அங்கதனின் தலைமையிலான வானர படைக்கு உதவியவர்

21. சீதா (Seetha)

பகவானான ஶ்ரீராமனின் மனைவி அகலகில்லேன் என பகவான் மார்பில் உறையும் சாட்சாத் ஶ்ரீதேவி என்னும் மங்கை இந்த பகவத் ஶ்ரீராம அவதாரத்தில் தானும் ஈடுபட விரும்பி ஜானகி தாயாராக அவதரித்தார் இவரை வைதேகி ஜனகநந்தினி ஜனககுமாரி மைதிலி ஆகிய பெயர்களிலும் அழைப்பர்

இந்த அவதாரத்தில் தாயார் மிகவும் கஷ்டப்பட்டார் என்றால் மிகையில்லை 

22. சுமந்திரர் (Sumandhirar)

அயோத்தி மன்னன் தசரதனின் அரச சபையில் ஹனுமனை ஒத்த அறிவார்ந்த மந்திரி தசரத மன்னனின் ஆஸ்தான தேரோட்டி 

23. சுக்ரீவன் (Sukriva)

வானர சூரன் இவர் கிஷ்கிந்தையின் மன்னன் வானரவீரன் வாலியின் உடன்பிறந்த தம்பி ஹனுமன் ஶ்ரீராமதூதனாகும் முன் இவரிடம்தான் நண்பனாக மந்திரியாக பணிசெய்தார் இவர் சூரியபகவானின் அருளால் பிறந்தவர்

பகவான் ஶ்ரீராமர் கானகத்தில் பிரிந்த தாயாரை மீண்டும் காண வானரசைன்யத்தை கொடுத்து தானும் உற்ற நண்பனாய் இருந்து உதவியவர் இவரை ஶ்ரீராமர் தனது ஆறாவது சகோதரன் என அறிவித்தார் சுக்ரீவன் நல்ல பண்பு மிக்கவர்

24. சுஷேணன் (Sushona)

சிறந்த வானர வீரன் வானர அரசன் வாலியின் மாமனார் அதோடு வானரங்களுக்கான ஆஸ்தான மருத்துவர்

ராவணனிடம் சிறைபட்ட தேவியை தேடி மேற்கு திசையில் சென்றவர்

25. சூர்ப்பணகை (Surpanaga)

இலங்கை வேந்தன் ராவணன் விபிஷணன் கும்பகர்ணன் ஆகியோரின் தங்கை

தங்கையின் கணவன் என்றும் பாராமல் தன் கணவனை கொன்ற தன் அண்ணனான இராவணனை பழிவாங்க சந்தர்பம் தேடி அலைந்த போது ஶ்ரீராமரை கண்டு மையலுற்று அதன்காரணமாக மூக்கையும் காதையும் அறுபட்டவள் இதையே காரணமாக கொண்டு ஶ்ரீராமனின் விருப்பமான சீதாதேவியின் மூலம் இராவணன் அழிவுக்கு வழி கண்டவள்

26. தசரதர் (Dhasaradha)

இஷ்வாகு குல மன்னன் அயோத்தியின் அரசன் எட்டுதிசை மட்டுமல்ல வானம் பூமி என மேலும் கீழுமாக பத்து திசைகளிலும் தேரை லாவகமாக ஓட்டும் திறமைசாலி அதனால் தசரதன் என்று அழைக்கப்பட்டார் 

தனக்கு பின் அயோத்தியை ஆள இஷ்வாகு குலத்தில் ஓர் ஆண்பிள்ளை இல்லையே என எண்ணி புத்ர காம இஷ்டி யாகம் செய்து அதன்மூலம் பகவான் ஶ்ரீமன் நாராயணனையே ஶ்ரீராமனாக தன் மகனாக பெற்றவர்

மனைவியான கையேகிக்கு தவறான வரம் தந்ததால் புத்ரசோகத்தில் உயிரிழந்தவர்

ஶ்ரீராம இலக்குண பரத சத்ருகன் பாசமிகு ஆகியோரின் தந்தை 

27. ததிமுகன் (Tathimugan)

வானரவீரன் வானர அரசர்களான வாலி சுக்ரீவன் ஆகியோரின் சித்தப்பா அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர்

