Tuesday, February 14, 2023

சிவராத்திரி #மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி🌸ராத்திரி என்பது இருள் நிறைந்தது,இது தினம் ஏற்படும் சாதாரண காலம், இதில் உயிர்கள் நடமாட்டமில்லாது எங்கும் அமைதி நிலவும்

#சிவராத்திரி #மகாசிவராத்திரி #மஹாசிவராத்திரி
🌸ராத்திரி என்பது இருள் நிறைந்தது,இது தினம் ஏற்படும் சாதாரண காலம், இதில் உயிர்கள் நடமாட்டமில்லாது எங்கும் அமைதி நிலவும். இதே போன்று ஊழிக் காலத்தில் பஞ்ச பூதங்களும், உடலும், உலக இன்பங்களும் ஒன்றுமில்லாது செயலற்று இருக்கும். அப்போது இந்த பேரிருளில் தனித்து இருப்பது சிவன் ஒன்றேயாகும். இவ்வூழி காலத்தை சர்வசம்மார காலம், பிரளய காலம் என்பர்.  இவ் ஊழிக்கால இரவே சிவனுக்கு உரிய ராத்திரியான "சிவராத்திரி" ஆகும்.

🌸ஒடுங்கிய உலகத்தை மீள தோற்றுவிக்க லிங்க வடிவமாய் நின்று சக்தியை தோற்றுவிக்க அவள் வணங்க லிங்கோத்பவராக காட்சி தந்து சிருஷிடியை ஆரம்பிப்பார். இதனாலேயே மாசி மாத சதுர்த்தி திசி இரவும், மூன்றாம் சாம பூஜையும் எடுத்துக் காட்டுகின்றன.

🌸இச் சிவராத்திரியில் உபவாசம் இருந்து இரவு முழுவதும் தூக்கமின்றி பூஜை, வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.இவ்விரவில் நான்கு சாம பூஜை செய்யப்படும். முதல் சாமத்தில் பாலும், இரண்டாவதில் தயிரும், மூன்றில் நெய்யும் நான்கில் தேனாலும் அபிஷேகம் செய்வர்.

🌸நான்கு சாம பூஜைகளும் வில்வத்தால் அர்ச்சிப்பது மேலான பலனை கொடுக்கும் இக்காலங்களில் விநாயகருக்கும் சண்டேஸ்வருக்கும் பூஜை செய்வர். சிவாலய தரிசனம் செய்வதோடு பஞ்சாட்சர மந்திரம், சிவபுராணம் படித்தல் கேட்டல் என இரவை கழித்தல் வேண்டும்.

🌸உபவாசம் இருக்க இயலாதோர் நீரேனும் பாலேனும் உண்டு கொள்ளலாம். இரவு முழுதும் இந்நாளில் நித்திரை விழிக்க முடியாதவர் 14 வது நாழிகையில் வரும் லிங்கோத்பவர் காலம் வரையிலாவது  தூங்காமல் இருக்கலாம்.இக் காலத்தில் செய்யும் தரிசனமும் பூசையும் பெரும் பலன் நிறைந்தது.

🌸உபவாசம் கொண்டோர் அடுத்த நாள் சூரியோதய ஆறு நாழிகைக்குள் சிவனடியாரோடு உணவு உட்கொள்ள வேண்டும், உண்டபின் பகலில் தூக்கம் கொள்ளக் கூடாது.

1. முதல் சாமம் தாமரை, அலரி மலர்  வில்வ இலை 
2. இரண்டாவது சாமம் செண்பகம் தாமரை மலர் மற்றும்  துளசி, வில்வம் இலை 
3. மூன்றாவது சமம் செங்கழுநீர், ஆத்தி  பிச்சி மலர் மற்றும்  முட்கிளுவை வில்வம் /அருகு இலை 
4. நான்காவது சாமம் நந்தியாவர்த்தம் மலர் , விளா இலை 

🌸 ஒவ்வொரு சாமத்திற்கான பழங்கள் 
1. முதலாவது சாமம் வில்வம் தூபம் சாம்பிராணி ஆவன.
2. இரண்டாவது சாமம் பழம் பலா தூபம் சந்தனம் ஆவன.
3. மூன்றாவது சாமம் மாதுளம் தூபம் குங்குலியம் ஆவன.
4.நான்காவது சாமம்  பல்வகை பழங்கள் தூபம் கற்பூரம் ஆவன.

🌸 இவ்வகை முறையில் பூஜை செய்து பாவ நீங்கி  எல்லா நன் பலன்களையும் பெற சிவராத்திரியை கொண்டாடிடுவோம் 

#சிவராத்திரி2023 #மகாசிவராத்திரி2023 #மஹாசிவராத்திரி2023 #babumano #temple #பாபுமனோ #காஞ்சிபாபுமனோ #காஞ்சிபுரம் #கோயில்கள்  #kanchibabumano

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...