சந்திர தரிசனம் .!!!
மூன்றாம் பிறை உருவான கதை!!!
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார்.
தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர்.
உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .
தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.
இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
செல்வம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!
அமாவாசை கடந்த மூன்றாவது தினம் சந்திரபிறை தரிசனம் காணவேண்டும்,3ம் பிறை தரிசனம் கண்டால் செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்,
பிறை தரிசன நாளை தினசரி காலாண்டரிலும். பஞ்சாங்கத்திலும் கண்டறியலாம்,சந்திர தரிசனம் சிவன்,பார்வதி என பலரும் குறிப்பிடுவது உண்டு, எனினும் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆவார்கள்,
சிவனின் தலையில் புனித கங்கைக்கு அருகில் இருப்பவர்கள் செல்வ சந்தோஷ கடவுளான இவர்களே ஆவார்கள்,
சந்திரனுக்குரியவரும் ஸ்ரீ ஹரியே ஆவார், மாலை வேலைக்கும்,மேற்க்குக்குரிய சனிஷ்வரருக்கும் உரியவரும்
ஸ்ரீ ஹரியே ஆவார்,
செல்வத்துக்குரியவரும் மனமகிழ்ச்சிக்கு உரியவரும் காக்கும் இறைவனான ஸ்ரீ விஷ்ணு தம்பதியே ஆவார் .
காலை வேளை பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்.
பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும்,
இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள்,
பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள்,
தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,
தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.
சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும்,
அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார்,
சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார்,
இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்...!
No comments:
Post a Comment