28. தாடகை (Thaadagai)

விஸ்வமித்ரர் தவம் செய்து வந்த காட்டில் அவர்களுக்கு தொல்லை கொடுத்தபடியே வசித்த அரக்கி பாலபருவத்திலேயே இலக்குமணன் உதவியால் ராமனால் முதன் முதலாக கொல்லபட்டவள் பெண் என்றாலும் மூர்க்க குணம் உள்ளவள் எனவே கொல்வதில் தவறில்லை என முனிவர் கூறியதால் இவளை ஶ்ரீராமர் அழித்தார்

29. தாரை (Thaarai)

வானர வீரன் கிஸ்கிந்தை மன்னன் வாலியின் மனைவி வானரசூரன் அங்கதனின் தாய்
அறிவில் சிறந்தவள் வானரராணி புராண பஞ்ச பதிவிரதைகளில் ஒருவர் 

30. தான்யமாலினி (Dhanya Malini)

இந்த பெயரை பலர் கேட்டு இரார் இவள் நல்ல உள்ளம் கொண்டவள் இலங்கை வேந்தன் இராவணனின் இளைய மனைவி 

31. திரிசடை (Thirisada)

இலங்கையில் இராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமான அரக்கி தாயாரை அசோக வனத்தில்  இராவணன் சிறை வைத்தபோது காவலுக்கு இருந்தவள் இலங்கையில் வசித்த அரக்கிகளில் நல்லவள் தாயார் சீதைக்கு ஶ்ரீராமன் உம்மை மீட்டு போக வருவான் என நம்பிக்கையை தினமும்  ஊட்டியவள் 

32. திரிசிரஸ் (Thirisirus)

இலங்கை வேந்தன் இராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி நல்ல வீரன்

33. நளன் (Nalan)

வானர வீரன் அதிலும் பொறியியல் அறிந்த சிறந்த வானரவீரன் காரணம் தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகன் இராம இராவண யுத்தத்துக்கு கடலின்மீது இலங்கைக்கு இவன் மேற்பார்வையிலேயே சேதுபாலம் கட்டபட்டது

34. நாரதர் (Naradha)

ஶ்ரீமன் நாராயணனின் நாபியில் உதித்த பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர் பிரம்ம புத்ரர் மகாஞானி இசையில் வல்லவர் அதேநேரம் தேவலோகம் பூலோகம் பாதாள லோகம் என ஈரேழு லோகத்திலும் சஞ்சரித்தபடியே இருந்து கொண்டு நல்லவைகளுக்காக பல இடங்களில் கலகம் ஏற்றபடுத்தும் முனிவர் 

35. நிகும்பன் (Nigumbhan)

இராமாயணத்தில் இராவணன் தாயாரான சீதையை சிறைபிடித்தது தவறு அதனால் அரக்கவம்சமே அழியபோகிறது என இராவணனிடம் எச்சரித்த போதும் செஞ்சோற்று கடனுக்காக இராவணனுடன் இருந்து உயிர் துறந்த கும்பகர்ணனின் மகன் கும்பனின் சகோதரன் இராமராவண யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவன்

36. நீலன் (Neelan)

வானர வீரன் சுக்ரீவனின் வானர படையில் முக்கிய நபர் வானரவீரன் நளனின் நண்பன் வானர சேனாதிபதிகளில் ஒருவன் இவன் அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் இராமாயண சேதுபாலம் அமைய நளனுடன் துனைபுரிந்தவன்

37. பரசுராமர் (Parasurama)

பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம் இவர் ஜமத்கனியி என்ற மகானின் தந்தை இராமாயண காலத்தில் ஜனக மன்னர் சபையில் சிவதனுசை முறித்த ஶ்ரீராமனுடன் விஷ்ணுதனுசை நாணேற்ற கேட்டு போரிட்டவர் ஶ்ரீராமரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் 

38. பரத்வாஜர் (Baradhvaja)

இராமாயண காலத்தில் வடக்கே பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்து தவமியற்றி வந்த முனிவர் இவரின் வேண்டுகோளை ஏற்று ஶ்ரீராமன் தாயாருடன் படைகளுடன் இராவணனை வென்று அயோத்தி திரும்பும் முன் இவரின் ஆஸ்ரமத்தில் ஓரிரவு தங்கி உணவருந்தி சென்றார்கள்

39. பரதன் (Bharada)

பகவான் ஶ்ரீராமனின் தம்பி அயோத்தி மன்னன் தசரதன் மற்றும் அவரின் அபிமான மனைவி கைகேயியின் மகன் பகவான் ராமனின் அபிமான தம்பி 

ஶ்ரீராமனின்  நாட்டை தான் ஆள தாயார் வரம் கேட்டபோது தாய் மாமன் இல்லத்தில் இருந்ததால் திரும்பி வந்ததும் தாயரிடம்  அவளின் செயலை கண்டித்தத்துடன் அவளை முழுவதுமாக வெறுத்து பகவான் ஶ்ரீராமனை தேடி கானகம் சென்று தாயாரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தந்தையின் இழப்பையும் கூறி அறத்தின்படி மூத்தவரான ஶ்ரீராமனை அயோத்தியை் அரசாள வரும்படி அழைத்தான்

ஶ்ரீராமன் இவனின் இச்செயலுக்காக மெச்சி தந்தைக்கான இறுதி காரியங்களை செய்து தான் தந்தை கட்டளைபடி 14ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும்வரை பரதனையே அரசாளும்படி கூறி இறுதியில் பரதனின் அன்பான வேண்டுகோளுக்காக தன் பாதரட்சையை தந்தான்

இராமனின் பாதுகையே பிரதானமாக கொண்டு அயோத்தி கூட செல்லாமல் நந்திபுரம் என்ற இடத்திலேயே பதினான்கு ஆண்டுகள் இராமனையே எதிர்பார்த்து அரசாண்டான் பரதன்

கம்பனால் ஆயிரம் ஶ்ரீராமருக்கு சமமானவன் என பாராட்டபெற்றவர்

லக்குமணனே பொறாமைபடும் அளவுக்கு ஶ்ரீராமன் மீது பக்திகொண்டவன் பகவத் கைங்கர்யத்துக்கு உதாரணம் ஆனவன் 

சிறந்த வில்லாளி வீரன்

40. மந்தரை (Mandra)

தசரதனின் மனைவி கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த கைகேயின் சேடிபெண் அதாவது வேலைக்காரி 

இவளை கூனி என்றும் அழைப்பர்

இராமாயண காவியத்தில் ஶ்ரீராமர் பட்டத்தை துறந்து கானகம் செல்லவும் அதன் மூலம் இராமாயண வைபவம் நடக்கவும் முக்கிய காரணமானவள் அத்தோடு தசரதன் மறைவுக்கும் காரணமானவள் 

41. மதங்கர் (Madhangar)

இராமாயண காலத்தில் வாழ்ந்த சிறந்த முனிவர் இவரின் சிஷ்யையான சபரிக்கு ஶ்ரீராமரின் தர்சனம் கிட்டும் என கூறி ஆசிவழங்கியவர் அதன்படியே சபரி ஶ்ரீராமனின் தர்சனம் பெற்று மோட்சம் அடைந்தாள்

42. மண்டோதரி (Mandodhari)

தேவலோக சிற்பியான மயனின் மகள் இலங்கை வேந்தன் ராவணனின் பட்டத்தரசி சிறந்த வீரனான இந்திரஜித்தின் தாய் 

இராவணனிடம் சீதையை ஶ்ரீராமனிடம் விட்டுவிடும்படி கூறியவள் இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் ஒருவர்

43. மாரீசன் & சுபாகு (Mareesan & Subagu)

இராமாயணத்தில் இராமனால் அழிக்கப்பட்ட பெண் அரக்கியான தாடகையின் மகன்கள் தாடகையை வதம் செய்தபோதே சுபாகுவும் ராமனால் வதம் செய்யப்பட்டான் 

மாரீசன் அப்போது தப்பி ஓடி ஶ்ரீராமன் தாயாருடன் கானகத்தில் இருந்தபோது இராவணனின் தூண்டுதலால் மாய பொன்மானாக வந்து சீதையின் ஆசையை தூண்டி பகவானும் தாயாரும் பிரிய காரணமாகி ஶ்ரீராமனால் கொல்லபட்டவன் 
ஒருவித்த்தில் இராவணன் அழிவுக்கும் காரணமானவன்   

44. மால்யவான் (Malyavaan)

இவர் இலங்கை வேந்தன் ராவணனின் தாய்வழிப்பாட்டன் இவரும் சூர்ப்பனகை மூலம் இராவணன் அழிவுக்கு காரணமானவர்

இவர் எங்கள் ஊரான மன்னார்கோவில் வேத நாராயணன் அருளுக்கு பாத்ரமானவர் இன்றும் இவரது சுதை உருவம் ஊரில் வேதநாராயணரை வணங்கியபடி இருப்பதை பிரதான கோபுரத்தின் மேல் நிலையில் உள்ள சயனகோல சன்னதியில் காணலாம்

45. மாதலி (Madhali)

இவர் தேவலோக தலைவன் இந்திரனின் தேரோட்டி இந்திரஜித்துடன் போரிடும் போது இந்திரனின் தேரை ஓட்டியவர்

46. யுதாஜித் (Udhajith)

கேகய நாட்டு இளவரசியும் தசரத மன்னனின் மனைவியுமான கைகேயியின் தம்பி இவர்தான் பரதனின் தாய்மாமன் கைகேகி வரம் கேட்டபோது பரத சத்ருகணர்கள் இவரது ஊரில் இருந்தனர்

47. ராவணன் (Ravana)

இராவணன் மிச்ரவா என்பரின் மகன் 

ஶ்ரீபதியான ஶ்ரீமன் நாராயணனின் வைகுண்டத்தில் வாயில் காப்போனாக இருந்த ஜெய விஜயன்கள் சனகாதி முனிவர் சாபத்தால் அரக்கனாகி வந்தவர்கள் அதில் இராமாவதாரகலத்தில் ஜெயனும் விஜயனும் இராவணன் கும்பகரனண் என அவதரித்தனர்

இராவணன் சிறந்த சிவ பக்தன் நல்ல இசை ஞானம் கொண்டவன் வீணைவாசிப்பதில் வல்லவன் பத்து தலைகளை கொண்டவன் தன் தவத்தால் இசையால் கைலாய மலையையே அசைத்தவன்  

இலங்கையை இந்திரனின் இந்திரபுரிக்கு சம்மாக நிர்மானித்து தன் வம்சத்துடன் அரக்கர்களின் தலைவனாக ஆட்சி புரிந்து வந்தவன்

தன் தவ்வலிமையல் மூன்று லோகத்தையும் வென்றவன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் கிரஹங்களையும் அடிமையாக்கி தேவர்களை முனிவர்களை தவம் செய்பவர்களை துன்புறுத்தி இன்பம் கண்டவன்

பெண்சபலம் கொண்டவன் அதனாலேயே பெற்ற சாப்தின் பயனாய் தங்கையான சூர்ப்பனகை துர் போதனையால் கானகத்தில் இருந்த ஶ்ரீராமனின் மனையாளான தாயார் சீதாதேவியை அவளின் விருப்பத்துக்கு மாறாக ஶ்ரீராமன் இலக்குமணர் இல்லாதபோது சிறை எடுத்து தன் வம்சமே அழிய காரணமானவன் 

இராவணன் குபேரனின் தம்பி 
புலஸ்திய முனிவரின் பேரன்

பகவான் ஶ்ரீராமனாக அவதாரம் எடுக்க காரணமானவன்

48. ஶ்ரீராமன் (Sri Rama)

ஶ்ரீமன் நாராயணனின் ஏழாவது அவதாரம் தசரதருக்கும் கோசல்யாதேவிக்கும் புத்ர காம இஷ்டி யாகத்தில் பாயச ரூபத்தில் வந்து கௌசல்யாவை ஸ்வீகரிக்க வைத்து அவதாரம் செய்தவன்  

நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் கடக ராசியில் தேவர்கள் முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இராவணாதி அசுரர்களை அழிக்க நல்ல நவமி திதியில் இலக்குமணன் பரத சதருகணன் என்ற தம்பிகளுடன் தசரதருக்கு மூத்த மகனாக அவதரித்தார் 

நம் இராமாயண காதையின் கதாநாயகன் 

49. ரிஷ்யசிருங்கர் (Rishyasirungar)

இவர் சிறந்தமுனிவர் யாகங்கள் ஹோமங்கள் செய்வதில் வல்லவர் 

ஶ்ரீராமருக்கு முன்பாக அயோத்தி மன்னரான தசரதருக்கு மகளாக பிறந்த ஷாந்தா என்பவரை மணந்து கொண்டவர் 

தசரதரின் மாப்பிள்ளை 

இவர்தான் தசரதருக்கு தன் மைத்துனர்களான ஶ்ரீராம லக்குமண பரத சத்ருக்கனர்கள் அவதரிக்க காரணமான புத்திரகாமேஷ்டி யாகத்தை அயோத்தியில் செய்த முனிவர்

50. ருமை (Rumai)

வானரசூரனான சுக்ரீவனின் மனைவி இவளை தான் சுக்ரீவன் அண்ணன் வாலி கவர்ந்து கொண்டு சுக்ரீவனை விரட்ட அதன்பயனாய் பின்னர் சுக்ரீவன் ஶ்ரீராமரால் வாலி கொல்ல வைத்து அவர்களின் வானர சேனை ஶ்ரீராம ராவண யுத்தத்துக்கு உதவ காரணமானவள்

51. லங்காதேவி (Lanka devi)

இலங்கையை குபேரபட்டணமாக நிர்மானித்த இராவணன் அந்த பட்டணத்தின் காவலாளியாக நியமித்த காவல் தெய்வம் இந்த பெண் 

இவளை மீறி எதிரிகள் யாருமே இலங்கைக்குள் நுழைய முடியாது ஹனுமன் கூட பெண்ணான இவளை ஜெயித்த பின்பே இலங்கைக்குள் நுழைய முடிந்தது

இவள் என்று அழிகிறாளோ அன்று முதல் இலங்கை அழிவு ஆரம்பமாகும் என்பது உண்மையாயிற்று  

52. வசிஷ்டர் (Vashishtar)

இஷ்வாகு குல அரசனான தசரதனின் குலகுரு பெண்களில் சிறந்த அருந்ததியின் கணவர் இவரது யோசனையால் தசரதர் புத்ரகாம இஷ்டி யாகம் செய்தார் பின்னாளில் ஶ்ரீராமருக்கும் அவரது மைந்தர்களுக்கும் அரசனாக பட்டாபிஷேகம் செய்துவைத்தவர்

53. தசரதர் அவையில் இருந்த மேலும் சில குரு பெயர்கள் 

சமார்க்கண்டேயர் மவுத்கல்யர் வாமதேவர் காஷ்யபர் கார்த்தியாயனர் கவுதமர் ஜாபாலி என்போர்

54. வருணன் (சமுத்திரராஜன்) 

இவர்தான் கடலரசன் இராமர் அழைத்தும் வராமல் பின்னர் ராம்பானத்துக்கு பயந்து தன்மீது அணை கட்ட ஶ்ரீராம சேனையை அனுமதித்தவன்

55. வால்மீகி (Vaalmiki)

இராமயணத்தை வடமொழியான சம்ஸ்க்ருத்த்தில் எழுதியவர் 
ரத்னாகரன் என்பது இயற்பெயர் 
திருடனாக கொள்ளைக்காரனாக இருந்தவர்
நாரதரின் கேள்வியால் மனம் திருந்தி மரா மரா என பல ஆண்டுகளாக மனம்ஒன்றி தியானிக்க தியானிக்க அதுவே ராம ராம என்ற மந்திரமாக மாற 

தன் உடலைசுற்றி கரையான் புற்று ஏற்பட்டும் கவனியாமல் தவம் செய்தமையால் வால்மீகி ( கரையான் புற்று) என்ற பெயர் பெற்றார்  

அவர் செய்த ராமநாம தவத்தின் பயனால் ஶ்ரீராம சரிதமே அவர் முன் நடக்க அதை அப்படியே கூற கூற சிவனின் மைந்தரான பிள்ளையார் இராமயணத்தை எழுதியதாக கூற்று

ஶ்ரீராம பட்டாபிஷேகம்  முடிந்து மீண்டும் ஶ்ரீராமனால் கானகம் அனுப்பபட்ட தாயார்  சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்

இவரது ஆஸ்ரமத்திலேயே ஶ்ரீராம சீதா புத்ரர்களாக லவகுசர் பிறந்தனர் 

பின்னாளில் ஶ்ரீராமனின் புத்ரர்களுக்கு அதாவது லவகுசனுக்கு தன் இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை போதித்தவர் அதை ஶ்ரீராம சபையில் லவகுசர்கள் பாடலாக பாடிகாட்டி ஶ்ரீராமர் மற்றும் சபையோர் ஆசிகளை பெற்றனர் 

இன்று வழகத்தில் உள்ள இராமாயணம்  அனைத்துக்கும் முன்னோடி இவரது வால்மீகி இராமாயணமே அதுவே ராமகாதைக்கு உத்தாரணம் 

ஶ்ரீராமரால் கேட்டு ஆனந்திகப்பட்ட இராமாயணம் என்ற பெயரும் பெற்றது இவரது இராமாயணம் 

56. வாலி (Vaali)

வானர வீரன் இவன் இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் மகாபலசாலி மூவுலகையும் அடக்கிய இராவணனை தன் வாலீல் கட்டி போட்டவன் 

இவன் எதிரில் போர் புரிய எவர் வந்தாலும் அவர்களின் பலத்தில் பாதி இவனை வந்தடையும் என்ற வரம் பெற்று இருந்ததால் யாராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் பெற்றவன்

ஶ்ரீராமன் கூட  சுக்ரீவனுக்காக மறைந்து இருந்தே அம்பெய்தி இவனை கொன்றார் இறக்கும் போது கூட ஶ்ரீராம நாமாவை உச்சரித்தபடியே உயிர் துறந்து வைகுந்தம் ஏகினான்

57. விஸ்வாமித்ரர் (Vishvamithra)

இவர் சிறந்த முனிவர் அரசனாக இருந்து கடும் தவமிருந்து பிரம்ம ரிஷி ஆனவர் அதுவும் இஷ்வாகு குல ஆஸ்தான குலகுரு வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி என அழைக்கப்பட்டவர்  

ஶ்ரீராம லக்குமணர்கள் பால்ய வயசாக இருந்தபோதே தசரதன் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஶ்ரீராம லக்குமணர்களை தன் யாகத்தை காப்பாற்ற அனுப்ப கேட்டு இறுதியில் தசரதன் வசிஷ்டர் சம்மதத்துடன் அவர்களை அழைத்து கொண்டு சென்று ஶ்ரீராம லக்குமணர்களுன் பிறப்பின் ரகசியத்தை ஆரம்பித்து வைத்து இராமகாதையை இளமையிலேயே  துவக்கியவர்

ஶ்ரீராமனுக்கும் லக்குமணனுக்கும் பலபல அஸ்திரவித்தை போதித்த குரு

தாயாரான சீதா ஶ்ரீபதியான ஶ்ரீராமன் திருமணத்திற்கு முக்கிய காரணமானவர் 

58. விராதன் (Viradhan)

இராமாயண காலத்தில் தண்டகவனத்தில் வசித்த அரக்கன் கந்தர்வன் இருந்து சாபம் பெற்றவன் ஶ்ரீராமனால் அந்த சாபம் தீர்ந்தவன் 

59. விபீஷணன் (Vibeeshana)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி சிறந்த தர்ம சிந்தனை கொண்டவன் தூதனாக வந்த ஹனுமனை கொல்வதை தவறு என சபையில் உறைத்தவன் சீதாதேவியை மீண்டும் ஶ்ரீராமரிடமே தந்துவிட யோசனை சொன்னவன் அதனால் இராவணனால் விரட்டப்பட்டு ஶ்ரீராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்

இராம இராவண யுத்தத்தில் இராவணனின் உயிர் ஸ்தானத்தை ஶ்ரீராமனுக்கு் உணர்த்தி இராவண வதம் நடக்க காரணமானவன்

ஶ்ரீராமனால் இலங்கைக்கு அரசனாக மகுடம் சூட்டபட்டவன்

இன்றய பூலோக வைகுண்டமாக நாம் போற்றும் ஶ்ரீரங்கம் உருவாக காரணமானவன் 

60. வினதன் (Vinadhan)

சிறந்த வானர வீரன் இராமகாவியத்தில் தாயார் சீதையை தேடி ஹனுமன் தென் திசை சென்றது போல்  கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன் பின்னாளில் இராம இராவண யுத்தத்திலும் பங்கேற்றவன்

61. ஜடாயு (Jadayu)

இவர் கழுகரசன் சம்பாதியின் தம்பி ஶ்ரீராமரின் தந்தையான தசரதனின் தோழன் 

கானகத்தில் இராவணன் தாயாரை சிறைபிடித்தபோது முதன்முதலில் இராவணனுடன் தாயார் சீதைக்காக போராடியவர் இதனால் தன் இறகுகளையும் இழந்தோடு தன் உயிர்நீத்தவர் ஆனால் உயிர்துறக்கும் முன் ஶ்ரீராமரிடம் இராவணனை பற்றிய விபரம்  கூறியவர் 

ஶ்ரீராமராலேயே அந்திம கைங்கர்யம் பெற்ற பாக்யசாலி

62. ஜனகர் (Janagar)

இவர் சிறந்த ராஜரிஷி துளிகூட உலக ஆசையின்றி ராஜாவாக மிதிலாபுரியை எந்த குறையும் இன்றி ஆண்டுவந்வர் இவரின் அந்த வாழ்க்கைக்கு பரிசாக லோக மாதாவான தாயாருக்கே தந்தையாகும் பாக்யம் பெற்றவர் அதனால் பின்னாளில் பகவானான ஶ்ரீராமருக்கும் அவரின் நிழலான இலக்குமணனுக்கும் மாமனாரானவர்

ஆம் இவர் தாயார் சீதாதேவி மற்றும்  இலக்குமணன் மனைவி ஊர்மிளாவின் தந்தை 

63. ஊர்மிளா (Oormila)

பகவத் கைங்கர்யமே உத்தாரணம் என காட்டி அதற்காக பெற்ற தாய் தந்தையரையே துச்சம் என உதறி பகவத் கைங்கர்யத்துக்காக கானகம் சென்ற ஶ்ரீராமனின் நிழலான ஶ்ரீலட்சுமணனின் மனைவி

எங்கே தன் கணவன் கானகத்தில் தன் நினைவால் அவரதுஶ்ரீராம கைங்கர்யத்தில் பங்கம் ஏற்படுத்தி கொண்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தன்னையே இலக்குமணர் வெறுக்கும்படியாக செய்தவள் 

இறுதியில் தாயார் மூலமாக இலக்குமணன் அவளது தியாகத்தை பதிபக்தியை அதன் உண்மையை உணர்ந்தான்

ஶ்ரீராம கைங்கர்யத்துக்காக தன்னையே தியாகம் செய்தவள்

இவளும் தாயார் சீதாதேவியின் சகோதரியே

64. ஜாம்பவான் (Jambavan)

இராமாயணத்தில் வரும் அழகிய பாத்ரம் கானகத்தில் வாழும் கரடி வேந்தர் ஹனுமனுக்கு அவரின் பிறப்பின் ரகசியத்தை உணர்தியவர் ஶ்ரீராமரின் அன்பை பெற்றவர் இவர் பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் கிருஷ்ணாவதாரத்திலும் இருந்தவர்

65. அனுமான் (Hanuman)

இராமாயண காவியத்தில் ஶ்ரீராமரும் சீதாதேவியும் எவ்வளவு முக்கிய பாத்திரமோ அதற்க்கு சற்றும் குறைவில்லாத பாத்திரம் ஶ்ரீஹனுமத்  பாத்ரம்

இவர் அஞ்சனை மற்றும் வானர சூரன் ஶ்ரீகேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன் என்பதால் அஅவரை ஆஞ்சநேயன் வாயுபுத்ரன் மாருதி எனவும்  வேறு பெயர் கொண்டும் அழைப்பர் 

ஶ்ரீராமனின் தூதனாக தென்திசை சென்று ஶ்ரீராம நாமாவை உச்சாடனமாக கொண்டு சமுத்திரத்தை தாண்டி தாயாரான சீதாதேவியை இலங்கையில் அசோகவனத்தில் கண்டு பேசி அவரது உயிரை காப்பாற்றியவர் 

இலங்கையை இராவணன் தன் வாலில் வைத்த தீயால் எரித்து இராவணனுக்கு முதன்முதலில் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியவர் 

ஶ்ரீராம ராவண யுத்தத்தில் சஞ்சீவிமலையை கொணர்ந்து ஶ்ரீராம லக்குமணர்கள் உயிரை மீட்டவர்

ஶ்ரீராம ராவண யுத்தம் முடிந்து அயோத்திக்கு ஶ்ரீராமர் வர தாமதமான வேளையில் மீண்டும் ஶ்ரீராம தூதனாக சென்று பரதன் உயிரை காத்தவர்

ஶ்ரீராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தியவர் அதையே தன் மூச்சாக கொண்டவர் ஶ்ரீராமதூதன் என்ற பெயர் பெற்றவர் 

இவரது இயற்பெயரான சுந்தரன் என்ற பெயரை நினைவு கொள்ளும் விதமாக இவரது இராமாயண லீலைகளை இராமாயணத்தில் சுந்தரகாண்டம் என தன் பகுதியாகவே வால்மீகி கூறியுள்ளனர் 

ஶ்ரீராம நாமாவுக்கு முற்றிலும் உரிமையானவர் ஶ்ரீராமா நாமா உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர் சிரஞ்சீவியானவர்

66. ஸ்வயம்பிரபை (Svyambrabai)

இந்த பெண்மணி குகையில் வாழ்ந்த தபஸ்வினி இவளின் கைங்கர்யம் ஶ்ரீராமரின் வானரசேனையான குரங்குப் படையினருக்கு உணவிட்டதே இதனால் ஶ்ரீராமரின் கருனையை பெற்றவள்

67. மாண்டவி (Mandavi)

பகவத் கைங்கர்யமே உத்தாரணம் என காட்டி அவரது திருவடியையே சரணாக கொண்ட ஆயிரம் ஶ்ரீராமனுக்கு ஒப்பானவர் என வாழ்த்த பெற்ற கைகேயி தசரதன் புதல்வர் ஶ்ரீபரதனின் மனைவி 

தாயார் சீதாதேவியின் சகோதரி

சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி குஜத்வசனின் மகள்

68. சுருதகீர்த்தி (Surudhakeerthi)

பகவத் கைங்எர்யத்தை விடவும் அவனது அடியார்களான அவனின் பாகவத கைங்கர்யமே உத்தாரணம் என வாழ்ந்து காட்டியவரும் பரதனின் திருவடியே சரணம் என வாழ்ந்தவரும் ஶ்ரீராமனின் கடைகுட்டி தம்பியுமான ஶ்ரீசத்ருக்கனனின் மனைவி 

ஒரு வித்த்தில் தாயார் சீதாதேவியின் சகோதரி 

சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி குஜத்வசனின் மகள்  

69. கம்பர் (Kambar)

சோழநாட்டு கவிஞன் வடமொழிக்கு எப்படி ஶ்ரீவால்மீகி எழுதிய இராமாயணம் மூலமோ அதுபோல்  தமிழில் இவர் எழுதிய இராமாயணம் மூலம் என்ற சிறப்புக்கு ஒப்ப தமிழில் இராமாயண காவியத்தை எழுதியவர்

இவர் எழுதிய அந்த இராமாயணத்தைத்தான் கம்பராமாயணம் என்று இன்றும் தமிழர்கள் போற்றுகின்றனர்

இவரது ராமாயணத்தை ஶ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள பகவான் ஶ்ரீமேட்டழகிய சிங்கர் என்ற ந்ருசிம்மனே அங்கிகரித்ததாக வரலாறு கூறுகிறது

பகவத் நாமாவை அதுவும் நன்மையும் செல்வமும் நாளும் நல்கும் பல ஜன்மத்தையும் பல ஜென்ம பாவங்களையும் போக்கும் ஶ்ரீராம நாமத்துக்கு தொடர்பான சில பாத்திரங்களை நினைவு கொண்டோம் அல்லவா இதுவும் நமக்கு  ராமாயணத்தை படித்த பலனை தரும், என்பதில் சந்தேகமே இல்லை

ஜெய் ஶ்ரீராம்!

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...